பச்சை தேயிலை மற்றும் காபி ஆகியவற்றை
வழக்கமான உணவாக கொண்டால் இருதயத்துக்கு நல்ல பயன் அளிக்கும் என்று
ஜப்பானில் நடந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் தேசிய இருதய மையத்தின் தலைமை
விஞ்ஞானி யோஷிஹிரோ கொகுபோ கூறுகையில் “பக்கவாதத்தின் அபாயங்கள் மீது பச்சை
தேயிலை மற்றும் காபியின் இணைந்த விளைவுகள் குறித்த முதல் பெரிய அளவிலான
ஆய்வு இதுதான்.” மேலும் அவர் கூறுகையில் “நீங்கள் ஒரு சிறிய ஆனால்
உறுதியான வாழ்க்கை மாற்றத்துக்கு உங்கள் உணவில் தினமும் பச்சை தேயிலை
சேர்ப்பதன் மூலம் குறைந்தபட்சம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை
தவிர்க்கலாம்”.
பச்சை தேயிலை அல்லது காபி குடிக்கும் மக்களுக்கு பக்கவாதத்தின் அபாயம் குறைந்தபட்சமே என்கிறது சயின்ஸ் டெய்லி அறிக்கை.
“வழக்கமாக டீ மற்றும் காபி குடிப்பது,
ரத்த கட்டிகள் உருவாகாமல், இருதயத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும்
உதவுகிறது” என்று கொகுபோ கூறினார்.
தண்ணீருக்கு பிறகு உலகின் மிக பிரபலமான
பானம் தேயிலை மற்றும் காபி தான். அதனால் இந்த ஆராய்ச்சி முடிவுகள் மற்ற
நாடுகளுக்கும் பொருந்தும் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment