Tuesday, November 27, 2012

அமெரிக்காவின் அத்துமீறல்: ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு

தெஹ்ரான்:சர்வதேச சட்ட திட்டங்களுக்கு எதிராக நடப்பதாகவும், கடற்பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ஐ.நாவுக்கான ஈரான் தூதர் முகமது கஸாயி கடிதம் எழுதி உள்ளார்.இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்க கடற்படையினர் ஈரான் நாட்டின் வான்பகுதியில் அத்து மீறி நுழைகின்றனர்.

கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புஷ்ஹெர் நகரின் வான்பகுதியில் அக்டோபர் மாதம் 7 முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா நடந்து வருகிறது. இந்நடவடிக்கையினால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படின் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை ஐநா கண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையிலும் ஈரானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

Friday, November 23, 2012

கசாபுக்கு தூக்குதண்டனை சரியா? தவறா?

போபால் விசவாய்வு கசிவில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்ற அமெரிக்கர் அன்டர்சன் சுகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். கசாபுக்கு அவசர அவசரமாக தூக்கு!

மனசாட்சி இல்லாத அரசியல்வாதி: கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவை அழிக்க நினைத்தவன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன். இந்த தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றி இருக்கப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றி இருந்தால் நமது நாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு அது பாடமாக அமையும் என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி உள்ள அரசியல்வாதி: அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மரணத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட24 மணி நேரத்திற்குள் கஸாபை தூக்கிலிட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: ஒரு மனிதனை கொல்வதை பார்த்து மகிழ்கிறேன் என்று ஒரு காந்தியவாதி சொல்கிறார். காந்தி அஹிம்சையை போதித்தவர். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கும் போதும் அகிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் வந்த காந்தியவாதி அன்னா ஹசாரேக்கு ஏன் இந்த கொலைவெறி? இப்படி இவரை பேசத்தூண்டுவது எது? யார்?

பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்க படவேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் இதைப்போல் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை மதக்கலவரங்கள் மூலம் கொன்ற மோடி, அத்வானி போன்றோருக்கு பொது இடத்தில் தூக்கு கொடுக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகொள் விடுப்பாரா? இப்படி இவரை பேச தூண்டாதது எது?

கசாபின் தூக்கை எதிர்த்து கருத்து சொல்ல பெரும்பான்மையான அரசியல்வாதிளுக்கு தைரியம் இல்லை. அப்படி கருத்து சொன்னால் தேசபக்தி என்கிற முகமூடி தரித்த பார்பன ஊடகங்களும், பார்பன அரசியல் ஆதிக்க சக்திகளும், ஹிந்துத்துவாவை உருவாக்கி அதன் தலைமை பீடங்களை அலங்கரிக்கும் அவாள்களும் தங்கள் மீது பாய்வார்கள். இதன் மூலம் தங்களை தேசதுரோகி என்று பட்டம் கெட்டுவர் என்கிற பயமே. இது போன்ற தருணங்களில் தைரியமாக கருத்து சொல்லும் வைகோ போன்றவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அது
கடுகளவு கூட இந்தியாவில் இல்லை.
 *மலர் விழி*

Monday, November 19, 2012

உதவாக்கரை இந்திய ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துப்பாக்கி!

உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக்கி.

தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந்திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார்களா?

இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் நமது காமடி பீஸ் விஜய் சம்மதிப்பாரா?

நீங்கள் ஹீரோக்கள் ஆகவேண்டும், அரசியலில் நுழைய வேண்டும், கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உணமைகளை மறைத்து, வரலாறுகளை திரித்து எடுக்கப்படும் படங்களில் கூச்சம் இன்றி நடிப்பீர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க போறேன் பேர்வழி என்று படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார் வெத்து வெட்டு விஜயகாந்து.

ஆக்சன் கிங் அர்ஜூன் இவர் தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர். இவர் படங்களில் பெரும்பான்மையில் இசுலாமிய தீவிரவாதிகள் வந்துவிடுவார்கள். அதுசரி இந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பற்றி ஒருபடமும் எடுக்கப்படவில்லையே. சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்பு முதல் மலேகன் குடுவேடிப்பு வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இந்திரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் கம்பி எண்ணுகிறார்கள்.

உண்மை இப்படி இருக்க இசுலாமிய தீவிரவாதிகள் குண்டுவைப்பதாக படம் எடுக்க இவர்களை தூண்டுவது எது? இதற்க்கு சூத்தரதாரியாக இருந்து செயல்படுபவர்கள் யார்? நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது தெளிவான இச்சூழலில் இதை மறைக்க சித்தாந்த ரீதியான  ஒரு யுத்தத்தை RSS நடத்தி வருகின்றது. RSSசின் பின்புலத்தில் செயல்படும் சில கலைத்துறையினர் இது போன்ற படங்களை இயக்கி வருகின்றனர்.

எந்த மதத்தினரும், பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடும் எவரும் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தின் ஆணிவேர் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவதும், ஆட்சியாளர்கள் சொந்த மக்களுக்கே அநீதி செய்வதாலுமே ஏற்ப்படுகின்றது. மற்றபடி துப்பாக்கி ஒரு சாதாரண மசாலா துக்கடா படமே. இதற்காக முசுலிம் நண்பர்கள் கலைதுறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது காட்சிகளை நீக்க சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு இலவச விளம்பரமாக அமையும் என்பதே எனது மேலானா கருத்து.

கடந்த முறை ஏழாம் அறிவை கொடுத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த முருகதாஸ் இந்தமுறை துப்பாக்கிக்கு இரையாகி போனார்.

*மலர் விழி*

Friday, November 16, 2012

BJP & RSS ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!

பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி என்றே பலராலும் நம்பப்பட்டு வருகிறது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடி என்ற கருத்து எழுப்பப்படும் பொழுதெல்லாம் அதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக மறுத்தே வந்துள்ளது.
 
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது எங்களுக்கு மரியாதை உண்டு, ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டும் என்று எங்களுக்கு கட்டாயமில்லை, அவர்களும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியினர் பகல் வேஷம் போட்டு வந்தனர்.
 
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் உழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்றதும் அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பொழுது நிதின் கட்கரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தில் அவர் உயர்ஜாதி என்பதால் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில் நிதின் கட்கரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுளை விசாரிக்கும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான குருமூர்த்தியிடம் ஒப்படைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி விவகாரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். எப்படி தலையிட முடியும்? அதுவும் கட்சியின் அகில இந்திய தலைவர் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் இவர்கள் கைகளுக்கு எப்படி போனது?
 

இதில் இருந்து ஒன்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் அரசியல் முகமூடியே!  இதை வெளிப்படியாக காட்டி கொள்ளாத பாரதிய ஜனதா, முஸ்லிம் லீக் போல் நாங்களும் ஒரு கட்சி என்று சொல்லி இந்து மக்களின் ஓட்டை நயவஞ்சகமாக பெற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. பாரதிய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் வேறல்ல! இவைகள் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!.

Saturday, November 10, 2012

கோலாகலமாக நடக்கும் 31-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி!

ஷார்ஜா:ஷார்ஜாவில் 31-வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 7-ம் தேதி துவங்கியது. ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பல நாடுகளின் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள் அதிக ஸ்டால்களைப் போட்டுள்ளதால் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியுள்ளது.

ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 7 முதல் 17-வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 பதிப்பகங்கள் பங்குபெற்றுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் முதல் 26 வரை நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் 42 நாடுகளிலிருந்து 720 பதிப்பகங்கள் கலந்து கொண்டன. ஆனால் இந்த முறை 20 நாடுகளும், 204 பதிப்பகங்களும் அதிகபடுத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அல் தாவூன் மாலுக்கு அருகிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மொத்தம் 40,000 பார்வையாளர்களும், 10,000 மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு நூற்களின் விலையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.
வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.

கடந்த 9-ம் தேதி வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வமாகப் புத்தகங்களை வாங்கினர். அரபுலகின் பிரசித்தி பெற்ற தாருஸ்ஸலாம் பதிப்பகத்தின் ஸ்டாலில் நல்ல பல ஆங்கில, அரபி நூற்கள் உள்ளன. மலையாள பதிப்பகங்கள் அதிகமாகப் பங்கெடுத்துள்ளதால் இந்தியன் பெவிலியனில் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியன் பெவிலியனில் ஹால் எண்:5-ல், ஸ்டால் எண்:7-லுள்ள மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் தமிழ் பதிப்பகமான இலக்கியச்சோலையின் தமிழ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படையில் நேர நிர்வாகம் குறித்து முதன்முதலில் தமிழில் வெளிவந்துள்ள நூலான “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” மற்றும் “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “கோவை:போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்”. “மனதோடு மனதாய்”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “இப்பி பக்கீர்” முதலான இலக்கியச்சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இலக்கியச்சோலை பதிப்பகத்தின் காப்பாளர் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் அப்பதிபகத்தின் ஸ்டாலை பார்வையிட்டார். தங்களது வெளீயீடுகள் பற்றியும், இப்பொழுது தயாராகி கொண்டிருக்கும் புதிய புத்தகங்கள் பற்றியும் அங்கிருந்த பார்வையாளர்களுடன் உரையாடினார்.

நமது தூது நிருபர்களுடன் ஒருசில நிமிடங்கள் கலந்துரையாடினார். அதில் இலக்கியச்சோலை பதிப்பகம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு “இலக்கியச்சோலை என்பது தமிழ் கூறும் நல் உலகின் வாசகர்களுக்கு ஒரு விடியல். மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறுகளை தோண்டியெடுப்பதும், சத்தியத்திற்காய் உழைத்த மாவீரர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படை அம்சங்கள், உண்மையின் பிம்பங்களை உலகிற்கு உரைப்பது தான் இலக்கியச்சோலை என்றார்.

இம்மாபெரும் கண்காட்சியில் பங்குபெறும் ஒரே தமிழ்பதிப்பகம் இலக்கியச்சோலை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 9, 2012

பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!

பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான "சார்மினார்" வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.

இதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது "குர்பானி" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.

இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்பு கோவில்" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .

சிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.

பதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

சார்மினார் Sultan Muhammad Quli Qutb Shah மன்னரால் 1591 ல் கட்டப்பட்டது.