இந்திய குடிமக்களில் 65 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள்.
இந்த விடயத்தை நேசனல் சாம்பிள் சர்வேயின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சர்வேயின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகனுக்கு நகரங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவை ரூ.66.10 ஆகும். கிராமங்களில் 35.10 ரூபாய் ஆகும்.
இதன் அடிப்படையில் ஒருவருக்கு ஒரு மாதம் நகரங்களில்1984 ரூபாயும், கிராமங்களில் 1054 ரூபாயும் அன்றாட அடிப்படைச் செலவு ஆகும்.
இந்த தொகை மிகவும் குறைவானது என்பது உங்களுக்கு தெரியும். நாட்டின் மொத்த மக்கள் தொகையான 120 கோடியில் 65 சதவீத மக்களுக்கும் இத்தொகை வருமானமாக கிடைப்பதில்லை.
நிலைமை இப்படி இருக்க மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது பணக்காரர்களின், அந்நிய முதலாளிகளின் வருமானத்தை உயர்த்த அணு உலைகளை இந்தியா முழுவதும் துறந்து வருகிறது மண்ணு மோகன் அரசு.
இந்தியா முழுவதும் 2035 க்குள் 80 அணு உலைகளை திறந்தே தீருவோம் என்று இந்திய அணு சக்தி துறை துரித கதியில் செயல்பட்டு வருகின்றது. பணக்காரர்களுக்கு, முதலாளிகளுக்கு சேவை செய்வது என்றால் அரசும் அதன் இயந்திரங்களும் சந்தோசமாக செயல்படுகிறது. அவர்கள் விட்டெரியும் எச்சில் பணத்துக்கு ஆசைப்பட்டு நாய்கள் போல் நன்றியோடு வால் ஆட்டுகிறது நமது இந்திய அரசு இயந்திரங்கள்.
No comments:
Post a Comment