அன்பார்ந்த சகோதரர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த சில நாட்களாக நமது ஊரில் ஒரு விதமான பயமும் பரபரப்பும் தொற்றி கொண்டு இருந்தது .அது என்னவனில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எப்போதும் எடுத்து செல்லும் பாதையை விட்டு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எடுத்து செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தது காவி கும்பல்.இவர்கள் கடந்த வருடம் கூத்தாநல்லூர் உள்ளே முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அத்து மீறி கலவரம் செய்யும் நோக்கத்துடன் ஊர்வலம் கொண்டு வந்தனர் , அதனை அறிந்த கூத்தாநல்லூர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஊர்வலம் கொண்டுவந்த ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை மற்றும் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஊர் உள்ளே எடுத்து வர காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது இதை கூத்தாநல்லூர் ஜமாத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விநாயகர் ஊர்வலம் ஊர் உள்ளே வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் திருவாரூர் கலக்டர் ஆணைப்படி 15-ஆம் தேதிக்குள் விநாயகர் சிலையை பழைய வழியில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்குமாறு ஆணை பிறப்பிக்கபட்டது பின்பு கூத்தாநல்லூர் காவல் துறையினரால் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. அதையும் பெரிது படுத்தாத ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் 17-ஆம் தேதி வரை கலவரம் செய்யும் நோக்கத்துடனே இருந்தனர்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் திருவாரூர் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் உத்திரவின் பேரில் 18-ஆம் தேதி காலையில் ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுக்காப்புடன் விநாயகர் சிலையை போலீசார் லெட்சுமாங்குடி ஆற்றில் கரைத்தனர். போலிசாரின் இந்த முயற்சியால் ஹிந்துத்துவ வாதிகளின் கலவர திட்டம் முறியடிக்க பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் திருவாரூர் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் உத்திரவின் பேரில் 18-ஆம் தேதி காலையில் ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுக்காப்புடன் விநாயகர் சிலையை போலீசார் லெட்சுமாங்குடி ஆற்றில் கரைத்தனர். போலிசாரின் இந்த முயற்சியால் ஹிந்துத்துவ வாதிகளின் கலவர திட்டம் முறியடிக்க பட்டது.
இவ்வாறு கலவர திட்டத்தை முறியடித்து ஊருக்கு அரண்களாக விளங்கிய நமதூர் இளைஞர்களுக்கும, கூத்தாநல்லூர் ஜமாத் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் , சமூக ஆர்வலர்களுக்கும் , சமுதாய இயக்கங்களான PFI, TMMK, TNTJ நிர்வாகிகளுக்கும் மற்றும் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும், கூத்தாநல்லூர் நகர காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!
நன்றியுடன்.........
S.B. பைசல் ரஹ்மான்
கூத்தாநல்லூர் போஸ்ட் இணையதளம்
மற்றும்
புருனை வாழ் கூத்தாநல்லூர் சகோதரர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,,, கூத்தாநல்லூர் போஸ்ட் சகோதரர் பைசல்ரஹ்மான் அவர்களே தங்கள் செய்தியை கண்டு மகிழ்ந்தோம் எல்லாபுகழும் இறைவனுக்கே இருந்தாலும் உள்ளூர்செய்தியாய் இருப்பதினால் இன்னும் விரைவாக கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து ஏன் என்றால் நாங்கலெள்ளாம் துபையில் இருப்பதனால் என்னமோ ஏதோ என்று பரபரத்துகொண்டிருந்தோம் ஒகே எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்
ReplyDeleteவஅலைக்கும் சலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,, உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் அவர்களே.இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் செய்திகளை வேகமாக பதிவு செய்வதற்கு முயற்சி செய்கிறேன்.தொடர்ந்து எங்கள் பதிவுகளை படித்து வாருங்கள்.எங்களுக்காக இறைவனிடத்தில் துஆ செய்யுங்கள். நன்றி வஸ்ஸலாம்.
ReplyDeleteநன்றியுடன்
பைசல் ரஹ்மான்