மதுரை:வீரியம்
குறைந்த ஒரு குண்டுவெடிப்பின் பெயரால் தமிழக போலீஸ் மதுரை மற்றும் அதன்
சமீப பகுதிகளில் நடத்திவரும் முஸ்லிம் வேட்டைக்கு எதிராக சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இம்மனு மீதான விசாரணை இம்மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் அருகில் உள்ள கோயில் அருகே சைக்கிளில் வைக்கபட்டிருந்த
வீரியம் குறைந்த குண்டு ஒன்று அண்மையில் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு
சம்பவத்தை அத்வானி உள்ளிட்ட சங்க்பரிவார தலைவர்கள் பா.ஜ.க மாநாட்டில்
கலந்துகொள்ள தமிழம் வருவதை தொடர்புபடுத்தி ஒரு பிரிவு ஊடகங்களும்,
போலீசாரும் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து அவதூறு பிரச்சாரங்களை
கட்டவிழ்த்துவிட்டதோடு, முஸ்லிம்களின் வீடுகளில் போலீஸ் நுழைந்து
அவ்வீடுகளில் இருப்போரை பீதிவயப்படுத்தி வருகிறது. இந்த அராஜக
நடவடிக்கைகளுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீடியா மற்றும் போலீசாரின்
முஸ்லிம் வேட்டைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில்
பொதுநல மனுவை தாக்கல் செய்தது.
No comments:
Post a Comment