Tuesday, November 27, 2012

அமெரிக்காவின் அத்துமீறல்: ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு

தெஹ்ரான்:சர்வதேச சட்ட திட்டங்களுக்கு எதிராக நடப்பதாகவும், கடற்பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ஐ.நாவுக்கான ஈரான் தூதர் முகமது கஸாயி கடிதம் எழுதி உள்ளார்.இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்க கடற்படையினர் ஈரான் நாட்டின் வான்பகுதியில் அத்து மீறி நுழைகின்றனர்.

கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புஷ்ஹெர் நகரின் வான்பகுதியில் அக்டோபர் மாதம் 7 முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா நடந்து வருகிறது. இந்நடவடிக்கையினால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படின் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை ஐநா கண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையிலும் ஈரானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

Friday, November 23, 2012

கசாபுக்கு தூக்குதண்டனை சரியா? தவறா?

போபால் விசவாய்வு கசிவில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்ற அமெரிக்கர் அன்டர்சன் சுகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். கசாபுக்கு அவசர அவசரமாக தூக்கு!

மனசாட்சி இல்லாத அரசியல்வாதி: கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவை அழிக்க நினைத்தவன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன். இந்த தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றி இருக்கப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றி இருந்தால் நமது நாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு அது பாடமாக அமையும் என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி உள்ள அரசியல்வாதி: அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மரணத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட24 மணி நேரத்திற்குள் கஸாபை தூக்கிலிட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: ஒரு மனிதனை கொல்வதை பார்த்து மகிழ்கிறேன் என்று ஒரு காந்தியவாதி சொல்கிறார். காந்தி அஹிம்சையை போதித்தவர். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கும் போதும் அகிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் வந்த காந்தியவாதி அன்னா ஹசாரேக்கு ஏன் இந்த கொலைவெறி? இப்படி இவரை பேசத்தூண்டுவது எது? யார்?

பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்க படவேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் இதைப்போல் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை மதக்கலவரங்கள் மூலம் கொன்ற மோடி, அத்வானி போன்றோருக்கு பொது இடத்தில் தூக்கு கொடுக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகொள் விடுப்பாரா? இப்படி இவரை பேச தூண்டாதது எது?

கசாபின் தூக்கை எதிர்த்து கருத்து சொல்ல பெரும்பான்மையான அரசியல்வாதிளுக்கு தைரியம் இல்லை. அப்படி கருத்து சொன்னால் தேசபக்தி என்கிற முகமூடி தரித்த பார்பன ஊடகங்களும், பார்பன அரசியல் ஆதிக்க சக்திகளும், ஹிந்துத்துவாவை உருவாக்கி அதன் தலைமை பீடங்களை அலங்கரிக்கும் அவாள்களும் தங்கள் மீது பாய்வார்கள். இதன் மூலம் தங்களை தேசதுரோகி என்று பட்டம் கெட்டுவர் என்கிற பயமே. இது போன்ற தருணங்களில் தைரியமாக கருத்து சொல்லும் வைகோ போன்றவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அது
கடுகளவு கூட இந்தியாவில் இல்லை.
 *மலர் விழி*

Monday, November 19, 2012

உதவாக்கரை இந்திய ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துப்பாக்கி!

உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக்கி.

தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந்திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார்களா?

இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் நமது காமடி பீஸ் விஜய் சம்மதிப்பாரா?

நீங்கள் ஹீரோக்கள் ஆகவேண்டும், அரசியலில் நுழைய வேண்டும், கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உணமைகளை மறைத்து, வரலாறுகளை திரித்து எடுக்கப்படும் படங்களில் கூச்சம் இன்றி நடிப்பீர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க போறேன் பேர்வழி என்று படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார் வெத்து வெட்டு விஜயகாந்து.

ஆக்சன் கிங் அர்ஜூன் இவர் தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர். இவர் படங்களில் பெரும்பான்மையில் இசுலாமிய தீவிரவாதிகள் வந்துவிடுவார்கள். அதுசரி இந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பற்றி ஒருபடமும் எடுக்கப்படவில்லையே. சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்பு முதல் மலேகன் குடுவேடிப்பு வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இந்திரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் கம்பி எண்ணுகிறார்கள்.

உண்மை இப்படி இருக்க இசுலாமிய தீவிரவாதிகள் குண்டுவைப்பதாக படம் எடுக்க இவர்களை தூண்டுவது எது? இதற்க்கு சூத்தரதாரியாக இருந்து செயல்படுபவர்கள் யார்? நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது தெளிவான இச்சூழலில் இதை மறைக்க சித்தாந்த ரீதியான  ஒரு யுத்தத்தை RSS நடத்தி வருகின்றது. RSSசின் பின்புலத்தில் செயல்படும் சில கலைத்துறையினர் இது போன்ற படங்களை இயக்கி வருகின்றனர்.

