Sunday, October 30, 2011

2 பஞ்சாயத்துக்களில் எஸ்.டி.பி.ஐக்கு துணைத்தலைவர் பதவி

சென்னை:தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புலாங்குடியிருப்பு பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியைச்சார்ந்த நாகூர் மைதீன் வெற்றிப்பெற்றார். 15 உறுப்பினர்களைக்கொண்ட பேரூராட்சியில் ஒன்பது வாக்குகளை நாகூர் மைதீனும், காங்கிரஸ் கட்சியைச்சார்ந்த திவான் ஆறுவாக்குகளும் பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மூலக்கரை கிராமபஞ்சாயத்தில் துணைத்தலைவர் பதவி எஸ்.டி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.மெளலவி அஷ்ரஃப் அலி ஃபைஸி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தமிழ்நாடு துணைத்தலைவராக உள்ளார் அஷ்ரஃப் அலி ஃபைஸி. தமிழக உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 62 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இந்தியா?

அருணாச்சாலப்பிரதேசத்தில் பாலம் அறுந்து விழுந்ததில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷெப்பா என்ற இடத்தில் கெமங் ஆற்றின் மீது இருந்து தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. பாலம் அறுந்து விழுந்ததில் நடந்து சென்ற அனைவரும் ஆற்றின் நீரில் மூழ்கினர். இருவர் மட்டும் நீந்தி உயிர் தப்பியுள்ளனர்.

சிந்திக்கவும்:
இதுமாதிரி கொடுமைகள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். பாதுகாப்பில்லாத பாலங்கள், பாதுகாப்பில்லாத படகுபயணம், ரயில்களில் போதிய பாதுகாப்பு இல்லாமை, வாகனங்கள் குறித்த ஒரு தரக்கட்டுபாடு இல்லாமை இப்படி விபத்துகளுக்கு உண்டான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்திய
அரசு அதிகாரிகள் லஞ்சத்தை வாங்கிகொண்டு தரம் இல்லாத விசயங்களுக்கு அனுமதி கொடுப்பதன் விளைவு, கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீ விபத்து முதல் தொடங்கி சுற்றுலா படகுகள் கவிழ்வது வரை அன்றாடம் விபத்துக்கள் மூலம் நடக்கும் கோர மரணங்கள் அதிகரித்து கொண்டே சொல்கிறது.

இந்திய அரசு
"இந்தியாவை முன்னேற்ற போகிறோம்" என்று சொல்லி கூடங்குளம் அனுமிநிலயம் முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை எத்தனயோ பாதுகாப்பில்லாத விடயங்களை கொண்டுவருகிறது. ஒரு சாதாரண உபயோகம் இல்லாத பாலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதே தெரியாத இவர்கள் எப்படி அனுமிநிலயத்தை பாதுகாக்க போகிறார்களோ.

இதை பார்க்கும் போது
போபால் விசவாய்வு கசிவே நினைவுக்கு வருகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நஷ்டஈடு கொடுக்க முடியவில்லை. எங்கோ பலம் விழுந்தது ஐம்பது பேர் செத்தார்கள் என்று மவுனம் காக்காமல் இதற்காக மொத்த நாடும் கொந்தளித்து எழவேண்டும். மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத எந்த முன்னேற்ற திட்டங்களையும் அரசு கொண்டுவருவதை அனுமதிக்க கூடாது.

எல்லா நலத்திட்டங்களும் மக்களின் அடிப்படை வசதிகளை  பெருக்குவதற்க்காகவே அல்லாமல் மக்களின் பாதுகாப்பை கேள்விகுறி ஆக்குவதற்காக அல்ல.
இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரளவேண்டும். இதுபோல் சக மக்களுக்கு பதிப்புகள் ஏற்ப்படும் போது மொத்த நாடே கொந்தளிக்க வேண்டும். ஒரு அன்னா கசாரேயின் போராட்டத்திற்கு பணியும் அரசு நாடே கொந்தளிக்கும்போது பணியாதா என்ன? மக்கள் சிந்திப்பார்களா? விழிப்புணர்வு கொள்வார்களா?

Saturday, October 29, 2011

எஸ்.டி.பி.ஐயின் கவுன்சிலர்கள் நேர்மையான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் கடந்த அக்டோபர் 24,25 ஆகிய தேதிகளில் மாநில தலைவர் A.S இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், பொதுசெயலாளர் A  காலித் முஹம்மது, மாநிலச் செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் கே. எஸ்.எம் இப்ராஹீம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1 . நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாப்புலர் ஃபிரண்டின் ஆதரவு பெற்ற தேசிய அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ யின் வேட்பாளர்களுக்கு சிந்தித்து வாக்களித்து 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள், 50 ஊராட்சி கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்த தமிழக பெருமக்களுக்கு  பாப்புலர் ஃபிரண்ட் மனமார்ந்த நன்றியை தெரிவிதுக்கொள்கிறது.


பணநாயகத்திற்கும், அராஜக அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க தமிழாக வாக்காளப் பெருமக்கள் தயாராகி விட்டனர் என்பதையே எஸ்.டி.பி.ஐ யின் இந்த வெற்றி பறைசாற்றுகிறது.


கொள்கை பலத்தால் வென்றெடுத்த இந்த பதவிகளை 62 கவுன்சிலர்களும் முறையாக பயன்படுத்தி இனி வரும் 5  ஆண்டுகளுக்கு அயராது மக்கள் பணியாற்ற வேண்டுமென்றும், அரசியல் வியாபாரத்திற்கு சாவுமணியடிக்க நேர்மையான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து சமூக மாற்றத்திற்காக தொண்டாற்ற வேண்டுமென பாப்புலர் ஃபிரண்ட் வேண்டுகோள் விடுக்கின்றது.


2 . திண்டுகளில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யாமல் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையை பாப்புலர் ஃபிரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீதே பொய் வசக்கு போட்டு, கைது சித்து, சிறையில் அடைக்கும் காவல்துறையின் சர்வதிகாரபோக்கு நீதியையும், நியாயத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டது. இது போன்று அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் அய்யாதுரை, நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் அசோகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்றும் பாப்புலர் ஃபிரண்ட் கேட்டுக்கொள்கிறது.


3. பொதுவாகவே கடந்த சில மாதங்களாக பல்வேறு நிகழ்வுகளில் திருநெல்வேலி, வேலூர், சென்னை, வேடசந்தூர், பழனி, மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகமும், சர்வதிகாரப் போக்கும் மிகைத்து வருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் கவனமெடுத்து நடு நிலையான போக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையை பணிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


4. கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழுவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றது. மக்களின் வாழ்வோடு விளையாடும் இதுபோன்ற பேரழிவுத்திட்டங்களை அரசு உடனடியாக இழுத்து மூடவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.


5. டி.என்.பி.எஸ்.சி தேர்விலும், அரசுப்பணியாளர் நியமனத்திலும் முறைகேடு செய்து தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ரத்தினசபாபதி, கடந்த 2006ம் ஆண்டு கோவையில் உளவுத்துறை உதவி ஆணையராக இருந்த போது வெடிகுண்டு புரளியை கிளப்பி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தார். இதனை விசாரித்த சி.பி.சி.ஐ.டி சிறப்புப் புலனாய்வு குழு, இந்த வழக்கு ரத்தினசபாபதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளால் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என கோவை 7வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இறுதி அறிக்கை சமர்பித்தது.


இவ்வாறு கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ரத்தின சபாபதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த தி.மு.க ஆட்சியில் அவருக்கு ஏ.டி.எஸ்.பி, எஸ்.பி, தேர்வாணையக்குழு உறுப்பினர் என பல்வேறு பதவி உயர்வு வழங்கப்பட்டன. கிரிமினல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ரத்தினசபாபதிக்கு சட்டத்திற்கு புறம்பான எந்த அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன என்பதையும் தற்போதுல்ள ஊழல் வழக்கு விசாரணையுன் இணைத்து நடத்துமாறு தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


மேலும் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையின் அடிப்படையில் ரத்தினசபாபதி மீதும் அவருக்கு துணைபுரிந்த அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


6. நந்தித் - 1 & 2, மாலேகான் 1 & 2, கான்பூர், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், கோவா, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், தென்காசி என நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் வெளிவந்த சங்கப்பரிவார்களின் தொடர்பை மறைக்க, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சங்கப்பரிவார பின்புலத்தோடு கடந்த சில மாதன்களால நடந்து கொண்டிருப்பது தான் ஊழல் ஒழிப்பு நாடகம். அந்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான திருவாளர் அத்வானி தான் இப்போது ரத யாத்திரை வந்து கொண்டிருக்கிறார்.


இந்த ஊழல் வாதிகளின் கட்சியான பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் (1998-2004), கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் போதும் இவர்கள் செய்த ஊழல்களான நெடுஞ்சாலை ஊழல், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு செய்தலில் ஊழல், டெல்லி நில ஊழல், இந்திய வரலாற்று ஆய்வுக்கழக ஊழல், எல்லையில் பாதுகாப்பு வேலி போடுவதில் ஊழல், அரசு நட்சத்திர ஹோட்டல்கள் விற்பனையில் ஊழல், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது, கார்கில் போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களில் பிணங்களை வைக்கப் சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல், கர்நாடகத்தில் நிலமோசடி ஊழல், சுரங்க ஊழல், ஊழல் ஒழிப்பு யாத்திரையை விளம்பரப்படுத்த மீடியாக்களுக்கு லஞ்சம் என இவர்களின் ஊழல்கள் சந்தி சிரிப்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.


ஊழலில்  ஊறித்திளைத்த சங்கப்பரிவார ஃபாசிஸ‌ கட்சியான பா.ஜ.கவிற்கு ஊழல் ஒழிப்பு யாத்திரை நடத்த என்ன தகுதி இறுக்கிறது? குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகளை மறைக்க இவர்கள் நடத்து நாடகம் தான் அத்வானியின் இந்த ரத யாத்திரை. ஊழல் நாயகர்களால ஊழலை ஒழிக்க முடியாது. எனவே ஊழல்வாதிகளின் இந்த ரதயாத்திரையை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

அத்வானியின் ரத யாத்திரையை கண்டித்து வெளியிடப்பட்ட நோட்டீஸ்

POPULAR FRONT OF INDIA  வின்  சார்பாக  அத்வானியின் ரத யாத்திரையை கண்டிக்கும் வகையில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. 
 

நகர்மன்றம் முதல்… நாடாளுமன்றம் வரை…

தமிழகத்தின் உள்ளாட்சித்தேர்தல்கள் முடிவடைந்து புதிய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுவரும் தருவாயில் என் சமுதாயம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் என்ன சாதித்துள்ளது…? அதுதான் இந்த கட்டுரையின் கேள்வி..

கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட்டது அதில் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும் அடக்கம்.


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் வெற்றிகண்ட மமக, திமுக கூட்டணியில் மூன்று தொகுத்களில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு படுதோல்வியடைந்த முஸ்லிம்லீக்… முதல் தேர்தல் என்றாலும் தனித்தே களமிறங்கிய எஸ்.டி.பி.ஐ. ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது.


தமிழகத்தை பொறுத்தவரை இருக்கின்ற அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அனைத்துமே தாங்கள்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகள் என பிரகட்டனபடுத்திகொண்டு சமுதாயத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறார்கள் என்பதற்கு இந்த நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சாட்சி…


மமக 600 இடங்களில் போட்டியிட்டு சுமார் 140 இடங்களில் வெற்றி கண்டுள்ளது… அந்த வெற்றியை அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளமும் பத்திரிக்கையும் தொடர்ந்து எழுதி வருகிறது… அதேபோல முஸ்லிம்களின் அரசியல் தாய்ச்சபை என வர்ணிக்கப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 390 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றுள்ளது… எஸ்.டி.பி.ஐ எனப்படும் சோசியல் டெமோக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கிருத்துவ இயக்கங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிட்டு சுமார் 62 இடங்களில் வென்றி பெற்றுள்ளது… மாநகர மேயர் தேர்தலில் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ இன் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்கள்…


இதுதவிர கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்களின் ஆதவுடன் போட்டியிட்ட சகோ.அமீர் அல்தாப் முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்….


மேலே குறிபிட்டபட்டிருப்பவைகள் கடந்த உள்ளாட்சித்தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை சொல்லிகொள்ளும் இஸ்லாமிய கட்சிகள் வாங்கி இருக்கும் வாக்கு விகிதம்… ஒவ்வொருவரும் தாங்கள் அளப்பரிய வெற்றிகண்டுள்ளதாக பெருமைபட்டுகொண்டிருக்கும் இந்த தருவாயில் இவைகள் எவ்வளவு   எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவு என்பதை நாம் கவனிக்கவேண்டும்… அதேபோல பலம்பெரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி கோவை மாநகர மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளர் சகோ.அமீர் அல்தாப் அவர்களால் எப்படி மூன்றாம் இடத்தை பிடிக்க முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்… கோவையை போல ஏன் மற்ற இடங்களில் நமது சமூக வேட்பாளர்களால் கவுரவமான வாக்குகள் வாங்க முடியவில்லை இந்த தோல்விகளுக்கு யார் காரணம்…?


வேறு யாருமல்ல வேறு எந்த அரசியல் கட்சியும் அல்ல… நாம்தான் இத்தகைய பின்னடைவிற்கு காரணம் பல இடங்களில் முஸ்லிம்களின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணமாக இருப்பதை ஆய்வு செய்வது அவசியம்… உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலை குறிபிடலாம்… முத்துபேட்டை முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய பேரூர் முத்துபேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி இன்றைக்கும் சங்பரிவார்களின் தூக்கத்தை கெடுத்துவருகிறது என்பதை நாம் அறிவோம்… ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில் கலவரங்களை களமிறக்க சில கறுப்பாடுகள் அலைவதையும் முத்துபேட்டை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்தே உள்ளார்கள் இப்படியாக எதிர்வினைகள் மிக்க முத்துபேட்டை பேரூராட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றி இருக்க வேண்டும் கைகூடி வந்த வெற்றியை முஸ்லிம்களே கோட்டைவிட்டுல்லார்கள்…


18 வார்டுகளை உள்ளடக்கிய முத்துபேட்டை பேரூராட்சியில் சுமார் 9 வார்டுகளில் முஸ்லிம்களும் எஞ்சியுள்ள 9 வார்டுகளில்  மற்ற சமூக மக்களும் நிரம்பி வாழ்கிறார்கள்… இப்படி சமமாக மற்றவர்களும் வாழக்கூடிய முத்துபேட்டை பேரூராட்சித் தேர்தலில் மற்ற சமூக வேட்பாளர்கள் நால்வர் மட்டுமே களமிறங்கினார்கள் ஆனால் முஸ்லிம்கள் ஒன்பது வேட்பாளர்கள் களம்கண்டார்கள்…


பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தாலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட சகோ.அபூபக்கர் சித்தீக் சுமார் 1926 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார் வெற்றிகண்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்திற்கும் இரண்டாம் இடம் பெற்று தோல்விகண்ட சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்களுக்குமான வாக்குவித்தியாசம் வெறும் 402 வாக்குகள்தான் ஆம் வெற்றிபெறவேண்டிய அபூபக்கர் சித்தீக் மற்ற முஸ்லிம் வேட்பாளர்களால் தோல்வியடைந்துள்ளார்… முஸ்லிம்களுக்கான அதிகாரத்தை பெறவேண்டி போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் இந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் இல்லையா…? மற்ற முஸ்லிம் வேட்பாளர்களைவிடவும் அதிகமான வாக்குகள் வாங்கியுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளரை இவர்கள் விரும்பி இருந்தால் பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாமே…  ஏன் அப்படி செய்யவில்லை காரணம் இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் புரையோடியுள்ள ஈகோ தான்… முத்துபேட்டை தோல்வி ஒரு உதாரணம்தான் இதேபோல பல இடங்களில் முஸ்லிம்கள் வெற்றி வாய்ப்பை சொந்த சமூகத்தினாலேயே இழந்துள்ளார்கள் என்பது கவனிக்கவேண்டிய கவலை…


இன்றைக்கு மூன்றாம் தரக்குடிமக்களாக முஸ்லிம்கள் அரசுகளால் அதிகாரிகளால் தரம்தாழ்த்தபட்டுவருகிறோம்… எத்தனை வலிமை இருந்தும் நம்மால் ஏன் பெரும் அதிகார பதவிகளை பெறமுடியவில்லை…? இந்த கேள்வி ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளிலும் அங்கம் வகிக்கும் கடைநிலை முதல் உயர்நிலைவரை உள்ள உறுப்பினர்களும் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது… முஸ்லிம்களின் வாக்குகளை இஸ்லாமிய கட்சிகளே பிரிப்பதால் யாருக்கு என்ன நன்மை விளைய போகிறது என்பதை உணரவேண்டுமில்லையா?


நம்மைவிட வலிமைகுரைந்தவர்கள் அதிகாரங்களை கைப்பற்ற முடிகிறது என்றால் நம்மிடமில்லாத ஒருங்கிணைப்பு அவர்களிடம் உள்ளதுதான்

காரணம் இந்த உண்மையை  அறிந்தும் அறியாததுபோல செயல்பாடுகள் தொடருமேயானால் நாம் இன்னும் பின்னுக்கு தள்ளபடுவதை தடுக்கமுடியாது…

அரசியல் என்பது மிக சமயோசிதமாக கையாளப்படவேண்டிய துறை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய துறை… உரிமைகளை மீட்க்க போகிறோம் என்று மேடைதோறும் முழங்குவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது இஸ்லாமிய இயக்கங்கள் வீறுகொண்டு எழுவதற்கு முன்பாக அதாவது 1995 முன்பாக இருந்த முஸ்லிம்களின் அரசியல் நிலை என்பது இன்று இஸ்லாமிய இயக்கங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பிறகு பின்தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது… தமிழக சட்டப்பேரவையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கவேண்டியது முஸ்லிம்களின் விகிதாச்சாரம் ஆனால் இப்போதைய உறுப்பினர்கள் வெறும் ஐவர் மட்டும் என்பது பின்னடைவில்லையா…?


