Thursday, January 10, 2013

வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க வலுவான சட்டம் தேவை – இமாம்ஸ் கவுன்சில்!

வக்ஃப் சொத்துக்களை அதிகாரிகளை பறிமுதல் செய்வதை தடுக்க வலுவான வக்ஃப் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னையில் நடந்த ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் அவர். மேலும் அவர் கூறியது: “டெல்லியில் கெளஸியா மஸ்ஜிதும், காலனியும் இடித்த அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. மஸ்ஜிதும், காலனியும் உடனடியாக மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடூபடுவதற்கான வழியை திறந்துள்ளது என்று பொதுச் செயலாளர் பேராசிரியர் மவ்லானா ஷாஹித் கூறினார். ஆனால், இந்த எதிர்ப்பு டெல்லி சம்பவத்தில் மட்டும் ஒதுங்கிவிடக்கூடாது. கஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், குஜராத், ஒடீஸா உள்பட நாட்டின் இதர பகுதிகளுக்கும் தேவை என்று அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க ஒழுக்க வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்தல்

2.பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதியை நிலைநாட்டவேண்டும்

3.முஸ்லிம்களுக்கு போதுமான இட ஒதுக்கீட்டை வழங்க ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்துதல்

4.வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுதல் 

5.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தலைமையில் நபிகளாரின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பிரச்சாரம் நடத்தப்படும். ‘நேசத்திற்குரிய நபி’ என்ற தலைப்பில் நடத்தப்படும் பிரச்சாரத்தில் நபி(ஸல்) அவர்களின் சமூக மாற்றத்திற்கான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.

இக்கூட்டத்தில் செயலாளர்களான மவ்லானா ஷாஹுல் ஹமீத் பாகவி, மவ்லானா அஸ்ரார் ஃபலாஹி, மவ்லானா மாஜித் காஸ்மி மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment