புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில்
நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு
பங்கிருப்பது தெரியவந்துள்ளது. முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா
மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில்
தொடர்புடைய, அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா
தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஹிந்துத்துவா
தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது
பழியை சுமத்தும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உண்மை
வெளிவந்துகொண்டிருக்கிறது.
2004
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜம்மு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா
அஹ்லே ஹதீஸ் மஸ்ஜிதில் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை
வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவா
தீவிரவாதிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் க்ரேனேடு
வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
தெஹ்ரீக்குல்
முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று போலீஸ்
கூறியது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஜம்மு-கஷ்மீர் போலீசாரிடம்
என்.ஐ.ஏ கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்
குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா?என்பதை ஆராயவே இந்த அறிக்கை
கேட்கப்பட்டுள்ளது.
சம்ஜோதா
எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில்
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டான்.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்
பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல
முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பதை முந்தைய தினங்களில்
என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்திருந்தான்.
No comments:
Post a Comment