Tuesday, December 11, 2012

அணு உலையை இழுத்து மூடு! மாபெரும் ஆர்பாட்டம்!

கூடங்குளம் அணுஉலையை மூட சொல்லி இன்று மதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 
கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, போலீஸ் முற்றுகையைக் கைவிட்டு, பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இப்போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, பெண்கள் முன்னணி, தமிழ்நாடு மக்கள் கட்சிப், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவை, சேவ் தமிழ் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், மா.பெ.பொ.க, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், அமைப்புத் தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாயினர்

அணு உலையை இழுத்து மூடச்சொல்லி மீனவர்கள் போராட்டம்:
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடல் வழியாக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி கூட்டப்புளி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை 11 மணியளவில் சுமார் 500 படகுகளில் சென்று அணு உலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். கூடங்குளம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். போலீஸ் படையை இப்பகுதியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜெசுராஜ், முகிலன், மில்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிந்திக்கவும்: கூடன் குளம் அணு உலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை கண்டும் காணாதது போல் நடிக்கும் சர்வாதிகாரி ஜெயாவும், மண்ணு மோகன் சிங்கிற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அனைத்து இயக்கங்களும் ஒரே குரலில் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது வரவேற்க தகுந்தது. குறிப்பாக இப்போராட்டத்தில் மீனவர்களின் உயிர் தியாகங்களும் வீரியமான போராட்டமும் மிக முக்கியமானது அணு உலையை இழுத்து மூட மக்கள் இன்னும் வீரியமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு போபால், புகுஷிமா நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

Saturday, December 8, 2012

வால்மார்ட் வேண்டாம்!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் தீர்மானத்தை பாராளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கோரி SDPI கட்சி தர்ணா போராட்டத்தை நடத்தியது.
 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டில் 30 சதவீத சில்லறை வியாபாரிகள் நடுவழியில் நிறுத்தப்படுவார்கள் என்று SDPI (சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா) கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
நாட்டில் சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை அரசு வாபஸ் பெறவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
சிந்திக்கவும்: வால்மார்ட் விசயத்தில் BJP மவுன சாமியார் ஆனது, போலி கம்புனிஸ்ட்களும், கருணாநிதி மற்றும் கட்சிகளும், காங்கரஸின் காலை கட்டியாக பிடித்து கொண்டன. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அபாயகரமானது. இதனால், நமது ஊர்களில் வீதி தோறும் பெட்டிக்கடை வைத்து பிழைக்கும், பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?!

இந்தியாவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தே தீருவேன் என்று அந்நிய அடிமை மன்மோகன் சிங் திட்டங்களை வடிவமைக்கிறார். இவர் படித்த படிப்பும், மேதாவித்தனங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரங்களை அழித்து பணக்காரர்களின் கைகளில் இந்தியாவை கொண்டு ஒப்படைக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.

Tuesday, November 27, 2012

அமெரிக்காவின் அத்துமீறல்: ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு

தெஹ்ரான்:சர்வதேச சட்ட திட்டங்களுக்கு எதிராக நடப்பதாகவும், கடற்பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ஐ.நாவுக்கான ஈரான் தூதர் முகமது கஸாயி கடிதம் எழுதி உள்ளார்.இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்க கடற்படையினர் ஈரான் நாட்டின் வான்பகுதியில் அத்து மீறி நுழைகின்றனர்.

கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புஷ்ஹெர் நகரின் வான்பகுதியில் அக்டோபர் மாதம் 7 முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா நடந்து வருகிறது. இந்நடவடிக்கையினால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படின் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை ஐநா கண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையிலும் ஈரானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

Friday, November 23, 2012

கசாபுக்கு தூக்குதண்டனை சரியா? தவறா?

போபால் விசவாய்வு கசிவில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்ற அமெரிக்கர் அன்டர்சன் சுகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். கசாபுக்கு அவசர அவசரமாக தூக்கு!

மனசாட்சி இல்லாத அரசியல்வாதி: கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவை அழிக்க நினைத்தவன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன். இந்த தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றி இருக்கப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றி இருந்தால் நமது நாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு அது பாடமாக அமையும் என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி உள்ள அரசியல்வாதி: அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மரணத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட24 மணி நேரத்திற்குள் கஸாபை தூக்கிலிட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: ஒரு மனிதனை கொல்வதை பார்த்து மகிழ்கிறேன் என்று ஒரு காந்தியவாதி சொல்கிறார். காந்தி அஹிம்சையை போதித்தவர். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கும் போதும் அகிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் வந்த காந்தியவாதி அன்னா ஹசாரேக்கு ஏன் இந்த கொலைவெறி? இப்படி இவரை பேசத்தூண்டுவது எது? யார்?

பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்க படவேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் இதைப்போல் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை மதக்கலவரங்கள் மூலம் கொன்ற மோடி, அத்வானி போன்றோருக்கு பொது இடத்தில் தூக்கு கொடுக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகொள் விடுப்பாரா? இப்படி இவரை பேச தூண்டாதது எது?

