Sunday, January 1, 2012

அரசியல் கோமாளிகள்!

1) தானே’ புயலின் கோரத்தாண்டவத்தில் 30க்கும்
அதிகமானோர் பலியாயினர். 20 ஆயிரம் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்தன. அரசு இரண்டு இலட்சம் உதவி.

* அரசு இதை குறைந்தது ஐந்து இலட்சமாக அறிவிக்க வேண்டும். என்ன பிச்சையா போடுறீங்கள்! அரசு கஜானாக்கள் இதுபோன்ற இயற்க்கை அனத்தங்களுக்கு துறக்கட்டும் இலவசங்களுக்கு அல்ல.


2) நேர்மையான, திறமையான நிர்வாகத்தை அளிக்க பாடுபடுவேன்: பிரதமர் மன்மோகன்  புத்தாண்டு செய்தி!


* பொருளாதார மேதையான இவரை விட லல்லு பிரசாத் எவ்வளவோ தேவலை அவரு  நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இந்திய ரயில்வேயை லாபகரமாக மாற்றினார்.  அனால் இந்த பொருளாதார புலி  பிரதமார இருந்தும் நாடு படுகுழிக்குள் போகிறது.


3) நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாடப்படுவதை எதிர்த்து அந்த ஓட்டலை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் 50 பேர் கைது.


* மக்களை பாதிக்கும் எத்தனயோ பிரச்சனைகள் இருக்க இவர்கள் புத்தாண்டு கொண்டாடத்திற்கு போராட்டம் நடத்து கின்றனர். மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு போராட்டம் செய்யாது ஹிந்துத்துவா சித்தாந்தங்களை பாதுக்காக்க போராட்டம் நல்லா இருக்கு.


4) "துரோக கும்பலுக்கு மன்னிப்பே கிடையாது,'' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை.


* ஆமாம் இவரை முதல்வர் ஆக்கியதற்கு நல்லா குடும்ப சண்டை குடுமி சண்டை போடுகிறார்.


5) தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை, உம்மன்சாண்டிக்கு கலைஞர் பதில் கடிதம்.
 

* ஓய்ந்து கிடந்த கருணாநிதி அறிக்கை போரை நடத்த ஆரம்பிச்சிட்டார். முல்லை பெரியாரை வைத்து அடுத்த தேர்தல் வரை காலம் ஓடும்.

6) அமெரிக்க இந்தியரும் நோபல் பரிசு பெற்ற வருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் அரசு "நைட்ஹூட்' விருது அறிவித்துள்ளது.

* இவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்து சொல்லினர் நமது இந்திய தேசபக்தி அடிமைகள். எனக்கு வாழ்த்து சொல்லி என்னை தொந்தரவு படுத்த வேண்டாம் என்று சொன்ன ஆணவம் பிடித்தவர் இவர்.


7) புத்தாண்டு கொண்டாட்டத்தில் விஷ சாராயம் குடித்த எட்டு கிராம மக்கள் பலியானார்கள்.


* முதலில் கள்ள சாராயம் காய்ச்சும் கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.  இலவசங்களை அறிவிக்க அரசியல் பொறுக்கிகள் டாஸ்மார்க் நடத்துகிறார்கள். முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment