ஹைதராபாத்:ஹைதராபாத்தை அடுத்த
தப்பசபூத்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று
மாலை முஸ்லிம்களின் கடைகள் “தீ” வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த 10
தினங்களாகவே குர்பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு
சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத்
பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28-ம் தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில்
உள்ள “தர்கா”வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி
நடத்தினர்,
இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது.
கலவரக்காரர்கள் “கன்னடம்” மற்றும்
“மராட்டிய” மொழிகளில் குரல் கொடுத்த வண்ணம் வன்முறை வெறியாட்டத்தில்
ஈடுபட்டதாக உள்ளூர் மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர், நிலைமையின் கடுமையை
உணர்ந்த, மேற்கு மண்டல டி.ஸி.பி., ஸ்டீபன் ரவீந்தர், ஏ.ஸி.பி.டி.,
ஸ்ரீனிவாஸ், ஆகியோர் தலைமையில், ஏ.ஸி.பி.டி., நாகராஜ் மேற்பார்வையில்,
இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தில்
முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,
காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. என்றாலும், கலவரம் பரவாமல் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னடம் மற்றும் மராட்டிய மொழி பேசக்கூடிய
கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களை யார் அழைத்து வந்தனர்? போன்ற
கேள்விகளுக்கு, பதில் தெரியாமல் முஸ்லிம்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
No comments:
Post a Comment