Saturday, May 12, 2012

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை

இந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் 13.4 சதவிகிதமும், தமிழகத்தில் முஸ்லீம்கள் 5.6 சதவிகிதமும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆனால் அப்போதே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எண்ணிக்கையை இக்கணக்கெடுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

எனவே தற்போது நடைபெறும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் அனைத்து முஸ்லீம்களின் பெயரும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வெண்டும்.

இஸ்லாத்தில் சாதிய பிரிவுகல் இல்லை, இஸ்லாம் சாதிய நடைமுறைகளை தகர்த்தெறிந்த மார்க்கம் என்றாலும் நாம் வாழும் இந்திய சூழலில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்றவாறு அரசு வகைப்படுத்தியுள்ள கீழ்காணும் ஏதேனும் ஒன்றை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

கணக்கெடுப்பின் போது மதம் என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிட வேண்டும். இஸ்லாத்தில் ஜாதிய பிரிவுகள் இல்லை என்றாலும் தமிழகத்தில் லெப்பை (தமிழ், உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர்), தக்னி (உருது பேசுவோர்), தூதே குலா (தெலுங்கு பேசுவோர்), மாப்பிள்ளை (மலையாளம் பேசுவோர்), அன்சர், சையத், ஷேக் என 7 பிரிவுகளாக அரசு வகைப்படுத்தி உள்ளது.

இதில் லெப்பை, தக்னி, தூதே குலா, மாப்பிள்ளை ஆகிய 4 பிரிவுகளும் தேசிய அளவில் உள்ள மத்திய அரசின் ஓ.பி.சி (பிற்பட்டோர் பிரிவில்) பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கில் ஒன்றை இடம்பெறச் செய்தால் தான் மத்திய மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டுச் சலுகையை பெறமுடியும். எனவே சாதி என்ற கேள்விக்கு லெப்பை, தக்னி, தூதே குலா, மாப்பிள்ளை ஆகிய நான்கில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

இது நமது எதிர்காலம் சம்பந்தப்ப்ட்ட விஷயமாகும். எனவே ஒவ்வொரு முஸ்லீமின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த தகவலை தங்களுடைய பள்ளி ஜும்-ஆவில்  அறிவிப்பு செய்து நம் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என  ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:

கணக்கெடுப்பு வரும் நபர்களிடம் முஸ்லீம் என்று மட்டும் கூறுவது நல்லது. எந்த ஜாதியையும் சொல்ல வேண்டாம் என ஜமாத்தாருக்கு தெரியப்படுத்தவும், ஏனெனில் முஸ்லீம்களின் வழக்கத்தில் இல்லாத பிரிவுகளை கூறி இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளும் தேசிய அளவில் மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,

A.ஹாலித் முஹம்மத்,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு

No comments:

Post a Comment