ஆரம்ப காலத்தில் கண்ணியதலைவர் காயிதேமில்லத் போன்றவர்களால் அரசியல் கற்பிக்கப்பட்டது இப்போது நாம் அரசியலை கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்… நாம் வாழக்கூடிய நாடு பல்வேறு சமூக மக்களையும் உள்ளடக்கிய கூட்டமைப்பு அதற்க்கேற்றவாருதான் முஸ்லிம்களின் அரசியல் நிலையும் அமையவேண்டும் அப்போதுதான் வெற்றிகள் நமக்காணதாகும் கண்ணியமான அரசியல்வாதிகளை அடையாளம்கண்டு கூட்டணிகள் உருவாக வேண்டும் அதற்கும் முன்னதாக வீதிகொன்றாக பிரிந்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைக்க படவேண்டும்… இவைகள் யாரால் சாத்தியமாகும் நிச்சயமாக அனைத்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்…


கடந்த உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர்.தொல்.திருமாவளவன் அவர்களின் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு உருவானது அது வெற்றிகண்டதா இல்லையா என்பது தேவையற்றது ஆனால் அதுபோன்ற கூட்டமைப்பு அவசரமான

அவசியம் என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டியது கட்டாயம்… விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலான உறுப்பினர்களை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி மூன்று நகர் மன்றங்களை கைப்பற்றியுள்ளது ஆனால் லட்சோப லட்ச தொண்டர்களை கொண்ட இஸ்லாமிய கட்சிகள் ஒரு நகர்மன்றத்தையோ குறிபிடும்படியான பேரூராட்சிகளையோ கைப்பற்ற முடியவில்லை ஏன்?  சிந்திக்கவேண்டியது கட்டாயம் மட்டுமல்ல கடமையும்கூட…

தோழர்.திருமா உருவாக்கிய கூட்டமைப்பு சிறப்பானது வெற்றிக்கான காரணி.. அத்தகைய கூட்டமைப்பை முன்னெடுக்க வேண்டியது தமிழக முஸ்லிம்களின் முக்கிய அமைப்புகளான தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவர்களின் கடமை… சமூகத்தின் மேம்பாட்டிற்காக மேற்கண்டவர்கள் செயலாற்றுவது உண்மையானால் தங்களுக்கான சுய விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு ஒருங்கிணைய வேண்டும்… அத்தகைய  ஒருங்கிணைப்பின் மூலமாவே நமது பலம் பிரியாமல் வளமான வெற்றிகளை தரும்…


முஸ்லிம்களை பொறுத்தவரை வலிமையான கட்டமைப்பு முஹல்லாஹ் ஜமாத்துக்கள் ஆக முஹல்லாஹ் ஜமாத்துக்களும் இயக்கங்களும் ஒருங்கிணைத்து செயல்கண்டாலே கோவையில் சாதிக்க முடிந்ததை தமிழகம் முழுமையும் சாதிக்க முடியும்… ஆம் அந்த சாதனை நகர்மன்றங்களை மட்டுமல்ல நாடாளுமன்றத்தையுமே நம் வசமாக்கும்… இன்ஷாஅல்லாஹ்

வேங்கை சு.செ.இப்ராஹீம் (நார்வே) 

Friday, October 28, 2011

இந்திய அகோரிகளை தொடர்ந்து நரமாமிசம் சாப்பிடும் சீனர்கள்!

அகோரிகள் என்கிற சாமியார்கள் மனிதர்களை கொன்று நரமாமிசம் சாப்பிடுவதை நாம் பல தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் பார்த்திருக்கிறோம். அது நம் உயிரை உறையவைக்கும் காட்சியாக இருக்கும்.

அவர்களை அடுத்து இப்போது
சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனித மிருகங்கள் ஒருபெண்ணை உயிரோடு ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கண்டம்துண்டமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள். இவர்களின் முன்னோடிகள் வேறு யாரும் அல்ல நமது இந்திய அகோரிகளே.

யார் இந்த அகோரி சாமியார்கள்!
 மேலே படத்தில் உள்ள அகோரி தன்னுடைய ஆண்குறியினால் பளுவினை சுமந்து காட்டுகிறார். அகோரி பாபாக்களின் உலகம் வேறு. மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம்.
 
காசியில் நள்ளிரவு தொடங்கியதும், “கும்பல் கும்பலாக உட்காந்திருக்கும் அகோரிகள் தவம் செய்யத் தொடங்கி பின்னர் நரமாமிசம் சாப்பிட தொடங்குவர். இந்த அகோரி சாமியார்கள் நிர்வாண கோலமா இருப்பதும் அவர்கள் நரமாமிசம் சாப்பிடுவதை பார்க்கும்போதும் நெஞ்செல்லாம் நடுநடுங்கி போகும்.

இந்த
அகோரி சாமியார்களை பற்றி சிலர் கூறுகின்றனர் இவர்கள் ஹிந்துமதஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்க்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை சொல்லி அகோரிகள் குறித்து சப்பை கட்டு கட்டுகிறார்கள். சிலர் இவர்கள் ஹிந்துமத சாமியார்களில் மிகவும் சிறந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள.

மனிதன் நாகரிகத்தின் உச்சியில் இருக்கிறான்
என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு உலகம் பல நவீன விஞசனா கண்டுபிடிப்புகளின் உச்சத்துக்கே சென்று விட்டது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த அகோரிகள் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டு நிர்வாணமாக நரமாமிசம் தின்று திரிவதை பார்க்கும் போது இவர்களை காட்டு மிராண்டிகள் அல்லது அவர்களை விட கேவலமானவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவை நாறடிக்கும் அகோரிகளை தொடர்ந்து
இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் கொடுமையை நடத்தி இருக்கின்றனர். இதை பார்க்கும்போது உள்ளம் நடு நடுங்குகிறது. மனித நேயம் செத்து விட்டதோ என்று என்ன தோன்றுகிறது. இதுபோல் உள்ள கொடியவர்களை பிடித்து உடனே தண்டித்தால்தான் உலகம் நிம்மதி அடையும். நமது இந்திய அகோரிகளுக்கு ஹிந்துத்துவா வக்கலாத்து வாங்குவதும், அவர்கள் கும்பமேளாவில் நிர்வாணமாக வளம்வருவதும் போன்ற செயல்கள் உடனே கடும் சட்டம் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நட்புடன் - இளங்கோவன்.

