தற்போதுள்ள நிலையில் கலவரம் இல்லாத இந்தியா என்பது வெறும் கனவாகவே உள்ளது. எல்லா வருடங்களைப் போலவும் சென்ற வருடம் அதாவது 2011-ம் ஆண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக பல கலவரங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 1992 -93-ம் ஆண்டு நடந்த மும்பை கலவரங்கள் போன்று மற்றும் 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் போன்று எதுவும் நடைபெறவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும். அதற்கு சிவசேனா மற்றும் பிஜேபி போன்ற கட்சிகள், முன்பு நடத்தியது போன்று பெரிய அளவில் கலவரங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதே காரணம்.
கடந்த 2011-ம் வருடத்தில் முதலில் ஜனவரி 13-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் உமர்கடியில் சில ஹிந்து இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை ஈவ் டீசிங் செய்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததில் இருபிரிவினரும் கல்லெறிதலில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை அதிகாரி தியோகட்டே திறமையாக செயல்பட்டு கலவரத்தை கட்டுபடுத்தியதுடன் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகளை பெற்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
மேலும் பிப்ரவரி 7-ம் தேதி பாதிரியார் ஒருவருக்கும் முஸ்லிம் ரிக்சா ஓட்டுனர் ஒருவரும் சிறிய தகராறு ஏற்பட்டது. இதற்கு முஸ்லிம் ஹிந்து மதச்சாயம் பூசப்பட்டதால் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வந்து கல்லெறிதலில் ஈடுபட்டதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வீடுகள் , கடைகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் இக்கலவரத்தில் பழங்குடியினரும் தாக்கப்பட்டனர். மேலும் போலிஸூம் கலவரக் காரகளுடன் சேர்ந்து முஸ்லிம்கள் மீது லத்தி சார்ஜில் ஈடுபட்டனர். இதில் பெருமளவு முஸ்லிம்களின் சொத்துக்களே சேதப்படுத்தப்பட்டன.
மிகவும் பதட்டமான பகுதியான குஜராத்தின் பரோடாவில் பிப்ரவரி 16-ம் தேதி ஈத் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த வாயிலை தீவைத்து எரித்ததால் கலவரம் மூண்டது. மேலும் இப்பகுதியில் முஸ்லிம்களும் கஹர்களும் அடிக்கடி மோதிக் கொள்வது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மார்ச் 2-ம் தேதி மீலாது நபி விழா சமயத்தில் கொடிகளையும் போஸ்டர்களையும் கிழித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னொரு பதட்டமான பகுதியான ஔரங்காபாத்திலும் கடந்த மார்ச் 20-ம் தேதி முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் பெண்களும் எஸ்.பி. கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது பர்தா அணிதிருந்த முஸ்லிம் பெண்கள் மீது கலர் பொடிகளை தூவி கேலிசெய்தனர். மேலும் இவர்களை தடுக்க முயன்ற இளைஞர்கள் மீது கத்தி போன்றவற்றால் தாக்குதல் நடத்தியதில் 4 மாணவர்கள் பலத்த காயமுற்றனர். மேலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மும்பை தாராவி பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் நடத்தப்பட்டது.
மேலும் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மீருட் அருகில் மஸ்ஜித் ஒன்றில் 3 பேர் வந்து தண்ணீர் கேட்டனர். குளிர்ந்த தண்ணீர் தரவில்லை என்பதற்காக அங்கிருந்த இமாம் மற்றும் சில குழந்தைகள் உட்பட அனைவரையும் அடித்து உதைத்தனர். அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 8-ம் தேதி ஜூலை மகாராஷ்டிரா ஆந்திரா எல்லையில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தில் 6 முஸ்லிம்களை எபிவிபி மற்றும் பிஜேபியின் மாணவர் அமைப்பும் சேர்ந்து உயிருடன் தீவைத்து எரித்தனர். மேலும் கடந்த ஜூலை 12-ம் தேதி ஆக்ராவில் மண்டலா பகுதியிலும் கலவரம் நடந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 8-ம் தேதி மொராதாபாத்தில் சிலர் முஸ்லிம் முஹல்லாவின் வழியாக கங்கை நீரை எடுத்துச்செல்ல முயன்றபோது நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். மேலும் அன்று இரவு முஸ்லிம்கள் தராவிஹ் தொழுகைக்கு வந்தபோது ஹிந்துக்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் கலவரம் ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் தீக்கு இரையாயின.
மேலும் ஆகஸ்ட் 22-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திலும் மற்றும் உத்திர பிரதேசத்தில் 25-ம் தேதியும் இரு பிரிவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு மதச் சாயம் பூசப்பட்டதால் அங்கு கலவரம் ஏற்பட்டு இரு பிரிவினரும் கல்லெறிதலில் ஈடுபட்டனர். மேலும் ஆகஸ்ட் 25-ம் தேதி தானே மாவட்டத்தில் ஜன்மாச்தமி வேளையில் சில ஹிந்துத்வா வெறியர்கள் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் முஸ்லிம்களின் பல சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
மேலும் செப்டம்பர் -1 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகர் மாவட்டத்தில் ஈத் தினத்தன்று இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. வழக்கம் போல் இந்த கலவரத்திலும் போலீசார் ஒருதலை பட்சமாகவே நடந்து கொண்டனர். பாதிக்கப்பட்டு புகார் தெரிவிக்க சென்ற முஸ்லிம்கள் 307 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் கத்தி மற்றும் வாட்களை கொண்டு தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்ஜிதிற்கு அருகில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கலவரம் நடத்தப்பட்டதில் ௨ முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமுற்றனர். மேலும் ஆந்திரா குர்நூல் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் ஏற்பட்ட கலவரத்தில் 100 _க்கும் அதிகமானோர் காயமுற்றனர் இதில் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகாராஷ்டிரா நந்துர்பார் பகுதியில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் ஏற்பட்ட கலவரத்தில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மேலும் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்திலும் போலீசார் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடந்துகொண்டனர். மேலும் காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் பாட்டில் தான் கலவரத்திற்கு முக்கிய காரணம் என்றும் முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கலவரம் தொடர்பாக 50 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர் ஆனால் வெறும் 12 முஸ்லிம் அல்லாதவர்கள் மாட்டுமே கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கலவரத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக வாழ்ந்த வீடுகளுக்கு கூட முஸ்லிம்கள் செல்ல அச்சமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வருடத்தின் மிகப்பெரிய கலவரங்களில் ஒன்றான ராஜஸ்தான் பாரத்பூர் கலவரம் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த கலவரம் ஒரு நிலம் மற்றும் மஸ்ஜித் தொடர்பாக குஜ்ஜார் இன மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆர்.எஸ்.எஸ்-ன் தூண்டுதலால் நடந்தேறியது. இதில் காவல்துறையினர் கலவரத்தை அடக்குவதை விட்டு குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம் மக்களை கொடூரமாக கொலைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றுமொரு கலவரம் பிஜேபி ஆளும் மாநிலமான உத்தராகண்டில் ருத்ராபூர் பகுதியில் நடந்துள்ளது. முன்னதாக ஹிந்துத்வா அமைப்புகள் இரண்டு கலவரங்களை திட்டமிட்டது அதில் ஒன்று தோல்வி அடைந்தது மற்றொன்று வெற்றி பெற்றது. முதலில் செப்டம்பர் 29-ம் தேதி குரான் பிரதிகள் சிலவற்றை ரத்தத்தில் நனைத்து கோயிலின் அருகே விட்டு சென்றனர் இதனால் முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். இரண்டாவதாக அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று குரான் பிரதிகள் சிலவற்றை இறைச்சியுடன் சேர்த்து கோயிலின் அருகில் விஷமிகள் சிலர் கட்டி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 150 முஸ்லிம்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிந்துக்களும் இன்னொரு புறத்திலிருந்து முஸ்லிம்களைத் தாக்கியதால் பெரும் கலவரம் வெடித்தது.
இதில் காவல்துறையின் அறிக்கைப் படி 30 பொதுமக்கள் காயமுற்றனர் மேலும் 100 வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ருத்ராபூர் அருகே டெல்லி- நைனிடால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வாகனங்கள் முற்றிலும் எறிந்த நிலையில் கிடந்தன. மேலும் 100 கடைகளுக்கு மேல் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக 37 பேர் மீது வழக்கு போடப்பட்டு அதில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரும் மாவட்ட ஆட்சியாளரும் சரியான தருணத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களுக்கு இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாம் பார்த்த அனைத்து கலவரத்திற்கும் பெரிய காரணம் எதுவும் இல்லை என்பதும் சிறிய காரணங்களுக்காக கலவரம் வருகிறது என்றால் இதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவாவின் வெறுப்பூட்டும் தொடர் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும் காவல்துறையினரின் முஸ்லிம்களுக்கு எதிரான சார்பு நடவடிக்கையும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த காரணங்கள் அனைத்தும் களையப்படாமல் கலவரம் இல்லாத இந்தியாவை நாம் உருவாக்குவது என்பது வெறும் கனவே என்பது குறிப்பிடத்தக்கது.