Wednesday, August 29, 2012

ஊழலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை!

"நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், நடந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.

இதைக் காரணமாக வைத்து, பார்லிமென்ட் மழைக் காலக் கூட்டத் தொடரையும், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முடக்கி வருகிறது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், பா.ஜ., "பிளாக் மெயில்' அரசியல் நடத்துகிறது. இதுவே, அந்தக் கட்சியின் முக்கியக் கொள்கையாக இருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் பிரதமர் அளிக்கும் விளக்கத்தை கேட்டபிறகு முடிவு எடுக்கலாம் என பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகாலிதள கட்சி கூறியது. ஆனால், இவ்விவகாரத்தில் பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்யும் வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று பாஜக உறுதியாக கூறிவிட்டது.

“நாடாளுமன்றத்தை முடக்கினால், பிரதமர் எங்கு போய் பதிலளிப்பார்? அவர் பதிலை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவருக்கு பதில் சொல்ல வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அகாலிதளத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியான அகாலிதலின் நியாயமான கோரிக்கையை  பாரதிய ஜனதா மறுத்திருப்பதன் மூலம்  கூட்டணி முறியும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில், சுரங்க மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரெட்டி சகோதரர்கள், பா.ஜ., தலைவர்களுக்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுத்துள்ளனர் என லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். "இது தொடர்பாக, பார்லிமென்ட் குழு அமைத்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பார்லிமென்டில், தற்போது நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு, சங்கப் பரிவார் அமைப்புகளும், பா.ஜ.,வும் தான் காரணம். பார்லிமென்டை காலவரையின்றி ஒத்திவைப்பதில், எனக்கு உடன்பாடில்லை,'' என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் DMK (கருணாநிதி) + ADMK (ஜெயலலிதா). மத்தியில் பாரதிய ஜனதா + காங்கிரஸ். ஊழல் செய்வதில் ஒருவருக்கு ஒருவர் இவர்கள் சளைத்தவர்கள் இல்லை.

No comments:

Post a Comment