Friday, September 30, 2011

ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை.........

ஏக இறைவனின் திருப்பெயரால்…!
 
அஸ்ஸலாமு அலைக்கும் (War)…,
 
தோண்டத் தோண்டப் பிணங்கள்…..
 
    சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தோண்டி எடுக்கப்பட்டன உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம். அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை சடலங்களை குழிவெட்டி அடக்கம் செய்த முதியவரான பரித்கான் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் காஷ்மீர் பற்றியெரிந்து கொண்டிருந்த முதல் பத்து வருடம் அதாவது 1990 முதல் போலிசும் ராணுவமும் கொண்டுவந்த 2500 க்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்களை தான் அடக்கம் செய்திருப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார் போன மாதம் வடக்கு காஷ்மீரின் சில மாவட்டங்களில் 38 சவக்கிடங்குகளில் 2730 அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன இவற்றுள் 574 சடலங்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டது இதன் பின்னர் மாநில மனித உரிமைக் கமிஷன் மாநிலத்தின் வேறு பல இடங்களிலும் இது போன்று பல்லாயிரம் பேரை ராணுவமும் போலிசாரும் கொன்று புதைத்திருக்கலாம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரனைகளில் ஜம்முவில் உள்ள பூஞ் மாவட்டத்தில் மூன்றறை ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள அடக்கஸ்தலத்தில் 2500 அடையாளம் தெரியாத இளைஞர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது போலிசும் ராணுவமும் கொண்டு வந்த சடலங்களை நானும் என்னுடன் உள்ள மற்ற சிலரும் சேர்ந்து அடக்கம் செய்துள்ளதாக அங்குள்ள ஸோபி அஜிஸ் ஜு வெளிப்படுத்தியுள்ளது நாட்டையே மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கன்றது எல்லா உடல்களுமே குண்டு துளைத்த நிலையில் இருந்ததாகவும் யாருடைய முகமும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்க்காக சிதைக்ப்பட்டிருந்ததாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் ராணுவத்தினரும் போலிசும் உடல்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் ஒருநாள் 16 உடல்களை ஒன்றாக ஒரே (கப்ரில்) குழியில் அடக்கம் செய்ய நேர்ந்த போது சோகத்தால் என்னுடைய மனமே கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக கண்ணீருடன் கூறுகின்றார் ஸோபி அஜிஸ் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் கொள்ளப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லித்தான் போலிசும் ராணுவத்தினரும் உடல்களைக் கொண்டுவந்திருக்கன்றனர் சில நேரங்களில் உடல்களின் சில பாகங்கள் மட்டுமே அடக்கம் செய்ய வந்திருப்பதாகவும் ஒருநாள் உடல்கள் இல்லாமல் ஏழு தலைகள் மட்டும் வந்திருந்ததாகவும் ஆனால் போலிசார் ஏழு முழு உடல்களைக் கொண்டு வந்ததாக எழுதிக் கேட்டதாகவும் பயத்தினால் வேறோன்றும் கேட்காமல் அவர்கள் கேட்டது போல தான் எழுதிக்கொடுத்ததாகவும் ஸோபி அஜிஸ் கூறுகின்றார் 1990 காலகட்டங்களில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருந்த போதுதான் அதிக அளவில் சடலங்கள் வந்து கொண்டிருந்ததாகவும் தினமும் இரண்டு மூன்று சடலங்களாவது வந்துவிடும் என்றும் பூஞ்சிலே வேறு சிலரும் உடல்களை அடக்கம் செய்ய உதவியதாகவும் உடல்களை அடக்கம் செய்த பிறகே அதிகாரிகள் அங்கிருந்து செல்வார்கள் என்றும் அவர் கூறுகின்றார் பூஞ் மாவட்டம் என்பதால் நாட்டிற்க்குள் ஊடுறுவ வந்த தீவிரவாதிகள் என்று சொல்லி சுட்டுக் கொள்ள வசதியாக இருந்ததால் வேறு பல இடங்களிலும் உள்ள இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு வந்து பூஞ்சில் வைத்து சுட்டுக் கொன்று அங்குள்ள அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவையெல்லாமே அடையாளம் தெரியாததாகவும் இருந்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது ஜம்முவில் உள்ள மன்தி கிராமத்திலும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த ஹதிப்கான் கூறுகின்றார் கொண்டு வரப்படும் சடலங்களுக்கு உறவினர்கள் யார் என்று இல்லாததால் நாங்கள் மட்டுமே இறந்த உடலுக்குச் செய்யவேண்டிய தொழுகை உட்பட இறுதிக் கடமைகளைச் செய்து அடக்கம் செய்திருப்பதாக கூறுகின்றார் கம்பி வேலி கட்டி அடக்கஸ்தலம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் 1990 முதல் 2000 வரைக்கும் உடல்கள் வந்து கொண்டிருந்ததாகவும் பிதல் என்ற கிராமத்தில் நடந்த சண்டையில் 33 பேரின் உடல்களே முதன்முதலாக கொண்டு வந்ததாகவும் பதினொன்று பதினொன்று வீதம் மூன்று குழிகளில் 33 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ததாகவும் கூறினார் மேலும் ரஜீர் என்ற கிராமத்தில் உள்ள அடக்கஸ்தலத்திலும் இது போன்ற பல நூறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுருக்கின்றன பூஞ் மற்றும் ரஜீரி மாவட்டங்களிலும் அடையாளம் தெரியாத பல உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவைகளையும் தோன்டி எடுத்து டி என் ஏ பரிசோதனை உட்பட மற்ற சோதனைகளையும் நடத்தி அடையாளம் காண வேண்டும் என்று அங்குள்ள மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது இந்தியா தன்னை ஜனநாயக நாடு என்று சோல்லிக் கொண்டாலும் காஷ்மீரில் தோண்டத் தோண்ட கிடைக்கும் இது போன்ற ஆயிரக்கனக்கான அப்பாவி இளைஞர்களை (தீவிரவாதிகளை அல்ல) கொன்று குவித்திருப்பதன் மூலம் மத்திய அரசும் இந்திய ராணுவமும் எந்த அளவிற்க்கு மிருகத்தனமாக காஷ்மீரிகளின் விஷயத்தில் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறியலாம்.
 Source: மலையாள நாளிதலான மாத்யமம் செய்திகளில் இருந்து தொகுக்ப்பட்டது

4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

2:216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.

 

No comments:

Post a Comment