Thursday, January 5, 2012

பெண் டாக்டர் கொலையும் அதிர்ச்சி பின்னணியும்!

தூத்துக்குடி அழகிய துறைமுகப்பட்டினம். இதற்க்கு முத்து நகர் என்ற பெயரும் உண்டும். முக்கிய தொழில்களில் வளங்களில் ஒன்று உப்பு எடுப்பது.

இப்படிபாட்ட அழகிய நகரமான தூத்துக்குடி நீண்ட  காலமாக  ரவுடிகளின் கைகளில் சிக்கி
கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என்று ரவுடிகள் சாம்பராஜியமாக ஆகிப்போனது. 

தூத்துக்குடி முக்கிய ரவுடிகள் பட்டியலில்
திமுக எம்.எல்.ஏ. பெரியசாமி,  பசுபதிபாண்டியன் இவர்கள் அடக்கம். ரவுடிகள்தான் தூத்துக்குடியின்  எம்.எல்.ஏ.வாக வரமுடியும் என்ற ஒரு சிந்தனையும் நிலவிவந்தது. அப்படி நம்பித்தான் அதிமுக தூத்துக்குடியின் எம்.எல்.ஏ.வாக ரமேஷ் என்கிற ரவுடியை களம் இறக்கியது. பெரிய அரசியல் கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் தூத்துக்குடியில் திட்டமிட்டு ரவுடிகளை வளர்த்தனர்.

இப்படியாக
அரசியல் பொறுக்கிகள் கையில் சிக்கி தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்களும், உப்பல தொழிலாளர்களும் அவதிப்பட்டனர். இது போதாதென்று தூத்துக்குடியின் சுகாதாரத்தை கெடுக்க ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை என்கிற ஆக்டோபஸ் வந்திறங்கியது. வடநாட்டில் எங்கும் அனுமதி கொடுக்கப்படாத இந்த ஆலை தமிழகத்தின் அரசியல் பொறுக்கிகளால் தூத்துக்குடியில் நிறுவப்பட்டு இன்றும் அந்த மக்களை கொல்லும் கொலை கருவியாக ஜொலிக்கிறது.

இப்படி  பல கொலைகளும், ஆள்கடத்தல்களும் நடக்கும் தூத்துக்குடி நகரம்
இன்று அரசு டாக்டர் கொலை என்றதும்  அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளன. அப்பாவி மக்கள் கொல்லப்படும்  போது போலீஸ் பொறுக்கிகள் லஞ்சத்தை வாங்கிகொண்டு அதை ஊக்குவித்து வந்தனர். ஒரு டாக்டர் கொலையானதும் மொத்த டாக்டர்களும் ஊர்வலம், ஸ்ட்ரைக் என்று தமிழகம் முழுவதும் கிளம்பிவிட்டார்கள். இதே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது  இவர்களுக்கு ஆதரவாக யார் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.

டாக்டர் தொழில் என்பது ஒரு புனிதமானது, அது என்று வியாபாரம் ஆக்கினார்களோ அன்றே டாக்டர்கள் இதுபோன்ற அனத்தங்களை சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சாதாரண பிரசவம் ஆக இருக்கும்
எத்தனையோ பெண்களை பணத்துக்காக ஆப்பரேசன் செய்து கொன்றிருக்கிறார்கள். மொத்தத்தில் டாக்டர்களை பற்றி மக்கள் மனதில் ஒரு கெட்ட அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
அதிகமான டாக்டர்கள் பண ஆசையில் செய்யும் கொலை பாதகத்துக்கு இதுபோல் சில டாக்டர்கள் பலியாகி போகிறார்கள் என்பது ஒரு சோகமான ஒரு நிகழ்வே. அரசு இயந்திரங்கள் சாதாரண மக்கள் விசயத்திலும் நீதி செலுத்த வேண்டும். அதுபோல் மக்களை சுரண்டும் டாக்டர்கள் விசயத்தில் சிறப்புச்சட்டம் கொண்டுவந்து இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
                                                         
                                                          *மலர்விழி*

1 comment:

  1. Dentalsurgeon Ezhilan

    குடும்ப டாக்டர்ரை ஒழித்தது நீங்கள்.
    corporate hospital வளர்த்தவர் நீங்கள்.
    என்ன சார் reception ல டிவி இல்லையா AC இல்லையா என்று கேட்பவர் நீங்கள்.
    இன்ஸ்டன்ட் NOODLES போல நோய் குணம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்.
    பெரிய மருத்துமனைகளை இயக்கும் அரசியல் வாதிகள் தொழிலதிபர்கள் பற்றியும்,மருந்துகள் , மருத்துவ உபகரனங்ககள் விற்கும் நிறுவனங்கள் பற்றியும் நீங்கள் குரல் குடுக்க தயார் இல்லை..
    ஒரு சக மனிதனுக்கு கொடுக்கும் வுரிமையை கூட மருத்துவருக்கு இந்த சமுகம் குடுக்க தயார் நிலையில் இல்லை.
    இன்று ஒரு அறிவு ஜீவி சொல்லுது...1 )கொலை பண்ணியவன் காலை தொட்டு வணக்குகிரேன்,இந்த கொலை மருத்துவருக்கு ஒரு பாடம் என்று.அதை இன்னொரு அறிவு ஜீவி ஆமொதிகுது.

    ஒவ்வொரு உயிரினமும் தனக்கென்று ஆபத்து வரும்போது வாழ்வை நிலைநிறுத்தி கொள்ள போராடுவது என்பது பரிணாம வளர்ச்சியில் இயல்பாக அமைந்துவிட்ட தவிர்க்க முடியாத இயற்கை அளித்த குணம் .உலகம் தொடங்கி இன்றுவரை இதை தவிர்த்த உயிரினம் அழிந்துபோகும் இல்லை உரிமை இழந்துபோகும் .உயர்தர சமுக விலங்காக வாழும் மனிதனிடமும் இக்குனத்தை இயற்கை தேக்கி வைத்து இருக்கிறது . தனியாகவோ அல்லது இயலாதபட்சத்தில் தனது குழுவோடு இணைந்து செய்த போராட்டங்கள் அவனது இருப்பை இன்னும் நிலை பெறச்செய்கின்றன .அவன் எத்தகைய சமுக பொறுப்பில் இருந்தபோதும் அவன் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கும்போது , அவன் தன்னை காக்க , தன் தரப்பு நியாங்களைபேச போராடவேண்டி உள்ளது . இது மருத்துவர்களுக்கும் பொருந்தும்.
    இரவு நேர பணியில் குடிபோதையில் அடிபட்டு வருபவரையும் , அவனது நண்பர்களையும் சமாளிக்க முடியாமல் தினராத பெண்மருத்துவர்கள் யாரேனும் உண்டா ? Day and nite தூங்காம எப்படி duty பாக்குறீங்க ,இங்கே வந்தாதான் உங்க உழைப்பு தெரியுது ,ரொம்ப நன்றி என்ற பாராட்டையும் , நீலாம் ஒரு dr னு என்று திட்டும் வாங்காத பயிற்சி மருத்துவர்கள் உண்டா ?கட்சி கரையுள்ள வேஷ்டியை கட்டி கொண்டு மருத்துமனையில் மிரட்டல்விடும் பேச்சுகளை கேக்காத மருத்துவர்கள் உண்டா ?ஏதாவது ஒரு பண்டிகை தினத்தை முழுமையை கொண்டாடிய மருத்துவர்கள் உண்டா ? இப்படி கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் எங்களிடம் உண்டு . இன்னும் சொல்ல முடியா அவலங்கள் இங்கும் அதிகமே . பெண்மருத்துவர்களை கேட்டால் இன்னும் உரக்கபேசுவார்கள் ...

    நோயாளிகளிடமிருந்து வரும் தோற்று நோய்களால் மருத்துவர்களும் , மருத்துவ ஊழியர்களும் பாதிக்கபடுவதென்பது இங்கு தினசரி நிகழ்வே .HIV பாதித்த மக்களுடன் ஒரு இருக்கையில் பயணம் செய்ய மறுக்கும் சமுகத்தில் அவர்களுக்கு அறுவை சிகிச்சையும் , பிரசவமும் பார்க்கிறது மருத்துவ சமுகம் . Hospital acquired infections என்ற சொல்லப்படும் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு தனது வாழ்க்கையை இழந்த மருத்துவர்களின் கணக்கு ஒவ்வொரு மருத்துவரின் மனதிலும் உள்ளது


    நேற்று முதல் வாதிட்டு பின் இனி மேல் விவாதிக்க எனக்கு கையில் வலு இல்லை(டைப் பண்ணி டைப் பண்ணி கை வலிக்குது யுவர் ஆனர்)
    அண்ணா பல்கலைகழக இலவச பொறியியல் இடம் கிடைத்தும்,மருத்துவராய் ஆக மீண்டும் என்ற ஆசையோடு மருத்துவராய் ஆன நான்.இன்று உள்ள நிலையை பார்க்கும் பொது கோடி ரூபாய் கொட்டி குடுத்தாலும் என் பிள்ளையை மருத்துவராக ஆக்க மாட்டேன்.இந்த நிலை தொடர்தால் யாரும் தன பிள்ளையை மருத்துவராய் ஆக்க விரும்ப மாட்டார்கள்.
    # நீர் இன்றி,காற்று இன்றி உலகம் அழியும் முன்னர் நோய் தீர்க்க மருத்துவர் இன்றி இந்த உலகம் அழியும்.
    இது சத்தியம்

    ReplyDelete