Monday, September 26, 2011

சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 
நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்
 அரங்கம் முழுவதும் 300-க்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பு அம்சமாக TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பொன்னாடை போற்றினார். SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்களுக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் பொன்னாடை போற்றினார். TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்களுக்கு SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் பொன்னாடை போற்றினார்.

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சகோதர்கள் மேடையில் மக்கள் முன்பாக வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர். இறுதியில் இயக்க பாகு பாடின்றி கருத்து பரிமாறி கொண்டு மதிய உணவை ஒரே ஜகனில் அமர்ந்து உண்டனர். இது இஸ்லாமிய மக்கள் அனைவரும் கொள்கை ரீதியாக பிரிந்து கிடந்தாலும் நாம் அனைவரும் இஸ்லாமிய சகோதரர்களே என்ற எண்ணத்தை பிரதிபலிகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை இஸ்லாமிய மக்கள் அனைவரும் கருத்தில் கொண்டு பாகு பாடின்றி சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டுமாய் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சார்பாக கேட்டு கொள்ள பட்டது.

No comments:

Post a Comment