கசாபின் தூக்கை எதிர்த்து கருத்து சொல்ல பெரும்பான்மையான அரசியல்வாதிளுக்கு தைரியம் இல்லை. அப்படி கருத்து சொன்னால் தேசபக்தி என்கிற முகமூடி தரித்த பார்பன ஊடகங்களும், பார்பன அரசியல் ஆதிக்க சக்திகளும், ஹிந்துத்துவாவை உருவாக்கி அதன் தலைமை பீடங்களை அலங்கரிக்கும் அவாள்களும் தங்கள் மீது பாய்வார்கள். இதன் மூலம் தங்களை தேசதுரோகி என்று பட்டம் கெட்டுவர் என்கிற பயமே. இது போன்ற தருணங்களில் தைரியமாக கருத்து சொல்லும் வைகோ போன்றவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அது
கடுகளவு கூட இந்தியாவில் இல்லை.
 *மலர் விழி*

Monday, November 19, 2012

உதவாக்கரை இந்திய ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துப்பாக்கி!

உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக்கி.

தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந்திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார்களா?

இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் நமது காமடி பீஸ் விஜய் சம்மதிப்பாரா?

நீங்கள் ஹீரோக்கள் ஆகவேண்டும், அரசியலில் நுழைய வேண்டும், கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உணமைகளை மறைத்து, வரலாறுகளை திரித்து எடுக்கப்படும் படங்களில் கூச்சம் இன்றி நடிப்பீர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க போறேன் பேர்வழி என்று படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார் வெத்து வெட்டு விஜயகாந்து.

ஆக்சன் கிங் அர்ஜூன் இவர் தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர். இவர் படங்களில் பெரும்பான்மையில் இசுலாமிய தீவிரவாதிகள் வந்துவிடுவார்கள். அதுசரி இந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பற்றி ஒருபடமும் எடுக்கப்படவில்லையே. சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்பு முதல் மலேகன் குடுவேடிப்பு வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இந்திரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் கம்பி எண்ணுகிறார்கள்.

உண்மை இப்படி இருக்க இசுலாமிய தீவிரவாதிகள் குண்டுவைப்பதாக படம் எடுக்க இவர்களை தூண்டுவது எது? இதற்க்கு சூத்தரதாரியாக இருந்து செயல்படுபவர்கள் யார்? நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது தெளிவான இச்சூழலில் இதை மறைக்க சித்தாந்த ரீதியான  ஒரு யுத்தத்தை RSS நடத்தி வருகின்றது. RSSசின் பின்புலத்தில் செயல்படும் சில கலைத்துறையினர் இது போன்ற படங்களை இயக்கி வருகின்றனர்.

எந்த மதத்தினரும், பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடும் எவரும் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தின் ஆணிவேர் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவதும், ஆட்சியாளர்கள் சொந்த மக்களுக்கே அநீதி செய்வதாலுமே ஏற்ப்படுகின்றது. மற்றபடி துப்பாக்கி ஒரு சாதாரண மசாலா துக்கடா படமே. இதற்காக முசுலிம் நண்பர்கள் கலைதுறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது காட்சிகளை நீக்க சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு இலவச விளம்பரமாக அமையும் என்பதே எனது மேலானா கருத்து.

கடந்த முறை ஏழாம் அறிவை கொடுத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த முருகதாஸ் இந்தமுறை துப்பாக்கிக்கு இரையாகி போனார்.

*மலர் விழி*

Friday, November 16, 2012

BJP & RSS ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!

பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி என்றே பலராலும் நம்பப்பட்டு வருகிறது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடி என்ற கருத்து எழுப்பப்படும் பொழுதெல்லாம் அதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக மறுத்தே வந்துள்ளது.
 
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது எங்களுக்கு மரியாதை உண்டு, ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டும் என்று எங்களுக்கு கட்டாயமில்லை, அவர்களும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியினர் பகல் வேஷம் போட்டு வந்தனர்.
 
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் உழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்றதும் அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பொழுது நிதின் கட்கரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தில் அவர் உயர்ஜாதி என்பதால் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில் நிதின் கட்கரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுளை விசாரிக்கும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான குருமூர்த்தியிடம் ஒப்படைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி விவகாரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். எப்படி தலையிட முடியும்? அதுவும் கட்சியின் அகில இந்திய தலைவர் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் இவர்கள் கைகளுக்கு எப்படி போனது?
 

இதில் இருந்து ஒன்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் அரசியல் முகமூடியே!  இதை வெளிப்படியாக காட்டி கொள்ளாத பாரதிய ஜனதா, முஸ்லிம் லீக் போல் நாங்களும் ஒரு கட்சி என்று சொல்லி இந்து மக்களின் ஓட்டை நயவஞ்சகமாக பெற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. பாரதிய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் வேறல்ல! இவைகள் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!.