எந்த மதத்தினரும், பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடும் எவரும் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தின் ஆணிவேர் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவதும், ஆட்சியாளர்கள் சொந்த மக்களுக்கே அநீதி செய்வதாலுமே ஏற்ப்படுகின்றது. மற்றபடி துப்பாக்கி ஒரு சாதாரண மசாலா துக்கடா படமே. இதற்காக முசுலிம் நண்பர்கள் கலைதுறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது காட்சிகளை நீக்க சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு இலவச விளம்பரமாக அமையும் என்பதே எனது மேலானா கருத்து.

கடந்த முறை ஏழாம் அறிவை கொடுத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த முருகதாஸ் இந்தமுறை துப்பாக்கிக்கு இரையாகி போனார்.

*மலர் விழி*

Friday, November 16, 2012

BJP & RSS ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!

பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி என்றே பலராலும் நம்பப்பட்டு வருகிறது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடி என்ற கருத்து எழுப்பப்படும் பொழுதெல்லாம் அதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக மறுத்தே வந்துள்ளது.
 
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது எங்களுக்கு மரியாதை உண்டு, ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டும் என்று எங்களுக்கு கட்டாயமில்லை, அவர்களும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியினர் பகல் வேஷம் போட்டு வந்தனர்.
 
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் உழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்றதும் அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பொழுது நிதின் கட்கரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தில் அவர் உயர்ஜாதி என்பதால் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில் நிதின் கட்கரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுளை விசாரிக்கும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான குருமூர்த்தியிடம் ஒப்படைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி விவகாரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். எப்படி தலையிட முடியும்? அதுவும் கட்சியின் அகில இந்திய தலைவர் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் இவர்கள் கைகளுக்கு எப்படி போனது?
 

இதில் இருந்து ஒன்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் அரசியல் முகமூடியே!  இதை வெளிப்படியாக காட்டி கொள்ளாத பாரதிய ஜனதா, முஸ்லிம் லீக் போல் நாங்களும் ஒரு கட்சி என்று சொல்லி இந்து மக்களின் ஓட்டை நயவஞ்சகமாக பெற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. பாரதிய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் வேறல்ல! இவைகள் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!.

Saturday, November 10, 2012

கோலாகலமாக நடக்கும் 31-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி!

ஷார்ஜா:ஷார்ஜாவில் 31-வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 7-ம் தேதி துவங்கியது. ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பல நாடுகளின் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள் அதிக ஸ்டால்களைப் போட்டுள்ளதால் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியுள்ளது.

ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 7 முதல் 17-வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 பதிப்பகங்கள் பங்குபெற்றுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் முதல் 26 வரை நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் 42 நாடுகளிலிருந்து 720 பதிப்பகங்கள் கலந்து கொண்டன. ஆனால் இந்த முறை 20 நாடுகளும், 204 பதிப்பகங்களும் அதிகபடுத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அல் தாவூன் மாலுக்கு அருகிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மொத்தம் 40,000 பார்வையாளர்களும், 10,000 மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு நூற்களின் விலையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.
வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.

கடந்த 9-ம் தேதி வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வமாகப் புத்தகங்களை வாங்கினர். அரபுலகின் பிரசித்தி பெற்ற தாருஸ்ஸலாம் பதிப்பகத்தின் ஸ்டாலில் நல்ல பல ஆங்கில, அரபி நூற்கள் உள்ளன. மலையாள பதிப்பகங்கள் அதிகமாகப் பங்கெடுத்துள்ளதால் இந்தியன் பெவிலியனில் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியன் பெவிலியனில் ஹால் எண்:5-ல், ஸ்டால் எண்:7-லுள்ள மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் தமிழ் பதிப்பகமான இலக்கியச்சோலையின் தமிழ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படையில் நேர நிர்வாகம் குறித்து முதன்முதலில் தமிழில் வெளிவந்துள்ள நூலான “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” மற்றும் “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “கோவை:போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்”. “மனதோடு மனதாய்”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “இப்பி பக்கீர்” முதலான இலக்கியச்சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இலக்கியச்சோலை பதிப்பகத்தின் காப்பாளர் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் அப்பதிபகத்தின் ஸ்டாலை பார்வையிட்டார். தங்களது வெளீயீடுகள் பற்றியும், இப்பொழுது தயாராகி கொண்டிருக்கும் புதிய புத்தகங்கள் பற்றியும் அங்கிருந்த பார்வையாளர்களுடன் உரையாடினார்.

நமது தூது நிருபர்களுடன் ஒருசில நிமிடங்கள் கலந்துரையாடினார். அதில் இலக்கியச்சோலை பதிப்பகம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு “இலக்கியச்சோலை என்பது தமிழ் கூறும் நல் உலகின் வாசகர்களுக்கு ஒரு விடியல். மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறுகளை தோண்டியெடுப்பதும், சத்தியத்திற்காய் உழைத்த மாவீரர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படை அம்சங்கள், உண்மையின் பிம்பங்களை உலகிற்கு உரைப்பது தான் இலக்கியச்சோலை என்றார்.

இம்மாபெரும் கண்காட்சியில் பங்குபெறும் ஒரே தமிழ்பதிப்பகம் இலக்கியச்சோலை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 9, 2012

பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!

பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான "சார்மினார்" வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.

இதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது "குர்பானி" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.

இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்பு கோவில்" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .

சிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.

பதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

சார்மினார் Sultan Muhammad Quli Qutb Shah மன்னரால் 1591 ல் கட்டப்பட்டது.

Tuesday, November 6, 2012

நீயா! நானா! ஜெயிக்க போவது யாரு?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. அமெரிக்காவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். ஒருவர் அதிபராக 2 முறை பதவி வகிக்கலாம்.
 
அமெரிக்காவில் மொத்தம் இரண்டே கட்சிகள்தான் ஒன்று குடியரசு கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. ஜனநாயக கட்சி சார்பில் 2வது முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார்.
 
அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளது. அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்க அரசியல் நிர்ணய சபை என்று ஒன்று உள்ளது. அந்த சபையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 538 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார். அந்த சபைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். மொத்தம் உள்ள 538 இடங்களில், 270 பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவரே அதிபராவார்.
 
இந்நிலையில், அனல் பறக்கும் பிரசாரம் நேற்று இரவு முடிந்த நிலையில், 50 மாகாணங்களில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக  தற்போதைய அதிபர் ஒபாமாவும் எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும்  சூறாவளி பிரசாரம் செய்தனர். எனினும், இருவருக்கும் சம பலத்துடன் இருப்பதாக கருத்து கணிப்புகள் தகவல்  வெளியாகி உள்ளது. சில மாநிலங்களில் ஒபாமாவுக்கும் சில மாநிலங்களில் மிட் ரோம்னிக்கு ஆதரவு அமோகமாக உள்ளது. எனினும், வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் மாநிலமாக ஓஹியோ அமைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிந்திக்கவும்: அமெரிக்காவை ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாள் என்ன? எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சும்மா ஒரு செய்திக்காக சொல்லி வைத்தேன் ஐயா. அது சரி நமக்கு நிச்சயமா கவலையில்லை ஆனால் நம்ம மண்ணு மோகன் சிங்கு வகைரா எதிர்பார்த்து காத்து கிடக்கிறதே!

Monday, November 5, 2012

நீதிக்கான முழக்கம் - மண்டல மாநாடு : சென்னையில் திரண்ட மக்கள் வெள்ளம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் ‘குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம்’ ‘நீதிக்கான முழக்கம்’ என்ற கோஷத்தோடு சென்னை மண்டல மாநாடு 4.11.2012 அன்று வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில் காயிதேமில்லத் திடலில் வைத்து நடைபெற்றது.

இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் S.M. ரஃபீக் அஹமது , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானிஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் K.S.M. இப்றாஹீம்


காலை 10 மணிக்கு மாநாட்டு திடலில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மாலை 5.00 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் மாநாடு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில பொருளாளர் K.S.M. இப்றாஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி தலைமையுரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பியதில்லை என்பதே வரலாறு நமக்குப் பகரும் சாட்சியாகும். நமது நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித் மற்றும் முஸ்லிம்களை முன்னேற்ற அரசும் பயனுள்ள முயற்சிகளை எடுப்பதில்லை. இந்த சமூகங்களை முன்னேற்ற பாடுபடக்கூடிய கட்சி மற்றும் இயக்கங்களையும் நசுக்குவதில் குறியாக உள்ளது. அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பல நெருக்கடிகளை அரசு மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள். நமது இந்திய ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு சிறிதளவும் மாறுபடாத வகையில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். இத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கு தலித் சமுதாயம் துணை நிற்க தயாராக உள்ளது என்பதை இம்மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல். திருமாவளவன்


பின்னர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானி அவர்கள் தனது உரையில், உளவுத்துறையிலும் காவல்துறையிலும் உள்ள அதிகாரிகள் ஒருசார்பு நிலையில்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானி



SDPI மாநில பொதுச் செயலாளர் S.M. ரஃபீக் அஹமது அவர்கள் பேசும் போது, “முஸ்லிம்கள் சுரண்டலுக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும் போராடுபவர்கள். இந்த போராட்டத்தில் நிச்சயம் முஸ்லிம்களே வெற்றி பெறுவார்கள்“ என்று கூறினார்.

அடுத்து பேசிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல் தனது உரையில், “அரசியல் சாசன சட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவுகூரும் முகமாகவும் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தினோம். UAPA போன்ற கருப்புச் சட்டங்களால் அநியாயமாக கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்படும் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறோம். இதுமட்டுமின்றி கல்வி, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டை குறி வைக்கின்றனர். பல்வேறு அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். ஒடுக்கப்பட்டோர் சக்தியடைவதற்கெதிரான சதிகளை முறியடிக்க தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது உரையில், “தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மறு உருவமே பாப்புலர் ஃப்ரண்ட் என்று சில வகுப்புவாத சிந்தனையுடைய அதிகாரிகள் சித்தரித்து வருகின்றனர். ஆனால் 2001ம் ஆண்டு சிமியை தடை செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 1989ல் இருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் சமூகப் பணிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா


இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் S. சஃபியுல்லாஹ் இருவரும் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தனர். நிறைவாக பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் E. ஷாஹித் முஹம்மது நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. இம்மாநாட்டில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Saturday, November 3, 2012

அநியாமாக உடைத்து நொறுக்கப்பட்ட முஸ்லிம் கடைகள்: காவி பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஹைதராபாத்:ஹைதராபாத்தை அடுத்த தப்பசபூத்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் “தீ” வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த 10 தினங்களாகவே குர்பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28-ம் தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில் உள்ள “தர்கா”வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்,
இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது.

கலவரக்காரர்கள் “கன்னடம்” மற்றும் “மராட்டிய” மொழிகளில் குரல் கொடுத்த வண்ணம் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர், நிலைமையின் கடுமையை உணர்ந்த, மேற்கு மண்டல டி.ஸி.பி., ஸ்டீபன் ரவீந்தர், ஏ.ஸி.பி.டி., ஸ்ரீனிவாஸ், ஆகியோர் தலைமையில், ஏ.ஸி.பி.டி., நாகராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,

காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. என்றாலும், கலவரம் பரவாமல் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னடம் மற்றும் மராட்டிய மொழி பேசக்கூடிய கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களை யார் அழைத்து வந்தனர்? போன்ற கேள்விகளுக்கு, பதில் தெரியாமல் முஸ்லிம்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Thursday, November 1, 2012

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம் – மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!

புதுடெல்லி:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ரஹ்மான் கான் பி.டி.ஐ செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியது: “இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே நிவாரணம் அல்ல. இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாகும். 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அரசு தரப்பின் சட்ட நடைமுறை வீழ்ச்சிகளை பிரதிபலிக்கிறது.

நீதிமன்ற தீர்ப்பு உள் ஒதுக்கீட்டை நிராகரிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் யார்? என்பதை தீர்மானிக்கும் அளவுகோல் திருப்தி அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான ஆய்வின் அடிப்படையிலேயே கர்நாடகா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தெரிவுச் செய்யப்பட்டனர். இதனடிப்படையில்தான் கர்நாடகா மாநிலத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான உச்சநீதிமன்றம் மற்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு காரணமானது சில சட்ட நடைமுறை தவறுகளாகும்.

எனது அமைச்சகம், இரண்டு தீர்ப்புகள் குறித்தும், நாட்டின் சமூக-பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலைமைக் குறித்து  அறிவியல் பூர்வமாக ஆராயும். இந்தியாவில் வக்ஃப் போர்டுகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவர குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.” இவ்வாறு ரஹ்மான் கான்  கூறினார்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முஸ்லிம்களை தொடர்ந்து வெறுப்பேற்றி வரும் இடஒதுக்கீடு குறித்த வெற்று வாக்குறுதிகளின் பட்டியலில் புதிதாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள ரஹ்மான் கானின் பேட்டியும் இடம் பிடிக்குமா? என்பது அவரது தொடர் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும்.