Friday, September 30, 2011

உள்ளாட்சித்தேர்தலில் இஸ்லாமிய அமைப்புகள்

               தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.


இந்தக் கூட்டணியில்
1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளும், 6 கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை உள்ளன.
          மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.
மேயர் தொகுதிகளில் மட்டும்தான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள்


சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)வின் வட சென்னை மாவட்டத் தலைவர் S.அமீர் போட்டியிடுகிறார்.

ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை.........

ஏக இறைவனின் திருப்பெயரால்…!
 
அஸ்ஸலாமு அலைக்கும் (War)…,
 
தோண்டத் தோண்டப் பிணங்கள்…..
 
    சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தோண்டி எடுக்கப்பட்டன உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம். அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை சடலங்களை குழிவெட்டி அடக்கம் செய்த முதியவரான பரித்கான் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் காஷ்மீர் பற்றியெரிந்து கொண்டிருந்த முதல் பத்து வருடம் அதாவது 1990 முதல் போலிசும் ராணுவமும் கொண்டுவந்த 2500 க்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்களை தான் அடக்கம் செய்திருப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார் போன மாதம் வடக்கு காஷ்மீரின் சில மாவட்டங்களில் 38 சவக்கிடங்குகளில் 2730 அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன இவற்றுள் 574 சடலங்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டது இதன் பின்னர் மாநில மனித உரிமைக் கமிஷன் மாநிலத்தின் வேறு பல இடங்களிலும் இது போன்று பல்லாயிரம் பேரை ராணுவமும் போலிசாரும் கொன்று புதைத்திருக்கலாம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரனைகளில் ஜம்முவில் உள்ள பூஞ் மாவட்டத்தில் மூன்றறை ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள அடக்கஸ்தலத்தில் 2500 அடையாளம் தெரியாத இளைஞர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது போலிசும் ராணுவமும் கொண்டு வந்த சடலங்களை நானும் என்னுடன் உள்ள மற்ற சிலரும் சேர்ந்து அடக்கம் செய்துள்ளதாக அங்குள்ள ஸோபி அஜிஸ் ஜு வெளிப்படுத்தியுள்ளது நாட்டையே மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கன்றது எல்லா உடல்களுமே குண்டு துளைத்த நிலையில் இருந்ததாகவும் யாருடைய முகமும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்க்காக சிதைக்ப்பட்டிருந்ததாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் ராணுவத்தினரும் போலிசும் உடல்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் ஒருநாள் 16 உடல்களை ஒன்றாக ஒரே (கப்ரில்) குழியில் அடக்கம் செய்ய நேர்ந்த போது சோகத்தால் என்னுடைய மனமே கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக கண்ணீருடன் கூறுகின்றார் ஸோபி அஜிஸ் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் கொள்ளப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லித்தான் போலிசும் ராணுவத்தினரும் உடல்களைக் கொண்டுவந்திருக்கன்றனர் சில நேரங்களில் உடல்களின் சில பாகங்கள் மட்டுமே அடக்கம் செய்ய வந்திருப்பதாகவும் ஒருநாள் உடல்கள் இல்லாமல் ஏழு தலைகள் மட்டும் வந்திருந்ததாகவும் ஆனால் போலிசார் ஏழு முழு உடல்களைக் கொண்டு வந்ததாக எழுதிக் கேட்டதாகவும் பயத்தினால் வேறோன்றும் கேட்காமல் அவர்கள் கேட்டது போல தான் எழுதிக்கொடுத்ததாகவும் ஸோபி அஜிஸ் கூறுகின்றார் 1990 காலகட்டங்களில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருந்த போதுதான் அதிக அளவில் சடலங்கள் வந்து கொண்டிருந்ததாகவும் தினமும் இரண்டு மூன்று சடலங்களாவது வந்துவிடும் என்றும் பூஞ்சிலே வேறு சிலரும் உடல்களை அடக்கம் செய்ய உதவியதாகவும் உடல்களை அடக்கம் செய்த பிறகே அதிகாரிகள் அங்கிருந்து செல்வார்கள் என்றும் அவர் கூறுகின்றார் பூஞ் மாவட்டம் என்பதால் நாட்டிற்க்குள் ஊடுறுவ வந்த தீவிரவாதிகள் என்று சொல்லி சுட்டுக் கொள்ள வசதியாக இருந்ததால் வேறு பல இடங்களிலும் உள்ள இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு வந்து பூஞ்சில் வைத்து சுட்டுக் கொன்று அங்குள்ள அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவையெல்லாமே அடையாளம் தெரியாததாகவும் இருந்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது ஜம்முவில் உள்ள மன்தி கிராமத்திலும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த ஹதிப்கான் கூறுகின்றார் கொண்டு வரப்படும் சடலங்களுக்கு உறவினர்கள் யார் என்று இல்லாததால் நாங்கள் மட்டுமே இறந்த உடலுக்குச் செய்யவேண்டிய தொழுகை உட்பட இறுதிக் கடமைகளைச் செய்து அடக்கம் செய்திருப்பதாக கூறுகின்றார் கம்பி வேலி கட்டி அடக்கஸ்தலம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் 1990 முதல் 2000 வரைக்கும் உடல்கள் வந்து கொண்டிருந்ததாகவும் பிதல் என்ற கிராமத்தில் நடந்த சண்டையில் 33 பேரின் உடல்களே முதன்முதலாக கொண்டு வந்ததாகவும் பதினொன்று பதினொன்று வீதம் மூன்று குழிகளில் 33 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ததாகவும் கூறினார் மேலும் ரஜீர் என்ற கிராமத்தில் உள்ள அடக்கஸ்தலத்திலும் இது போன்ற பல நூறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுருக்கின்றன பூஞ் மற்றும் ரஜீரி மாவட்டங்களிலும் அடையாளம் தெரியாத பல உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவைகளையும் தோன்டி எடுத்து டி என் ஏ பரிசோதனை உட்பட மற்ற சோதனைகளையும் நடத்தி அடையாளம் காண வேண்டும் என்று அங்குள்ள மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது இந்தியா தன்னை ஜனநாயக நாடு என்று சோல்லிக் கொண்டாலும் காஷ்மீரில் தோண்டத் தோண்ட கிடைக்கும் இது போன்ற ஆயிரக்கனக்கான அப்பாவி இளைஞர்களை (தீவிரவாதிகளை அல்ல) கொன்று குவித்திருப்பதன் மூலம் மத்திய அரசும் இந்திய ராணுவமும் எந்த அளவிற்க்கு மிருகத்தனமாக காஷ்மீரிகளின் விஷயத்தில் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறியலாம்.
 Source: மலையாள நாளிதலான மாத்யமம் செய்திகளில் இருந்து தொகுக்ப்பட்டது

4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

2:216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.

 

Wednesday, September 28, 2011

ம.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு மற்றும் பரிந்துரை மனுக்கள் செய்திருந்தனர்.

கடந்த வாரம் சென்னை, ஈரோடு, ஓசூர், திருவாரூர், மதுரை, நெல்லை என ஆறு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விண்ணப்ப வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள் நடைபெற்றது.அதன்படி இறுதிகட்ட பரிசீலனை செப்.26 அன்றும், செப்.27 அன்று நடைபெற்று வருகிறது. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஹாரூண் ரஷீது, எம். தமிமுன் அன்சாரி, ஜே.எஸ். ரிஃபாயி, குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் கொண்ட குழு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.
தியாகம், நேர்மை, மக்கள் செல்வாக்கு, நிர்வாகத் திறன், ஆரம்பகால சிறை தியாகங்கள் ஆகியவை முன்னனி அளவுகோல்களாக கணக்கில் கொண்டு இப்பட்டியல் தயாராகியுள்ளது.

புதியவர்களாக இருந்தால் வேறு யாரும் போட்டியிடாமல் ஒருமனதாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தால் அவர்களின் மனுக்களும் தகுதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.





 

Monday, September 26, 2011

தடை செய்யப்பட்ட தீமைகள் - பகுதி 4

31) பொய்சாட்சி கூறுதல்!

அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.
32) அவதூறு கூறுதல்!

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)
33) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!

“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.
34) கர்வம் கொள்ளுதல்!

“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
35) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)
36) அளவு நிறுவையில் மோசடி செய்தல்!

“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)

“மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)
37) பிறர் சொத்தை அபகரித்தல்!

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.
38) மோசடி செய்தல்!

“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)

“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)
39) அநீதி இழைத்தல்!

“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.
40) புறம் பேசுதல்!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)


சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 
நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்
 அரங்கம் முழுவதும் 300-க்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பு அம்சமாக TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பொன்னாடை போற்றினார். SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்களுக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் பொன்னாடை போற்றினார். TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்களுக்கு SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் பொன்னாடை போற்றினார்.

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சகோதர்கள் மேடையில் மக்கள் முன்பாக வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர். இறுதியில் இயக்க பாகு பாடின்றி கருத்து பரிமாறி கொண்டு மதிய உணவை ஒரே ஜகனில் அமர்ந்து உண்டனர். இது இஸ்லாமிய மக்கள் அனைவரும் கொள்கை ரீதியாக பிரிந்து கிடந்தாலும் நாம் அனைவரும் இஸ்லாமிய சகோதரர்களே என்ற எண்ணத்தை பிரதிபலிகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை இஸ்லாமிய மக்கள் அனைவரும் கருத்தில் கொண்டு பாகு பாடின்றி சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டுமாய் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சார்பாக கேட்டு கொள்ள பட்டது.

Sunday, September 25, 2011

நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த சகோதரர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
           கடந்த சில நாட்களாக நமது ஊரில் ஒரு விதமான பயமும் பரபரப்பும் தொற்றி கொண்டு இருந்தது .அது என்னவனில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எப்போதும் எடுத்து செல்லும் பாதையை விட்டு  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எடுத்து செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தது காவி கும்பல்.இவர்கள் கடந்த வருடம் கூத்தாநல்லூர் உள்ளே முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அத்து மீறி கலவரம் செய்யும் நோக்கத்துடன் ஊர்வலம் கொண்டு வந்தனர் , அதனை அறிந்த கூத்தாநல்லூர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஊர்வலம் கொண்டுவந்த ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை மற்றும் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

            இந்த வருடமும்  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஊர் உள்ளே எடுத்து வர காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது இதை  கூத்தாநல்லூர் ஜமாத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விநாயகர் ஊர்வலம் ஊர் உள்ளே வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் திருவாரூர் கலக்டர் ஆணைப்படி 15-ஆம் தேதிக்குள் விநாயகர் சிலையை பழைய வழியில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்குமாறு ஆணை பிறப்பிக்கபட்டது பின்பு கூத்தாநல்லூர் காவல் துறையினரால் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. அதையும் பெரிது படுத்தாத ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் 17-ஆம் தேதி வரை  கலவரம் செய்யும் நோக்கத்துடனே இருந்தனர்.

             உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் திருவாரூர் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் உத்திரவின் பேரில் 18-ஆம் தேதி காலையில்  ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுக்காப்புடன் விநாயகர் சிலையை போலீசார் லெட்சுமாங்குடி ஆற்றில் கரைத்தனர். போலிசாரின் இந்த முயற்சியால் ஹிந்துத்துவ வாதிகளின் கலவர திட்டம் முறியடிக்க பட்டது.

 
இவ்வாறு கலவர திட்டத்தை முறியடித்து ஊருக்கு அரண்களாக விளங்கிய நமதூர் இளைஞர்களுக்கும, கூத்தாநல்லூர் ஜமாத் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் , சமூக ஆர்வலர்களுக்கும் , சமுதாய இயக்கங்களான PFI, TMMK, TNTJ நிர்வாகிகளுக்கும் மற்றும் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும், கூத்தாநல்லூர் நகர காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும்   நன்றி !  நன்றி  !! நன்றி  !!! 

நன்றியுடன்.........
S.B. பைசல் ரஹ்மான்
கூத்தாநல்லூர் போஸ்ட் இணையதளம்

மற்றும் 

புருனை வாழ் கூத்தாநல்லூர் சகோதரர்கள் 

Saturday, September 24, 2011

தொழுதிடுவோம் வாருங்களேன்..!

நிலையில்லாத உலகமதில்
நிரந்தரமின்றி வாழும் நாம்
நித்திய ஜீவன் அல்லாஹுவை
நித்தம் தொழுதிட வேண்டாமா?
 
நிம்மதியில்லா உள்ளத்தில்
நிலைதடுமாறும் எண்ணங்களை
நேர்மையாளன் அவனிடத்தில்
கூறி முறையிட வேண்டாமா?
 
அற்பமான இவ்வுலகில்மிக
சொற்பகாலம் வாழும் நாம்வெகு
நுட்பமாய் நற்செயல் புரிந்துஇறை
நட்பைப் பெற்றிட வேண்டாமா?
 
நாளைய நீதி மன்றத்தில்
நேர்மையாளன் முன்னிலையில்சற்றும்
நிலைகுலையாமல் பதிலளிக்கும்
நெஞ்சுரம் நமக்கு வேண்டாமா?
 
அல்லாஹ்-வுக்கும் அவன் தூதர்
அண்ணல் நபிக்கும் வழிபட்டுபுனித
அருள்மறை போற்றும் சுவனத்தைநாம்
அடைந்திட முயல வேண்டாமா?
 
பாவமறியா புருஷர்களா? நாம்
தவறே செய்யா மானிடரா?நிறைமனதோடு முறையிடவேஅவனை
நித்தம் தொழுவோம் வாருங்களேன.
 
இறையில்ல பாங்கோசை இரவு பகல் கேட்கிறதே
நம் காதில் விழவில்லையா?முறையாகச் சென்றங்கு நிறைவாகத் தொழுதேற
நல்லெண்ணம் வரவில்லையா?
 
கந்தூரி பெயராலே கச்சேரி நடக்கின்ற
ஊர்தேடி செல்கின்றோமே
பார்க்கின்ற இடமெல்லாம் பள்ளிகள் பலவிருந்தும்
பாராமல் போகின்றோமே
 
மரணத்தித்தின் பின்னாலே மறுவாழ்வு உண்டென்ற
நம்பிக்கை எழவில்லையா? – அந்த
மஃஷரின் அதிபதி வழங்கிடும் தீர்ப்புக்கு
பலியாவோம் நாமில்லையா?
 
உத்தமதிருநபியின் உம்மத்து நாமமென்று
உணர்ச்சிதான் வரவில்லையா? அந்த
சத்திய திருநாதர் காட்டிய வழியிலே
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
மரித்த நம் உடலதனை மண்ணறையில் வைத்தபின்
நமது நிலை என்னாகுமோ?முன்கர்-நகீர் கேட்டும் கேள்வி அனைத்திற்கும்
நமது பதில் எதுவாகுமோ?
 
நாம் மைய்யித்தாகுமுன்நம்மைத் தொழவைக்கும் முன்
நாம் தொழுதிடல் வேண்டுமன்றோ?மறுமையின் தலைவாயில் மண்ணறைப் புகுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்.
 
முஸ்லிமாய் பிறந்த நாம் முஸ்லிமாய் வாழ்ந்துபின்
முஸ்லிமாய் மரித்தல் வேண்டும்
முஃமினாய் சுவனமதை அடைகின்ற பாக்கியம்
நமக்கெல்லாம் கிட்ட வேண்டும்நாம்
இறுதியாய் விடும் மூச்சு லாயிலாஹ இல்லல்லாஹ்
என்று வெளியாக வேண்டும்
கலிமாவோடு கரைசேர கண்ணியமாய் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
தன்னை மட்டும் வணங்குவதற்காகவே
இறைவன் நம்மை உருவாக்கினான்
மனுஜின் இனத்தாரை இதற்காகவல்லாது
வேறேன் படைப்பாக்கினான்?
 
இறைவனை வணங்காது இறுமாப்பாய் வாழ்வதுஇறை
நிராகரிப் பாகுமன்றோ?நிறைவாக இறையோனை நித்தம் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
மண்ணினால் படைத்து நம்மை மனிதானாய் உருவாக்கிய
மறையோனை மறக்கலாமா? – அந்த
மண்ணுக்கே இரையாக்கி மறுபடியும் எழுப்பிடும்
இறைவனை வெறுக்கலாமா?
 
இன்னுயிர் வாழும் நாம் நாளை இருப்போமா?எண்ணிடல் வேண்டமன்றோ? – இந்த
உடலினை விட்டுயிர் பிரியுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
மறுமையது உண்மையென முழுமையாய் நம்பிடும்
முஃமின்கள் நாமல்லவா? – அந்த
மஃஷர் மைததானிலே இறைவன் முன் நிலையிலே
நிறுத்தப்படுவதும் நாமல்லவா?
 
தொழுகையோடு ஏனைய செயல்களுக்கெல்லாம் பதில்
சொல்வதும் நாமல்லவா? – நல்ல
தீர்ப்பினது முடிவதனை தெரிந்திடும் முன்னமே
தொழுதிடுவோம் வாருங்களேன்.
 
மண்ணறை வேதனையை மறுமைநாள் வரையில் நாம்
அனுபவித்தாக வேண்டும்இறை
விசாரணைக்காக நாம் மீண்டும் உயிர்பெற்று
எழுந்துதான் ஆக வேண்டும்.
 
படைத்தவன் கேட்டிடும் கேள்விகளுக்கெல்லாம் பதில்
சொல்லியே தீரவேண்டும்அந்த
இறுதியுக நாளிலே மோட்சத்தை அடைந்திடவே
தொழுதிடுவோடும் வாருங்களேன்.
 
சுவனமும், நரகமும் நம்மவர்க்காகவே
படைத்தவன் இறைவனன்றோஉலகினில் நாம் செய்த செயல்களின் கூலிகளை
தருவதன் உரிமையன்றோ?
 
வணக்க வழிபாட்டுடனே மன்னிப்பை கோருவது
மாந்தர்த் கடமையென்றோ? – நல்
சுவனத்தை நாடியே துரிதமாய் ஜமா அத்தாய்
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
உலகாசாபாசங்களில் மனதை பறிகொடுத்துநாம்
மயக்கத்திலாழ்திடாமல்
கேளிக்கை கூத்துகளில் காலத்தை கடத்தியேநற்
கருமங்கள் செய்திடாமல்
 
நிலையில்லா வாழ்க்கையில் நிம்மதியிழந்து நாம்
கைசேதமடைந்திடாமல்உடல்
நலமாயிருக்கையிலே நித்தமும் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
இறைவன் மேல் விசுவாசம் இதயத்தில் ஏந்தியே
இரவுபகல் தொழுதல் வேண்டும்
இறையச்ச உணர்வோடு இறைத்தூதர் காட்டிய
வழியிலே தொழுதல் வேண்டும்
 
குறைபாடு இல்லாத நிறைவான தொழுகையாய்
நித்தமும் தொழுதல் வேண்டும்
முறையாக இறைவனை முழுமையாய் ஐவேளைத்
தொழுதிடுவோடும் வாருங்களேன்
 
தொழுகையை அதனதன் நேரத்தில் தொழுவதே
தொழுகையின் சிறப்பம்சமாம்
தொழுகையை தொழுகின்ற முறையோடு தொழுவதே
தொழுகையின் முழு அம்சமாம்
 
தொழுகையை இமாமுடன் கூட்டாகத் தொழுவதே
தொழுவோர்க்கு திருப்தி தருமே
தொழுகின்ற மக்களுடன் தோழோட தோள் நின்று
தொழுதிடுவோம் வாருங்களேன்.
 
பேணுதலில்லாத தொழுகையைத் தொழுவதால்
பயனேதும் கிட்டிடாது
பயபக்தி இல்லாத வணக்க வழிபாடுகளால்
புண்ணியம்  கிடைத்திடாது
 
ஜும்மாஆ -வை மட்டுமே தவறாமல் தொழுவதால் செய்த
பாவங்கள் நீங்கிடாது
படைப்பாளன் அல்லாஹ்வை பயந்து தினம் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
தொழுகையே இஸ்லாத்தின் தூண் என்று உரைத்த நபி
வாக்கினை மதித்தல் வேண்டும்
நிலைபாடாய் தினம் தொழுது இஸ்லாத்தின் தூணினை
கட்டியவராக வேண்டும்
 
தொழுகையே இல்லாமல் இஸ்லாத்தின் தூணினை
இடித்தவராகமலே
தொழுகையே சுவனத்தின் திறவு கோல் என்பதால்
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
தொழுகையே ஈமானை வலுவாக்கும் ஆயுதம்
தொழுகையே சுவனம் சேர்க்கும்
தொழுகையே மூஃமினை மோட்சத்திலாக்கிடும்
தொழுகையே மூலதனமாம்
 
தொழுகையே பாவச்சுமைகளைக் களைந்திடும்
தொழுகையே அரணாகுமே
தொழுகையே இருலோக வெற்றியை அடைந்திட
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
மறுமை விசாரணையில் இறைவனின் முதல்வினா
நீ தொழுதாயா? என்பதாகும்
தொழுகையே இல்லார்க்கும் அலட்சியம் செய்வோர்க்கும்
இறைத்தண்டனை கடுமையாகும்
 
மூஃமினை காஃபிரை வித்தியாசம் காட்டுவது
தொழுகை எனும் வணக்கமாகும்
அல்லாஹ்-வின் கிருபையால் அருள் சுவனம் நாடியே
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
திருமறை குர்ஆனில் தொழுகையை வலியுறுத்திக்
கூறாத இடங்களில்லை
திருநபியின் போதனையில் திருமறையின் சிறப்புக்களை
சொல்லாதா கிரந்தமில்லை
 
ஐங்கால தொழுகையின் அழைப்பினைக் கேட்காத
செவிப்புலன் எவர்க்குமில்லை
இறைவனை அஞ்சியே இரவு பகல் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்
 
இம்மையில் வித்திட்ட மறுமையில் அறுவடை
செய்பவன் புத்திசாலி
பொன்னான நேரங்களில் புண்ணியம் சேர்ப்பவன்
போற்றத்தகு திறமைசாலி
 
கைவெண்ணெய் இருக்கையில் நெய்ககலைபவன்
கோமாளி ஏமாளியே
காற்றுள் போதே தூற்றிட அழைக்கிறேன்
தொழுதிடுவோம் வாருங்களேன்….