Tuesday, December 11, 2012

அணு உலையை இழுத்து மூடு! மாபெரும் ஆர்பாட்டம்!

கூடங்குளம் அணுஉலையை மூட சொல்லி இன்று மதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 
கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, போலீஸ் முற்றுகையைக் கைவிட்டு, பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இப்போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, பெண்கள் முன்னணி, தமிழ்நாடு மக்கள் கட்சிப், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவை, சேவ் தமிழ் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், மா.பெ.பொ.க, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், அமைப்புத் தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாயினர்

அணு உலையை இழுத்து மூடச்சொல்லி மீனவர்கள் போராட்டம்:
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடல் வழியாக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி கூட்டப்புளி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை 11 மணியளவில் சுமார் 500 படகுகளில் சென்று அணு உலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். கூடங்குளம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். போலீஸ் படையை இப்பகுதியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜெசுராஜ், முகிலன், மில்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிந்திக்கவும்: கூடன் குளம் அணு உலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை கண்டும் காணாதது போல் நடிக்கும் சர்வாதிகாரி ஜெயாவும், மண்ணு மோகன் சிங்கிற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அனைத்து இயக்கங்களும் ஒரே குரலில் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது வரவேற்க தகுந்தது. குறிப்பாக இப்போராட்டத்தில் மீனவர்களின் உயிர் தியாகங்களும் வீரியமான போராட்டமும் மிக முக்கியமானது அணு உலையை இழுத்து மூட மக்கள் இன்னும் வீரியமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு போபால், புகுஷிமா நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment