சென்னை: ஆல் இந்தியா
இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இன்று காலை சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலி
"இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சியுடன் தொடங்கியது.
காலை
9 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழக தலைவர் இபுராஹிம்
உஸ்மானி அவர்கள் கொடியேற்றி வைத்து இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுச்செயலாளர்
ஆபிருதீன் மன்பஈ திறந்துவைத்தார். காலை 10 மணியளவில் இஸ்லாமிய கலாச்சார
பாதுகாப்பு மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்
ஜமாத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் மெளலானா மன்சூர் காஷிஃபி அவர்கள்
காதியானிகளின் உருவாக்கம் தொடர்பான உரையை நிகழ்த்தினார். அடையாள் ஜூம்மா
மஸ்ஜிதின் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் இஸ்லாமிய கல்வி என்ற
தலைப்பிலும் இன்னும் பிற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் ஆல்
இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி,
செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, பொருளாளர் முஹம்மது ஈஸா, ஐக்கிய
சமாதானப்பேரவையின் தலைவர் ஹாமித் பக்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரை
நிகழ்த்தினர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆலிம்கள்
இதில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. முஸ்லிம் தனியார் சட்டம்:
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 25ன் படி இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
மத சுதந்திர உரிமையை ( ) வழங்குகின்றது. அதனடிப்படையில் சிவில்
விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தாரும் அவரவர் மதச்சட்டங்களை பின்பற்றிக்
கொள்ளலாம். முஸ்லிம்கள் தங்களுடைய ஷரீஅத் சட்டமான "முஸ்லிம் தனியார்
சட்டத்தை" பின்பற்றி வருகின்றனர். ஷரீஅத் சட்டத்தின் படி ஒரு பெண் திருமணம்
செய்து கொள்வதற்கு பருவமடைந்துவிட்டால் போது; 18 வயது பூர்த்தி செய்ய
வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் மணப்பெண்ணின் திருமணத்தகுதி குறித்த
வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில்
சிறுமியர் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம் என்ற ஒரு மாயையையும்,
பரபரப்பையும் ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்தைச்சேர்ந்த அரசு அதிகாரிகளும்,
காவல்துறை அதிகாரிகலும் முஸ்லிம்களின் திருமணத்தை தடுத்தி நிறுத்தி,
மணப்பெண்ணை கைது செய்து சீர்திருத்த இல்லத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து
வைக்கும் அவல நிலை சமீபகாலமாக தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. இது
முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். முஸ்லிம் பெயர்
தாங்கிளாக அரசுப் பணியாற்றிவரும் அதிகார மட்டத்தில் உள்ள சில கருப்பு
ஆடுகளும் இதற்கு துணை போகின்றனர். ஷரீஅத் சட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க
வேண்டிய அரசு அதிகாரிகளே இது போன்று சட்டத்தை மீறி செயல்படுவதை இம்மாநாடு
வன்மையாக கண்டிக்கிறது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளின்
தாந்தோன்றித்தனமான இந்த செயலை கட்டுப்படுத்துவதும், ஷரீஅத் சட்டத்தை மீறாத
வகையில் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
2. கட்டாய திருமண பதிவுச்சட்டம்:
முஸ்லிம்
சமூகத்தின் திருமணங்களை முறையாக பதிவு செய்யும் நடைமுறை ஒவ்வொரு
முஹல்லாவில் உள்ள பள்ளிவாசலிலும், ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் திருமணப்
பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே கட்டாய
திருமண பதிவுச்சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கென்று தனியாக அரசு
விதிவிலக்கு அளிக்க வேண்டும். முஹல்லா பதிவேட்டில் உள்ள பதிவுகளை திருமணம்
குறித்தான சான்றாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் இம்மாநாடு
கேட்டுக்கொள்கிறது.
3. மத வழிபாட்டுத்தலங்கள் மற்ரும் வக்ஃபு சொத்துக்கள்:
தமிழகத்தில்
முஸ்லிம்களின் மத வழிபாட்டுத்தலங்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல்
நடத்துவதும், அவற்றை சேதப்படுத்துவதும், அவற்றின் கண்ணியத்தை குழைக்கும்
செயல்கள் சமூக விரோதிகளால் அரங்கேற்றப்பட்டு வருவது கவலைக்குறியது,
கண்டிக்கத்தக்கது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், இரு
சமூகங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வண்ணம் கெட்ட எண்ணத்துடன்
செயல்பட்டு வரும் அத்தகைய சமூக விரோதிகளை இனம் கண்டு, கடும் தண்டனை
கிடைக்கும் வகையில் சட்ட நட்வடிக்கை எடுக்குமாறும், பொது அமைதியை
சீர்கெடுக்கும் வண்ணம் செயல்பட்டு வரும் இவர்களின் சதிச்செயலை
முறியடிக்கவும், சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய
பாதுகாப்பு வழங்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
4. வக்ஃபு சொத்துக்கள்:
வக்ஃபு
வாரியத்திற்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் நாடெங்கிலும்
ஆக்கிரமிக்கப்பட்டிருகின்றன. அரசுகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது
மாபெரும் அநீதியாகும். அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளிலும், சமூக பொருளாதார
ரீதியிலும் முஸ்லிம் சமூகம் மிகவும் பின் தங்கியிருப்பதை சர்ச்சார்
அறிக்கை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் சமூக,
பொருளாதார நிலையை முன்னேற்ற இடஒதுக்கீடும், பிரத்யோக நலத்திட்டங்களும்
எப்படி முக்கியச் காரணிகளாக அமைகின்றதோ, அதே போன்று வக்ஃபு சொத்துக்கள்
முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் பயன்பாட்டிற்காக அமைத்துக்கொடுப்பதும்
மற்றொரு காரணியாக விளங்கும். எனவே நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருக்கு
வக்ஃபு சொத்துக்களை மீட்பதற்கு உரிய செயல்திட்டங்களை வகுத்து, இனியும்
தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகலை இம்மாநாடு
கேட்டுக்கொள்கிறது.
5. திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் கலாச்சார சீர்கேடு:
மனித
வாழ்வின் ஒழுக்க விழுமியங்களை தகர்க்கும் வண்ணம் வன்முறைக்காட்சிகளும்,
ஆபாசமும் திரைப்படங்களிலு நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவது கலாச்சார
சீர்கேட்டின் உச்ச கட்டத்திற்கு மனித சமூகத்தை அழைத்துச் செல்கின்றது.
பெண்களை ஆபாசமாகவும், போகப்பொருளாகவும், திரைப்படங்கல் காட்டி வருவதால்
நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கற்பழிப்புக்களும்
நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவதை காண முடிகிறது. பெண்களை மதித்து
போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வை மறக்கடித்து, பெண்களுக்கெதிரான
வக்கிர குணத்தை இந்த ஆபாச காட்சிகள் ஆண்கள் மனதில் விதைக்கின்றன. இதுவே
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. போலிப்
பெண்ணுரிமை பேசிவரும் பெண்ணியவாதிகளின் குருட்டுப் பிடிவாதமும், இந்திய
துணைக்கண்டத்தின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுறுவியிருப்பதே திரைப்படங்களின்
ஆபாசக் கலாச்சாரத்திற்கான காரணம். திரைப்படங்களில் மட்டுமல்லாமல்,
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கலும் ஆபாசக்
கலாச்சாரத்தின் துணை காரணிகளாக இருக்கின்றன. கற்பழிப்புக் குற்றங்களுக்கு
உச்சபட்சமான கடும் தண்டனைகள் வழங்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள்
இல்லை. ஆனால் கலாச்சார சீர்கேட்டின் ஆணி வேர்களாக திரைப்படக்
காட்சிகளையும், விளம்பரஙகளையும் கட்டுப்படுத்தாமல் கடும் தண்டனையால்
மட்டும் பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திவிட முடியாது
என்பதை மறுக்க முடியாது. எனவே கலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் திரைப்படக்
காட்சிகளும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும்
அரசு இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என இம்மாநாடு மத்திய,
மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கின்றது.
6. திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு:
மனித
நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டிய திரைப்படங்கள்
முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் காட்டி பொது
சமூகத்தின் மனதில் விதைத்து வருகின்றது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லினக்கத்தையும் சீர்குலைக்கும் இச்செயலை
திரைப்பட தனிக்கை வாரியம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து இது போன்ற
காட்சிகள் இடம்பெறா வண்ணம் தனிக்கை செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள்
இதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென
இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
7. பூரண மதுவிலக்கு மற்றும் கந்துவட்டி ஒழிப்பு:
தீமைகளுக்கெல்லாம்
தாயாக விளங்குவது மதுவாகும். நாட்டு மக்களின் ஆரோக்கியம் கெடுவது
மட்டுமல்லாமல் அனைத்து விதமான குற்றச்செயல்களும் இந்த முக்கிய காரணமாக
அமைகின்றது. நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சட்ட ஒழுங்கு
மற்றும் பொது அமைதியினை பாதுகாக்கவும் அரசு பூரண மதுவிலக்கை அமுல்படுத்த
வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
அதேபோல்
கந்துவட்டிக்கொடுமை இன்று ஏராளமான குடும்பங்கலை சவக்குழியில்
தள்ளிக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லாத சமூகமாக கந்து வட்டி
தாதாக்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை மற்றும்
நடுத்தர வர்கத்து அப்பாவி மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்கால
அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மேலும் கந்து வட்டியை
ஒழிக்க வேண்டுமென்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.