Tuesday, September 25, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் சர்வ சிக்ஸா கிராமம்

சென்னை: முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், முன்னேற்றத்திற்காகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு நலதிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் ஆற்றி வரும் பணிகளில் "சர்வ சிக்ஸா கிராம்" என்ற மாபெரும் சேவையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அக்கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும்.




தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் திருவேளங்காடு பகுதியிலுள்ள மஹ்மூத்பூர் மற்றும் தீன் நகர் ஆகிய இருகிராமங்களும் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இச்சேவையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக கடந்த 21.09.2012 அன்று அலுவ‌லகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


















இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!

இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.

கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தேறின.

Saturday, September 22, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: கொந்தளிப்பை தணிக்க அமெரிக்கா முயற்சி!

இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலகமெங்கும் முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு நடந்த வன்முறையில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் தொலைக்காட்சி சானல்களில் முஸ்லிம்களின் கொந்தளிப்பை தணிக்கச் செய்ய விளம்பரம் ஒன்று அமெரிக்கா சார்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனும் கண்டனம் தெரிவிக்கும் காட்சி அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. ‘இன்னஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கும் அமெரிக்காவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறும் செய்தி விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன்பெயரால் நடக்கும் தாக்குதல்களுக்கு எவ்வித நியாயமும் இல்லை என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டதாக ஒபாமா தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார். 30 விநாடிகள் கொண்ட இந்த விளம்பரத்தை பாகிஸ்தான் தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்ப 70 ஆயிரம் டாலர் செலவழித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் பெயரால் அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா சீரியஸாக கருதுவதாகவும், கோடிக்கணக்கான பாகிஸ்தான் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட தொலைக்காட்சி விளம்பரம் உதவும் என்றும் நியூலாண்ட் தெரிவித்தார்.

ராமநாதபுரம்:மஸ்ஜித் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! பதட்டம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் அப்துல் காதிர் ஆலிம் மஸ்ஜித் அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாசிச கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டது. இதில் மஸ்ஜித் சேதமடைந்துள்ளது.

ராமநாதபுரம், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகர் பகுதியில் அப்துல் காதர் ஆலிம் பள்ளிவாசல் உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை அதிகாலையில்  மர்மக் கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தலைமறைவாகி விட்டது. இதில், பள்ளிவாசலின் முன்புறத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

தகவலறிந்து ஏராளமான முஸ்லிம்கள் பள்ளிவாசல் முன்பு திரண்டனர். சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். சம்பவ இடத்தில், ராமநாதபுரம் வட்டாட்சியர் க. அன்புநாதன், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ரவி, டி.எஸ்.பி. முரளீதரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, பள்ளிவாசல் இமாம் செய்யது அக்பர் அளித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, இன்னும் ஓரிரு தினங்களில் கைது செய்துவிடுவதாக, காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கூடியிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

அந்நியன் ரேமோ மாதிரி டக்கரா?


இந்தியாவில் காடு வா.. வா... என்று சொல்லும் போது ஜனாதிபதி ஆனவர்கள்தான் அதிகம். ஆனால் நம்ம கலாம் ஐயா மட்டும்தான் முடியை ஸ்டைலா போட்டு அந்நியன் ரேமோ மாதிரி டக்கரா வலம் வந்தார்.

இப்படி பல அருமை பெருமைகளுக்கு சொந்தகாரான நம்ம கலாம் ஐயாதான், “கூடங்குளம் அணுஉலைகள் மிகவும் பாதுகாப்பானவை மூன்றாம் தலை முறையினருக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் கொண்டது என்று கதை விட்டார்.

மேலும் “அணுஉலைகள் இரண்டடுக்கு தடிமன் சுவர் கொண்ட பாதுகாப்பு  முறையில் அமைத்துள்ளதால் கதிர்வீச்சு வெளியே வராது, அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கழிவுகள் கிடைக்கும். அதையும் கடலில் கரைக்க மாட்டோம் என்றார்.

அணுகுண்டுகளை நேசிக்கும் அதேநேரம் குழந்தைகளையும் நேசிக்கும் அதிசய விஞ்சான பிறவியான அபுல்கலாம் ஐயாவுக்கும், மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கும் செருப்படி கொடுக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளது.

1) கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

2). 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது, அதன் பாதிப்பு தற்போதும் உள்ளதே?

3). கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும்?

நியாமான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் நமது அந்நியன் ரேமோ மற்றும் சைலன்ட் MODE சர்தார்ஜி, மற்றும் கூட்டத்தார்கள்.

Friday, September 21, 2012

கூத்தாநல்லூர் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு நடத்தும் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அவதூறாக சித்தரித்து திரைப்படம் வெளியிட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாய்களை கண்டித்து கூத்தாநல்லூர், பொதக்குடி , பூதமங்கலம் ,தண்ணீர்குன்னம் ,அத்திக்கடை,  நாகங்குடி ஆகிய ஊர்களை சேர்ந்த முஸ்லிம்  ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு நடத்தும் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம். 

இன்ஷா அல்லாஹ் நாளை 22.09.2012 சனிக்கிழமை மாலை  சரியாக 4.00 மணியளவில்  கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியகடை தெரு தபால் அலுவலகத்தில் நிறைவு அடையும் . தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் . 

அதுசமயம் நமதூர் மற்றும் சுற்று வட்டார இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் சமுதாய ஒற்றுமை ஓங்க பெருமளவில் கலந்து கொண்டு கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்   வெற்றி பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

கூத்தாநல்லூரில் இருந்து கூத்தாநல்லூர் போஸ்ட்காக அப்துல் ராஜிக்
 

Thursday, September 20, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன்! – எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் பிரான்சு பத்திரிகை!

பாரிஸ்:இஸ்லாத்தின் இறுதித்தூதரும், முஸ்லிம்கள் உயிரினும் மேலானவருமான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலக முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாக பிரான்சு நாட்டு பத்திரிகை ஒன்று இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உருவாக இருக்கும் கொந்தளிப்பை கவனத்தில் கொண்டு பிரான்சு அரசு 20க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை(வெள்ளிக்கிழமை) தமது தூதரகங்களையும், பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன் வெளியான சூழலில் வெள்ளிக்கிழமை பிரான்சு நாட்டு தூதகரங்கள் முற்றுகையிடப்படலாம் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் ஃபாபியஸ் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளிலும் பிரான்சு நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரான்சில் இருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை நேற்று அட்டைப் படத்தில் ஹிட் திரைப்படமான The Untouchables ஐ கேலிச்செய்யும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஒரு ரப்பி(யூத மதகுரு) ஒரு இமாமை வீல்சேருடன் தள்ளுகிறார். பின்னர் அவர் இருவரும் “mustn’t mock”(கேலி கூடாது)  என கூறும் வகையில் அந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இன்னொரு கார்ட்டூன் இறைவனின் இறுதித்தூதரை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் நிர்வாணமான ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.

இதே பத்திரிகை கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாத இதழில் அடுத்த இதழின் பிரதம ஆசிரியராக முஹம்மது நபி இருப்பார் என அறிவித்திருந்தது. அந்த இதழுக்கு இஸ்லாமியச் சட்டம் என்று அவ்விதழ் பெயரிட்டு வெளியிட்டிருந்தது. துனீசியாவில் அந்நஹ்ழா கட்சி வெற்றிப் பெற்றது மற்றும் கடாஃபிக்கு பின்னர் லிபியாவில் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்துவதைக் குறித்து கேலிச் செய்யும் வகையில் இந்த செய்தியை வெளியிட்டது. மேலும் இவ்விதழின் முகப்பில் ‘நீங்கள் சிரிக்காவிட்டால் 100 கசையடி’ என்று முஹம்மது நபி கூறுவது போல் படம் வரையப்பட்டிருந்தது. அதன் உட்பக்கங்களிலும் நபியை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. ஆனால், பத்திரிகை விற்பனைக்குச் செல்லும் முன்னரே அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பத்திரிகைகளும், உபகரணங்களும் தீக்கிரையாகின.

ஏற்கனவே 2007 ஆம் ஆண்டில் இதே பத்திரிகை முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டிருந்தது. இவை முதன்முதலாக டென்மார்க்கில் வெளியிடப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். டென்மார்க் சித்திரத்தில் வெடிகுண்டு தலைப்பாகை அணிந்த உருவத்தை வரை நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் வெளியிட்டது. இந்தக் கேலிச்சித்திரத்திற்கு ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும்  கண்டனப் போராட்டங்கள் நடந்தன.

இறைத்தூதரை இழிவுப்படுத்தும் கார்ட்டூனை வெளியிட்டுள்ள சார்லி ஹெப்டோவுக்கு பிரான்சு நாட்டு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகைகள் பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்யாமல் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

SILENT MODE சர்தார் ஜி!

தினமும் இந்தியாவை உலுக்கும் ஏதாவது ஒரு  பிரச்சனை அவற்றை கண்டும் காணாதது போல் மவுனம் சாதிக்கிறார் இந்திய பிரதமர்.

* இந்தியாவை விடுவோம் இந்த மக்கு பிரதமரால் தமிழர்கள் பட்ட அவதியை,   இப்பொழுதுபடும் அவதியை பாருங்கள். 

* இந்தியாவின் வல்லரசு போதையால் இவர்களின் பரிபூரண ஆதரவோடு ஈழத்து இனப்படுகொலை அரங்கேறியது என்பது உலகம் அறிந்த உண்மை.

* தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொல்வதை தடுக்க சொல்லி தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதை கண்டு கொள்ளாமல் மவுனம் சாதித்ததால்  500கும் அதிகமான மீனவ மக்கள் மாண்டனர். இந்திய கடல்படையை சிங்கள தேசத்து பாதுகாப்புக்கு நிறுத்தினார் மவுனச்சாமியார் மண் மோகன் சிங். 

* இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே, பாரதிய ஜனதாவின் சுஸ்மா சுவராஜ் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வர இருப்பதை தடுக்க தமிழ் மக்கள் தொடர்ந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் மவுனம் காத்ததால் ஒருவர் தீக்குளித்து இறந்து போனார். தொடர்கிறது போராட்டங்கள் ஆனால் அவரது மவுனமும் தொடர்கிறது.

* நாசகார கூடங்குளம் அணு மின்நிலையத்தை செயல்படுத்த அப்பகுதி கடலோர மீனவர்களை கொன்று குவிக்கிறார். தொடரும் கூடங்குளம் பிரச்னையை சுமூகமாக பேசி முடிக்க வழி செய்யாமல் தொடர் மவுன விரதம் கடைபிடிக்கிறார் பாரத தேசத்தின் பிரதமர் மண்ணு மோகன். 

* முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தி யூடுயூப் பில் வெளிவந்த படத்தை பற்றிய கண்டங்களை இந்திய முஸ்லிம்களும், தமிழக முஸ்லிம்களும் தொடர்ந்து தெரிவித்து வரும் வேளையில் அதைப்பற்றி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்கிறார் நமது இந்திய பிரதமர் மண்ணு மோகன் சிங்.

* இவர் நமக்கு பிரதமரா அல்லது அந்நிய நாட்டுக்கு பிரதமரா புரியவில்லை. ஏன் இந்த மவுனம், யாருக்கு இவர் அடிமை சேவகம் புரிகிறார். இப்படிப்பட்ட ஒரு பிரதமர், ஆட்சியாளர் நமக்கு தேவையா? இந்த பிரச்சனைகளில் யார் முதலில் செயல்படவேண்டும். நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு வழி சொல்ல தெரியாத ஒரு மக்கு பிரதமர் நமக்கு தேவையா?
*மலர்விழி*

அஸ்ஸாமில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகள்

குவாஹாத்தி: அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான சீராங் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா நேற்று (19.09.2012) அன்று துவக்கி வைத்தார். புதுடெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ரிஹாப் இந்தியா தொண்டு நிறுவனத்தோடு இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அஸ்ஸாமில் பல்வேறு நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.


