Friday, November 23, 2012

கசாபுக்கு தூக்குதண்டனை சரியா? தவறா?

போபால் விசவாய்வு கசிவில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்ற அமெரிக்கர் அன்டர்சன் சுகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். கசாபுக்கு அவசர அவசரமாக தூக்கு!

மனசாட்சி இல்லாத அரசியல்வாதி: கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவை அழிக்க நினைத்தவன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன். இந்த தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றி இருக்கப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றி இருந்தால் நமது நாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு அது பாடமாக அமையும் என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி உள்ள அரசியல்வாதி: அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மரணத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட24 மணி நேரத்திற்குள் கஸாபை தூக்கிலிட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: ஒரு மனிதனை கொல்வதை பார்த்து மகிழ்கிறேன் என்று ஒரு காந்தியவாதி சொல்கிறார். காந்தி அஹிம்சையை போதித்தவர். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கும் போதும் அகிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் வந்த காந்தியவாதி அன்னா ஹசாரேக்கு ஏன் இந்த கொலைவெறி? இப்படி இவரை பேசத்தூண்டுவது எது? யார்?

பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்க படவேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் இதைப்போல் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை மதக்கலவரங்கள் மூலம் கொன்ற மோடி, அத்வானி போன்றோருக்கு பொது இடத்தில் தூக்கு கொடுக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகொள் விடுப்பாரா? இப்படி இவரை பேச தூண்டாதது எது?

கசாபின் தூக்கை எதிர்த்து கருத்து சொல்ல பெரும்பான்மையான அரசியல்வாதிளுக்கு தைரியம் இல்லை. அப்படி கருத்து சொன்னால் தேசபக்தி என்கிற முகமூடி தரித்த பார்பன ஊடகங்களும், பார்பன அரசியல் ஆதிக்க சக்திகளும், ஹிந்துத்துவாவை உருவாக்கி அதன் தலைமை பீடங்களை அலங்கரிக்கும் அவாள்களும் தங்கள் மீது பாய்வார்கள். இதன் மூலம் தங்களை தேசதுரோகி என்று பட்டம் கெட்டுவர் என்கிற பயமே. இது போன்ற தருணங்களில் தைரியமாக கருத்து சொல்லும் வைகோ போன்றவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அது
கடுகளவு கூட இந்தியாவில் இல்லை.
 *மலர் விழி*

No comments:

Post a Comment