பயங்கரவாதத் தொடர்பை மறைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி

புது தில்லி, அக்.27: பயங்கரவாதிகளுடன் தங்களுக்குள்ள தொடர்பை மறைப்பதற்காக பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்-ம் முயற்சிப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் குற்றம்சுமத்தியுள்ளார். இதற்காக அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரை அவை பயன்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திக்விஜய் சிங் தனது இணையதளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சித்து இவ்வாறு எழுதியுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புண்டு. இந்த உண்மையை நாட்டு மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பதில் இரு அமைப்புகளும் முனைப்பு காட்டுகின்றன.

மக்கள் கவனத்தைத் திசைத் திருப்ப அவை திட்டங்களை வகுத்து செயல்படுகின்றன. அந்த வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ்சின் திட்டம் "ஏ'-தான் யோகா குரு பாபா ராம்தேவ். திட்டம் "பி' காந்தியவாதி அண்ணா ஹசாரே. திட்டம் "சி' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் தற்போது தங்களது திட்டத்தை நிறைவேற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை அதிகமாகவே பயன்படுத்துகின்றன. இப்போது "ஊழல் ஊழல்' என்று கோஷமிடும் பாரதிய ஜனதா தமது ஆட்சிக் காலத்தில் ஊழலை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு அப்படி அல்ல.

ஊழலை ஒழிக்கவும், தகவல் உரிமை சட்டத்தைத் திறன்படச் செயல்படுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்றுள்ளார்.

திக்விஜய் சிங்கின் இந்தக் குற்றச்சாட்டு பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக... இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், யாரெல்லாம் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்களோ,போராடுகிறார்களோ அவர்கள் மீது குற்றம்சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் திக்விஜய் சிங். அவரது இந்தச் செயலால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. காங்கிரஸ்தான் நம்பகத்தன்மையை மேலும் மேலும் இழக்கும் என்றார்.

பதில்கூற முடியாது... திக்விஜய் சிங்கின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய ஜனநாயக நாட்டில் ஒவ்வொருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கும் உரிமையும், சுதந்திரமும் உள்ளது. இதனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது என்றார்.

நன்றி: தினமணி

*குர்பானியின் சட்டங்கள் *

அன்பார்ந்த சகோதர்களே 

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

யார்மீது கடமை?

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி) அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா? என்று கேட்டார். ஆம் இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : பராஃ (ரலி) நூல் : புகாரி (955).

குர்பானி கொடுப்பது அவசியம் என்பதால் தான் ஆறுமாதக் குட்டியை மீண்டும் அறுக்குமாறு அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவசியமில்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு வலியுறுத்திருக்க மாட்டார்கள். வேறுசில அறிவிப்புகளில் திரும்பவும் அறுக்கட்டும் என்று கூறியதாக வந்துள்ளது.  யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (954)

ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) நூல் : புகாரி (5500)

தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் மேலுள்ள ஹதீஸில் அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டையிட்டுள்ளார்கள், இந்தக் கட்டளையும் குர்பானியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. நபி (ஸல்) அவர்கள் பயனத்திலும் ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள். இந்த நடைமுறை அதன் அவசியத்தை உணர்த்துகிறது..
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.  அறிவிப்பவர் : சவ்பான் (ரலி) நூல் : முஸ்லிம் (3649)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.  அறவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி (5554)

நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறவிப்பவர் பராஃ (ரலி) நூல் புகாரி (951)

குர்பானி கொடுக்கும் படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டையிடுகிறான். நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரியது என்ற விளக்கம் குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகள் அவர்களுடைய சமூகத்தாருக்கும் உரியதாகும்.
(
முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன் 108 : 1,2)

கடன் வாங்கி குர்பானி

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானதாகும்.  அல்லாஹ்வின் தூதரே நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : பைஹகீ (19021)

கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும். மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.
 
நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மார்க்கம் உபதேசிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (7288)

வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.  எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.  (அல்குர்ஆன் 2 : 286)

அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது.
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3498

Thursday, October 27, 2011

மோடியின் உண்ணாவிரத தொப்பிக்கதை உண்மையா இல்லையா?ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்ற பெயரில் நரபலி நாயகன் நரேந்திர மோடி பகல் நாடகம் நடத்தினார். உண்ணாவிரதம் இருப்பதற்கோ, ஊழலை உண்மையிலேயே எதிர்ப்பதற்காக இவர்கள் உண்ணாவிரதம் நடத்தவில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். இவர் கட்சியை சேர்ந்த எடியூரப்பாவே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது இவர்களது மூஞ்சில் கரியை பூசியது ஒரு பக்கம் இருந்தாலும் திருட்டு வேஷம் போடுவதற்குத்தான் இவர் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது பொது சிந்தனை உடைய அனைவருக்கும் தெரியும்.

இவர் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சில முஸ்லிம் தலைவர்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். முஸ்லிம்களுடைய ஆதரவும் எனக்கு உண்டு என்பதை வெளிக்காட்டுவதற்காக மோடி தன்னுடைய அபிமானி சிலரை அழைத்து தனக்கு ஆதரவு அளிப்பது போல் காட்டிக்கொண்டார். அதில் ஒருவர் முஸ்லிம்கள் அணியும் தொப்பி ஒன்றை நரேந்திர மோடிக்கு அனிவிக்க முயன்ற போது அதை மறுத்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் அனியும் தொப்பியை அணிய மறுத்தது நமக்கொன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை மாறாக அவர் அணிந்திருந்தால்தான் நமக்கு ஆச்சரியமே ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று சேக்கிழான் என்ற புத்தி கெட்டி அயோக்கியன் கட்டுரை எழுதியுள்ளான். இப்படி ஒரு சம்பவத்தை வீடியோ பதிவு செய்த எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தும் அவை அனைத்தையும் முட்டாளுக்கும் விதமாக கட்டுரை எழுதிவிட்டு வழக்கம் போல் நரேந்திர மோடி பஜனை செய்துள்ளான். அதில் நரேந்திர மோடிக்கும் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், குஜராத்தை வளர்ச்சிப்பாதையில் நரேந்திர மோடி கொண்டு செல்கிறார் என்றும் எழுதியுள்ளான்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் ஏற்பட்ட தீவிபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறி இந்துக்களை உசுப்பிவிட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் பொருளாதாரமும் சூரையாடப்பட்டது.


இதற்காக வழக்கம் போல் மத்திய அரசும் விசாரணை கமிஷனை ஏற்படுத்தியது. விசாரணையின் முடிவில் இரயில் பெட்டியில் உள்பக்கம் இருந்துதான் தீப்பிடித்திருகிறது என்றும் வெளியில் இருந்து கொண்டு யாரும் இரையில் பெட்டையை எரிக்கவில்லை என்று தெளிவான அறிக்கையை சமர்பித்தது. ஆனால் அதற்குள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.


இந்தக்கலவரத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள்:


1. முன்னால் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் 60 வயது மதிக்கத்தக்கவருமான் இஹ்ஸான் ஜாஃபரி அவர்களும் அவர்களுடைய வீட்டிற்குள் சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பி சென்ற 10ற்கும் மேற்பட்ட நபர்கள் இந்துத்துவ வெறியர்களால் கூறுகூறாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.


2. பெஸ்ட் பேக்கரி என்ற பிரசித்த பெற்ற பேக்கரி கடையில் ஜாஹிரா ஷேக் என்ற பெண்மணியின் தந்தை மற்றும் கணவர் உட்பட பலரும் தீவைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். பேக்கரி கடையும் தீக்கரையாக்கப்பட்டது. பின்னர் நியாயம் கேட்டுச்சென்ற ஜாஹிரா ஷேக்கின் மீதே வழக்கு திருப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


3. நிறைமாத கற்ப்பிணியாக இருந்த கவுஸர் பானு என்ற பெண்ணி வயிற்றை கிழித்து அதில் இருந்த சிசுவை சூழாயுதத்தால் குத்தி கொலை செய்து பெட்ரோ ஊற்றி எறித்துவிட்டு பின்னர் அந்தப்பெண்ணையும் தீயிட்டு கொழுத்தி கொலை செய்தனர்.


4. பல்கீஸ் பானு என்ற பெண்ணை பல வெறியர்கள் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வண்புணர்ச்சி செய்துள்ளனர்.

இவையெல்லாம் நடைபெற்ற பல சம்வங்களில் ஒரு சிலவை தான் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இத்தகைய சம்பங்களை ஒரு போதும் முஸ்லிம் சமூகம் மறந்துவிடாது.

ஆனால் இந்துத்துவ வெறிபிடித்த தீவிரவாதியான சேக்கிழான் கூறும்போது மோடி அரசு கலவரத்தை தடுக்க எல்லாவிதமான முயற்ச்சியையும் செய்தது என்று உளறியுள்ளான். கல்வரம் நடைபெற்ற பிறகு குஜராத்தில் நடைபெற்ற அநியாயங்களை வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் தெஹல்கா பத்திரிக்கையின் நிருபரான ஆஷிஷ் கேத்தான் என்பவர் மிகுந்த ஆபத்திற்கு மத்தியில் கலவரம் நிகழ்த்தியவர்களுக்கு மத்தியில் உரையாடி அவர்களது வாயாலேயே உண்மைகளை படம்பிடித்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். ஒவ்வொரு இந்துத்துவ தீவிரவாதியும் தன் வாயினாலேயே இத்தனை முஸ்லிம்களின் கொன்றோம் என்றும், இத்தனை பெண்களை கற்பழித்தோம் என்றும், இவற்றிற்க்கெல்லாம் நரேந்திர மோடி தான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார் என்றும் வாக்குமூலம் அளித்தனர்.

 
போதிய வலுவான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை நரேந்திர மோடி கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குஜராத் மாநிலத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சியை உச்சகட்டத்தை நோக்கி செலுத்துவது போன்ற மாயயை ஏற்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் மீது இத்துனை அட்டூழியங்களையும் செய்துவிட்டு முஸ்லிம்களுக்கு நான் எதிரானவன் அல்ல என்று பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்கும் நரேந்திர மோடியை ஒரு போதும் இந்த முஸ்லிம் சமூகம் மறக்காது. இத்துனை அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்ட பின்பும் இந்த முஸ்லிம் சமூகம் பொருமையாக இருக்கிறது என்றால் அது அவர்கள் இந்த நாட்டின் நீதித்துதுறையின் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். நிச்சயம் ஒரு நாள் மோடி தான் செய்த குற்றத்திற்காக தண்டனை அடைந்தே தீருவார்.
 

சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.

இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.

நாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள்.

எப்பொழுதும்போல் இந்தக் குண்டுவெடிப்பையும் "சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்தான் நடத்தின" என சங் பரிவாரத்தின் சுவடு பிடித்து ஆரம்பத்தில் அறிவித்தது. காவல்துறையின் ஐயப் பார்வையும் சிமியின் மீதே ஆரம்பத்தில் இருந்தது. சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தி வந்த மகாராஷ்டிரா காவல்துறைக்குக் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரைத் தேடிச் சென்ற வேளையிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒருவேளை மாலேகோன் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் சேஸ் எண்கள் கண்டு பிடிக்கப் படாமல் போயிருப்பின், இப்பொழுதும் இந்தக் குண்டுவெடிப்புப் பழியும் சிமியின் தலைமீதே விழுந்திருக்கும்.

"உண்மை நீண்டநாள் உறங்குவதில்லை" என்பது போல், சங் பரிவாரத்தால் நீண்ட காலமாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்புகளின் உறைவிடங்களைக் குறித்த உண்மை, எரிமலை போன்று வெடித்துச் சிதறி வெளியாகி உள்ளது.

உலக வாழ்வைத் துறந்து இறையடியைத் தேடி பிரயாணம் செய்பவர்களாக நாட்டு மக்களால் கருதப் பட்ட சாமியார்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய அமைப்பான இராணுவமும் கூட்டுக் களவாணித்தனம் செய்து சங் பரிவாரத்தின் தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தம்மை அடமானம் வைத்து விட்டன என்பதை மாலேகோன் குண்டுவெடிப்புத் தொடர் விசாரணைகளில் கைதாகும் இராணுவ அதிகாரிகளின் மூலம் தெளிவாகி வருகின்றன.

சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் ஈடுபட்டு, தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.

ஆனால், இந்து தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து நமது இராணுவமே நாட்டுக்கு எதிராகத் தீவிரவாதத்திலும் ஈடுபடுகிறது என்பதை மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வியின் விஷயத்திலிருந்து அறிந்து கொண்ட பொழுது நாடு அதிர்ச்சியில் உறைந்து விட்டது!.

குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் அரபி ஸ்டிக்கர்களை ஒட்டியது, அதை சிமியின் (பழைய) அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தது, "முஸ்லிம் தீவிரவாதி(!)களைக் கைது செய்" என்று கூச்சல் போட்டுக் காவல்துறையைத் திசை திருப்பியது, காவல்துறை சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்தது வரை எல்லாம் தங்கள் திட்டப்படி நடந்து கொண்டிருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாத சாமியாரினிகளைக் கைவசம் வைத்துள்ள இந்து தீவிரவாத அமைப்புகள்.

இந்து மதத் துறவியான ஒருவர், இந்துக்களால் ஏறக்குறைய ஒரு கடவுளைப்போல் கருதப்படுபவர். ஓர் இந்துத் துறவி இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலும் மாலேகான் குண்டுவெடிப்பின் ஆணிவேர் ஓர் இந்துத் துறவியான சாத்வீ ப்ராக்யா என்பதாலும் ஊடகங்கள் இப்போது 'இந்துத் தீவிரவாதி' என்று அவரையும் அவரின் கூட்டாளிகளையும் அடையாளப் படுத்தின.

"நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்றுதான் அழைக்க முடியும்" என்று சொல்லி, அத்தோடு இஸ்லாத்தையும் இணைத்து நேற்றுவரை தாங்கள் வைத்த குண்டுகளுக்கு இஸ்லாமியர்களை இரையாக்கி வந்த சங் கூட்டம் இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பி விட்டதைப் பார்த்து விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

மாலேகோன் குண்டு வெடிப்பில் துர்காவாகினியின் சாமியாரினி சாத்வி பிடிபட்டவுடன், காந்தியைக் கொன்ற கோட்சேயை, "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல" என கழட்டி விட்டது போன்று, "எங்களுக்கும் சாத்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என கழட்டி விட்ட சங் அமைப்புகள், அவ்வாறு "குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்களை இந்துத் தீவிரவாதி என அழைக்கக் கூடாது" எனவும் முராரி பாட ஆரம்பித்து விட்டன.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல், நேற்று வரை தாங்கள் செய்த கயமைத்தனங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தை படிக்க.. "இஸ்லாமியத் தீவிரவாதி" என காவு தந்து கொண்டிருந்த தேச விரோத கும்பலுக்கு இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பியவுடன் அதன் வலி தெரிகிறது போலும்.

தமிழகத்தில் இந்துத் தீவிரவாதத்தை முழு நேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் இந்து தீவிரவாத அமைப்பான இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் "இந்துத் தீவிரவாதம்" என்ற சொல்லைக் கேட்டவுடன் கதி கலங்கிப் போய் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:

"இந்து மற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை.

மாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும்.

இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும்.

மத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
 "

முன்னர் இதே இந்துத் தீவிரவாதிகள் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பலிகடாவாக்கப்பட்டபோது "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தங்களின் அடையாளமாக ஆக்கிக் கொண்ட வேளையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து, "இஸ்லாம் என்றால் சமாதானம், அமைதி என்று பொருள். இஸ்லாம் உலகில் சமாதானத்தையே விரும்புகிறது; அது சமாதானத்தையே போதிக்கிறது; தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நேர் எதிர் முரணான அவ்வாசகங்களை உபயோகிக்கக் கூடாது" என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளாத இந்தக் கயவர் கும்பலின் மேற்கண்ட வாசகங்கள் எவ்வளவு போலியானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடி ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்துத் தீவிரவாதிகள், நாட்டின் ஒருமைபாட்டையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குறித்து இப்போது அச்சம் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு தேர்ந்த நடிப்பு என்பதும் அனைவருக்கும் விளங்கும்.

நாட்டின் சமாதானத்தினையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரே காரணத்திற்காகத்தான், இந்நாட்டின் விடுதலைக்காக இரத்தத்தால் காவியம் படைத்த இஸ்லாமிய தியாகச் சமுதாயம், நாட்டு விடுதலைப்போரில் ஆங்கிலேயனுக்குக் கோவணம் தூக்கி அலைந்த பார்ப்பனீய தேச விரோதிகளின் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற பொருந்தா, அநியாயப் பொய் குற்றச்சாட்டையும் பிரச்சாரத்தையும் கேட்டு அவமானப்பட்டாலும் கொதிக்காமல் அமைதி காத்து வந்தது.

எனவே, நாட்டு ஒற்றுமையை முன் நிறுத்தி இந்த இந்து முன்னணித் தீவிரவாதி கோரிக்கை வைத்துள்ளதால், அதனைப் பரிசீலிக்கும் விதத்தில்,
இந்துத்துவ சிந்தனையாளர்கள் அனைவரையும் இந்து தீவிரவாதி என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

நன்றி: சத்தியமார்க்கம்

Wednesday, October 26, 2011

தலித்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பகையை மூட்ட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

பல்வேறு சமூக, கலாச்சார, மத கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய மக்கள் இந்தியாவில் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கம் சிறு வயது முதலே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாக்கியமோ வெறும் மேடை பேச்சுக்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மத மோதல்கள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய  காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ வெறி பிடித்த தீவிரவாதிகள் தான் என்றால் அது மிகையாகாது.
 
மதக்கலவரம், குண்டுவெடிப்புகள், சிறுபான்மை மக்களின் படுகொலைகள், இந்திய வளங்களை சுரண்டக்கூடிய ஊழல்கள் இப்படி எதை எடுத்தாலும் இந்த அயோக்கிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பங்கு அதிகம் என்பது ஆராய்ந்து உணரக்கூடிய மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். தாங்கள் எந்த மதத்தினருக்கும் குறிப்பாக சிறுபான்மை மதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய இணையதளங்களுக்குள் சென்று பார்வையிட்டாலோ, அல்லது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச்சென்று பார்வையிட்டாலே சிறுபான்மை சமூகத்தின் மீது அவதூறையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

இந்த நாட்டிலே அமைதி சீர்குலைந்ததற்கு காரணமே ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கமும் அதோடு தொடர்புடைய மற்ற இயக்கங்களும் தான். வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியாவில் தங்களது முகவரியை துளைத்துவிட்ட இந்த பரதேசிகள் எப்படியாயினும் தென்மாநிலங்களை வட மாநிலங்களைப் போல் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டுவருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களாக இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்குமிடையே பகையை மூட்டும் வேலையில் தற்போது இறங்கியுள்ளனர் இந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள். பார்பன வெறிபிடித்தவளான ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தது இந்த பரதேசிகளுக்கு ஒரு புது தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது போலும்.

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பல வார்டுகளை ஒன்றினைத்தும் பல வார்டுகளை பிரித்தும் புதிய வார்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்டே முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் வார்டுகளை பிரித்து எந்தப்பகுதியிலும் முஸ்லிம்கள் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்ற நிலை கோவை மாவட்டத்தில் குறிச்சி மற்றும் குஞ்சாமுத்தூர் ஆகிய பகுதிகளில் அதிக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்தந்த வார்டுகள தனித்தனியாக பிரிக்கப்பட்டு மற்ற வார்டுகளோடு இணைக்கப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் அந்தந்த வார்டுகளை தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்ட வார்டாக அறிவிக்கப்பட்டது. 20,000 வாக்காளர்களை கொண்ட அந்த வார்டில் 90%  முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆனால் அது தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்டதை கண்டித்து அந்த வார்டு மக்கள் தேர்தலை புரக்கணிக்கப்போவதாக அறிவித்தார்கள்.

ஆனால் தலித் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பது போன்ற செய்தியை கேடுகெட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களும் தலித்களும் ஒன்றினைந்து கூட்டணியாக செயல்பட்டனர். இதை சீர்குழைக்கும் விதமாக தவறான செய்திகளை பரப்பும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அனைத்து சமுதாய மக்களும் ஒன்றினைந்து போராட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஒழிந்தால் தீவிரவாதம் ஒழியும்!
தீவிரவாதம் ஒழிய ஆர்.எஸ்.எஸ் ஒழிக்கப்படவேண்டும்!

ஜெய்ஹிந்த்!

Tuesday, October 25, 2011

சமூக நீதிக்கான பிரச்சாரம் தமிழகத்திலும் தொடங்கியது

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடைபெற்றது.

வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்  தேசத்தின் தலைநகரமான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்ற முழக்கத்தோடு "சமூக நீதி மாநாடு (SOCIAL JUSTICE CONFERENCE ) நடக்க‌ இருக்கின்றது. இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் செய்தியையும் இந்தியாவில் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதன் பிரச்சாரம் வீரியத்துடன் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்திலும் இதன் பிரச்சாரம் நேற்று முதல் தொடங்கியது. திருவல்லிக்கேணி பகுதி ஐஸ்ஹவுஸ் ஷேக் தாவூது தெருவில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள். தலைமை தாங்கி உரை நிகழ்த்திய மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் கூறும்போது இன்றைய தினத்தில் பிறப்ப‌டுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளை புள்ளிவிபரங்களோடு எடுத்துக்கூறினார். அனைத்து மக்களுக்கும் சம நீதி என்ற இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டத்தின் விதிமுறைகள் வெறும் ஏட்டளவில் தான் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ‌சிறுபான்மை மக்களின் நிலையை அறிந்து கொள்ள மத்திய அரசு எண்ணற்ற கமிஷன்களை ஏற்படுத்தியிருந்தும் அந்தந்த கமிஷன்கள் தங்களது அறிக்கையை சமர்பித்த பின்பும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையை எடுக்காததும் நீதி மறுக்கப்படுவதற்கான ஒரு செயலேயாகும் என்றும் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கே.பி.ஷரீஃப் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இந்திய அரசியல்வாதிகளால் மக்கள் எந்தளவிற்கு சிரம்மபடுகிறார்கள் என்பதை எடுத்துக்கூறினார். பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தான் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகிறது எனக் கூறினார்.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் உரை நிகழ்த்தும் போது வரலாறுகளில் முஸ்லிம்களின் தியாகத்தை பற்றி சாட்சிக் கூறினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது நீதிக்கான போராட்டத்தை துவக்கியுள்ளது. இதற்காக அவர்கள் நிறைய தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். அதற்கு மதிமுக எப்போதும் ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

ஜமிய்யத்துல் உலமாயே ஹிந்தின் பொதுச்செயலாளர் மன்சூர் காஷிஃபி அவர்கள் உரை நிகழ்த்தும் போது பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்ட அஃப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம் சமூகத்திற்கு நீதி மறுக்கப்பட்டு வருவதற்கு சாட்சியாகும் என்று குறிப்பிட்டார்.
 
இறுதியாக உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தும் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூரில் வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாட்டை நடத்தியது அதன் விளைவாக இன்று வட இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் வேகமாக இன்று கால்பதித்து வருகிறது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் "தேசிய அரசியல் மாநாட்டை" நடத்தியது. இதன் விளைவாக இன்று சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றினைந்து  சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) என்னும் அரசியல் பேரியக்கம் உருவாக அடித்தளமாயிருந்தது. தற்போது தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்ற முழக்கத்தோடு தலை நகராமாம் புதுடெல்லியில் நடக்க இருக்கும் மாநாடு ஒரு வரலாற்று திருப்புமுனையாக திகழும் என்பதாக கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சென்னயில் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் உதவித்தொகையினை வழங்கினார். இறுதியாக சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த பொதுக்கூட்டம் நிறைவுற்றது.. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.‌

படிப்பு உதவித்தொகை (ஸ்காலர்ஷிஃப்) வழங்குகிறார் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்

Monday, October 24, 2011

தொழுகையின் முக்கியத்துவம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
                 
                        "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
 
   'இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)
 
'நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)
 
What is the difference between Muslims and Others?
 
    தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா?. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே!
 
அல்லாஹ் சொல்கின்றான்...
 
   நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை.
(
நிஸாஃ 142ம் வசனம்)
 
    நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா?
 
 அல்லாஹ் கூறுகின்றான் ..
    'நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா? (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)
                                                                   
 
    'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (ஆதாரம் முஸ்லிம்)
 
  அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!..
 
. 'யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)

    என்னருமைச் சோதரனே! நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார்?. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?
நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!
 
    'ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்) .
 
*******************************************************************************************************************


இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


"ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்
!"