Md Ali Jinnah - Vice Chairman, Popular Front inaugurates third phase of Assam relief works
நிவாரணப்பொருட்களை வழங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா

நிவாரணப்பணிகளின் முதற்கட்டமாக கலவரம் நடைபெற்ற சில நாட்களிலேயே ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணா முகாம்களுக்கு நேரடியாக சென்று அம்மக்களுக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை கணக்கெடுத்தனர். சீரங், பொங்கைகோன், பார்பெட்டா, கோக்ரஜார் மற்றும் தூப்ரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மேற்கொண்டனர். இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகளாக புதிய ஆடைகளை நோன்புப் பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது. சுமார் 10 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கிட்டதட்ட 129 நிவாரண முகாம்களுக்கு ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் கடந்த வாரம் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை அறிந்தனர். கிட்டதட்ட 99,160 பேர் அம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் 6000 குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட வேண்டியிருந்தது. 35483 ஆண்களுக்கும் (சட்டை மற்றும் லுங்கி), 33411 பெண்களுக்கும் (புடவை, சட்டை மற்றும் சுடிதார்), 22399 சிறுவர்களுக்கும் (சட்டை மற்றும் டிரவுஸர்) ஆடைகள் வழங்கப்பட வேண்டும். வாலிகள் மற்றும் உணவு உண்பதற்கான தட்டுகள் மொத்தம் 24434 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். 

சீராங் மாவட்டத்திலுள்ள 9 நிவாரண முகாம்களில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகள் நேற்று முதல் துவங்கப்பட்டது. கோரஜ்மாரி எல்.பி பள்ளிக்கூடம், கோரஜ்மாரி மதரஸா, லோகிபூர் எல்.பி பள்ளிகூடம், கவாத்திகா எல்.பி பள்ளிகூடம், கவாத்திகா எம்.இ பள்ளிக்கூடம், கவாத்திகா சிசு பர்ஸாலா, மொமோகஸா எல்.பி. பள்ளிக்கூடம், மொமோகஸா மதரஸா மற்றும் துதூரி அகாடெமி ஆகிய 9 நிவாரண முகாம்களில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா துவக்கி வைத்தார்.

ஆரிஃப் பைஜல் (செயலாளர், தமிழ் நாடு), வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் (மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ் நாடு), அப்துல் ஹமீது, எம். அப்துல் சமது  (மாநில செயற்குழு உறுப்பினர், கேரளா), அமீனுல் ஹக், ரஃபீகுல் இஸ்லாம் (ரிஹாப் இந்தியா), ஆகியோர் நேரில் சென்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர். 1032 குடும்பங்களைச்சேர்ந்த 4654 நபர்கள் இதில் பயன் அடைந்தனர். இந்த மாத இறுதி வரை மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
Assam Relief
M. Abdul Samad - SEC Member, Popular Front, Kerala
Third phase of Assam relief works

Monday, September 17, 2012

சென்னையில் மனித சங்கிலி போராட்டம் 1

அப்பாவி சிறைவாசிகளை பிணையில் விடுவிக்க கோரி "சட்டப்படி பிணையில் விடு, அப்பாவிகளை விடுதலை செய்!" என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த 15.08.2012 முதல் 15.09.2012 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் நிறைவாக டெல்லி (ஜந்தர் மந்தர்) மற்றும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 100ற்கும் மேற்பட்ட இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை 15.09.2012 அன்று ஒரே நேரத்தில் நடத்தியது.

சென்னையில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் தங்களின் கைகளுக் துணை நிற்கும் என்பதை உறுதி செய்தனர்.

இந்த நாட்டில் உள்ள சட்டங்களின் படி, நீதிமன்றங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப் பட்டவர்களுக்குத்தான் சிறைச்சாலையாகும். நீதியான விசாரணை நடத்தப்பட்டு ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் அப்பாவி என்பது தான் அடிப்படை சட்டமாகும். இதன் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர் அல்லது பல்வேறு குற்றங்களில் தொடர்பு படுத்தப்பட்டு விசாரணையை சந்தித்து வருபவர் அப்பாவி என்றே கருதப்பட வேண்டும்.


நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கூறி சிறைத்தண்டனை விதிக்கும் வரை அவர் அப்பாவி தான். எந்த காரணமும் இல்லாமல் ஒரு அப்பாவி கூட சிறையில் இருக்கக்கூடாது. இந்த அடிப்படையில் தான் இந்திய சட்டம் விரிந்து பரந்த பார்வையுடன் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை என்பதை விதியாக்கியிருக்கிறது.

கண்ணியத்திற்குரிய நமது உச்ச நீதிமன்றத்தின் ஒரு புகழ் பெற்ற தீர்ப்பு இப்படி கூறுகின்றது:
"பிணை என்பது சட்டமாகும், சிறை என்பது விதிவிலக்காகும்" ஆனால் சில ஆண்டுகளாக தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் விசாரணை கைதிகளுக்கு பிணை கொடுப்பது மறுக்கப்பட்டு வருகின்றது.

தடா, பொடா போன்ற கருப்பு சட்டங்களை திரும்ப பெற்றவுடன் பாராளுமன்றம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற யு.ஏ.பி.ஏ என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து பிணை வழங்குவதற்கு தடை ஏற்படுத்தி விசாரணை கைதிகள் முடிவில்லாமல் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நிர்க்கதியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவ்வாறு சிறைகளில் வாடி வருகின்றனர்.
இப்படி இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். பல வழக்குகளில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனென்றால் அரசு தரப்பு அவர்களில் மீது சுமத்திய குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இதனிடையே அவர்களின் இளமைக்காலம் முழுவதும் சிறைக் கம்பிகளின் பின்னால் கழிந்திருக்கும்.

இது போன்ற ஒரு வன்முறையை ஒரு ஜனநாயக அரசு எப்படி அனுமதிக்க முடியும்? இது போன்ற ஒரு அநீதியை பார்த்து ஒரு நாகரீகமான சமூகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? எனவே, அனைத்து குடிமக்களும் ஒன்று சேர்வோம் நீதிக்காக குரல் கொடுப்போம்! என்றதுடன் போராட்டத்தின் இறுதியில் அப்பாவிகளை விடுதலைக்கான போராட்டத்தில் தோள் கொடுப்போம் என்று உறுதி  மொழியும் எடுக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் மனு ஒன்றையும் சமர்பித்துள்ளார். அதே போல் தமிழகத்திலும் இக்கோரிக்கையை மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

1. விசாரணைக்கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. அப்பாவிகளை விசாரணைக் கைதிகளாகவே நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருப்பதை நியாயப்படுத்தும் வகையில் தற்போது அதிகாரிகளுக்கும், விசாரணை ஏஜென்சிகளுக்கும் (காவல்துறை) வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் யு.ஏ.பி.ஏ போன்ற அனைத்து கருப்புச்சட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும்.

3. பொய் வழக்கு புனையும் அதிகாரிகளை தண்டிக்கும் வகையிலும், நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு தகுந்த இழப்பீடு கிடைக்கும் வகையிலும் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

4. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.




இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: இந்தியா கண்டனம்!, திரைப்படத்திற்கு தடை!

மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் காயப்படுத்தும் அனைத்து செயல்களுக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படக் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதைத் தொடர்ந்து லிபியாவில் அமெரிக்க தூதர் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இறைத்தூதரை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய திரைப்படம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸய்யித் அக்பருத்தீன் தெரிவித்துள்ளார். கொந்தளிப்பை உருவாக்கும் வீடியோக்களையும், படங்களையும் இணையதளத்தில் காணக்கிடைப்பதை தடுக்க கூகிள் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் முஸ்லிம்கள் கொதித்துப் போனார்கள். பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் தென்னக மாநிலமான தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கண்டனப் போராட்டங்கள் நடந்தன.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு இந்தியாவில் தடை!

இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் யூ ட்யூபில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தின் காட்சிகளுக்கு தடை விதிக்க கூகிள் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸய்யித் அக்பருத்தீன் கூறியுள்ளார்.ஆனால், தற்போதும் யூ ட்யூபில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் தெரிவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான 15.09.2012  சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் அதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது.





போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் " “3 லட்சத்திற்கும் அதிகமானோர் கறுப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்பார்த்து இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சிறைகள் நிரபராதிகளால் நிரம்பி வழிகின்றன. இவர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். வாழ்வதற்காக போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பழங்குடியின-தலித் மக்களை மாவோயிஸ்டுகளாகவும் சித்தரிக்கின்றார்கள். சிறைகளில் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 13.4 சதவீத எண்ணிக்கையைக் கொண்ட முஸ்லிம்கள் சிறைகளில் 23.4 சதவீதம் உள்ளனர். UAPA, AFPSA போன்ற சட்டங்கள் ஜனநாயகத்தில் சேதத்தை ஏற்படுத்தும் புழுக்களாகும். பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிரபராதிகள் என விடுதலைச் செய்யப்படுபவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.

BABARI MASJITH

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் அவர்கள் தனது உரையில் “அடக்குமுறைகளுக்கும், கறுப்புச் சட்டங்களுக்கும் எதிராக முஸ்லிம்களும், புரட்சியாளர்களும் ஒன்றிணைவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவும், உடையும் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி பழங்குடியின மக்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது. அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

POPULAR FRONT OF INDIA

அடுத்து பேசிய பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானி அவர்கள் "செய்யத் அஹ்மத் காஸ்மியைப் போன்ற உயர் கல்வியைக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை அரசு கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை சட்டரீதியாகவும், போராட்டங்களின் மூலமாகவும் எதிர்கொள்ள வேண்டும் "என்றார். அதனை தொடர்ந்து பேசிய டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா அவர்கள் " பழங்குடியின- தலித் மக்களை ஒடுக்குவதற்காக அவர்களில் உயர்கல்வி கற்ற இளைஞர்களை அரசு குறிவைப்பதாக " சுட்டிக்காட்டினார். அடுத்து பேசிய என்.சி.ஹெச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.கோயா அவர்கள் " சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க மாறுபட்ட அரசியல் தளங்களில் செயலாற்றும் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் " என்று கோரிக்கை விடுத்தார்.



இப்போராட்டத்தில் ரோணா வில்ஸன், டாக்டர் பஷீர்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லானா ஷாஹுல் பாகவி(இமாம்ஸ் கவுன்சில்), ஹாஃபிஸ் மன்சூர் அலிகான்(எஸ்.டி.பி.ஐ), ஸஃபருல் இஸ்லாம் கான்(மஜ்லிஸே முஷாவரா), கவிதா கிருஷ்ணன்(சி.பி.ஐ.(எம்.எல் லிபரேசன்)), மவ்லானா கலீமுல்லாஹ், அனீஸுஸ்ஸமான்(கேம்பஸ் ஃப்ரண்ட்), உமர் காலித்(டி.எஸ்.யு) ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். மேலும் இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மியின் மகன் ஷோஹைன் காஸ்மி, புனே எரவாடா சிறையில் கொலைச் செய்யப்பட்ட கத்தீல் சித்தீகியின் சகோதரர் ஷக்கீல் சித்தீகி ஆகியோர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த கைதிகளை விடுவிக்கக்கோரும் கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரத்தை அருந்ததிராய் துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மனிதசங்கிலிப் போராட்டத்தில் பிரபல மனித உரிமை-சிவில் உரிமை ஆர்வலர்களும், சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர். இதன் மூலம் ஜந்தர்-மந்தர் மாறுபட்ட உரிமைப் போராட்டத்திற்கு சாட்சியம் வகித்தது. ‘சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலைச் செய்!’ என்ற அட்டைகளை போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கையில் பிடித்திருந்தனர். இறுதியாக பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Sunday, September 16, 2012

கூத்தாநால்லூரில் - த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநால்லூரில் -  நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம், ஓபாமா உருவ பொம்மை ஏறிக்கபட்டது