Monday, August 27, 2012

வதந்தி(தீ)! இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது?

மருதாணி வைப்பது  தொடங்கி சாம் கலவரம் வரை வதந்தி.  தும்மல் முதல்  காய்சல் வரை எது வந்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்று சொல்லி தப்பித்து கொள்கிறது நமது உளவுத்துறை.

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உளவுத்துறைகள் தங்களது நாட்டை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படும் போது இந்திய உளவுத்துறை உண்மைகளுக்கு மாற்றமாக ஒரு சார்பாக நடக்கிறது.


அசாம் கலவரம் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினர். அங்கு ரிஹாப் போன்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றன.


இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா, மகாராஷ்டிரா  போன்ற மாநிலங்களில் வேலைசெய்து வந்த அசாம் மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. SMS  மூலம் பரப்பப்பட்ட இந்த வதந்தியால் அசாம் மாநிலத்தவர்கள் தங்களது மாநிலத்துக்கு திரும்ப பல்லாயிரக்கணக்கில் ரயில்களில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.

அப்படி ரயில் நிலங்களில் குவிந்த மக்களுக்கு  சிரத்தையோடு  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உணவு பொட்டலங்கள், மற்றும் குடிநீர் வழங்கி வழியனுப்பினர். ஏன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு இந்த திடீர் அக்கறை. ரயிலில் கட்டணம் செலுத்தி பயண சீட்டு பெற்ற அவர்களுக்கு ஒருவேளை உணவு வாங்க முடியாதா?  அரசும், அதிகாரிகளும் வதந்திகளை நம்ம வேண்டாம் என்று சொல்லும்போது ஏன் இந்த கொலைவெறி வழியனுப்பு விழா.


அந்த மக்கள் அசாமில் போய் என்ன செய்வார்கள்? தங்களது பிழைப்பை கெடுத்து தங்களது மாநிலங்களுக்கு திரும்ப வைத்த கோபத்தினால் மீண்டும் கலவரம் வெடிக்க வாய்ப்புகள் உண்டு. நிலைமை இப்படி இருக்க இவர்களுக்கு உணவும், நீரும் கொடுத்து வலியனுப்பியவர்களின் எண்ணமும் அதுதான். இது குறித்து சரியான கோணத்தில் விசாரணை நடத்தாத உளவுத்துறை பழியை பாகிஸ்தான் மீது போடுவதேன்.


அதுபோல் முஸ்லிம்களின் புனித பண்டிகையான நோன்பு பெருநாளில் அவர்களது நிம்மதியை கெடுக்கும் வகையில் SMS ஒன்று பரப்பப்பட்டது. மருதாணி வைத்து கொண்டதால் பலர் இறந்ததாகவும், நிறய பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் SMS மூலம் வதந்தி பரப்பப்பட்டது. இதனால் பீதியடைந்த மருதாணி இட்டுக்கொண்ட  பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை அணுகி
நோன்பு திருநாளின் மகிழ்ச்சி தொலைத்தனர்.

இப்படியாக வதந்தி என்கிற பெரும் நோய் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது. இப்படி வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு பாகிஸ்தான் சதி என்று சொல்வது மக்களை ஏமாற்றுவதே ஆகும். கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி கலவர சதி செய்தார்களோ அது போன்றே இந்த வதந்திகளும் திட்ட மிட்ட சதிகளே ஆகும்.


இந்த வதந்தியால் யாருக்கு லாபம் என்பதே இங்கே கவனிக்கப்பட வேண்டியது. சாதி சண்டைகளை உண்டாக்கி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள் நமது கேவலமான அரசியல் தலைவர்கள் என்பது நாம் அறிந்ததே. அதுபோல் மதக்கலவரங்களை நடத்தி ஆதாயம் பெறுபவர்கள் யார்? என்பதை ஏன் உளவுத்துறை ஆராய மறுக்கிறது. மதக்கலவரங்களை நடத்தி மத மாச்சாரியங்களை உண்டாக்கி நாட்டை ஆள நினைப்பது யார்? 

இந்த விசயத்தில் நீண்டகாலமாக உளவுத்துறை மவுனம் காப்பதேன். உளவுத்துறை ஒரு சார்பாக செயல்படுகிறதா? அல்லது உளவுத்துறையில் சம்மந்தப்பட்டவர்கள் ஊடுருவி இருக்கிறார்களா? இதுவே நம் ஒவ்வொருவருக்கும்  இயல்பாக தோன்றும் சந்தேகங்கள்.

No comments:

Post a Comment