சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின்
தீர்மானத்தை பாராளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கோரி SDPI கட்சி தர்ணா
போராட்டத்தை நடத்தியது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டில் 30
சதவீத சில்லறை வியாபாரிகள் நடுவழியில் நிறுத்தப்படுவார்கள் என்று SDPI
(சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா) கட்சியின் தேசிய பொதுச்
செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நாட்டில்
சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை
அரசு வாபஸ் பெறவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். சில்லறை
வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய
அட்டைகளுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில்
கலந்துகொண்டனர்.
சிந்திக்கவும்: வால்மார்ட் விசயத்தில் BJP மவுன சாமியார் ஆனது, போலி
கம்புனிஸ்ட்களும், கருணாநிதி மற்றும் கட்சிகளும், காங்கரஸின் காலை கட்டியாக
பிடித்து கொண்டன. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது
அபாயகரமானது. இதனால், நமது ஊர்களில் வீதி தோறும் பெட்டிக்கடை வைத்து
பிழைக்கும், பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?!
இந்தியாவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தே தீருவேன் என்று
அந்நிய அடிமை மன்மோகன் சிங் திட்டங்களை வடிவமைக்கிறார். இவர் படித்த
படிப்பும், மேதாவித்தனங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரங்களை அழித்து
பணக்காரர்களின் கைகளில் இந்தியாவை கொண்டு ஒப்படைக்கும் என்பதில் ஐயம்
ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment