பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி என்றே பலராலும்
நம்பப்பட்டு வருகிறது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடி என்ற
கருத்து எழுப்பப்படும் பொழுதெல்லாம் அதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக
மறுத்தே வந்துள்ளது.
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது எங்களுக்கு
மரியாதை உண்டு, ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டும்
என்று எங்களுக்கு கட்டாயமில்லை, அவர்களும் எங்களை நிர்பந்திக்க முடியாது
என்று பாரதிய ஜனதா கட்சியினர் பகல் வேஷம் போட்டு வந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்
பங்காரு லட்சுமணன் உழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் அவர்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்
என்றதும் அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பொழுது நிதின் கட்கரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தில் அவர் உயர்ஜாதி என்பதால் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகின்றது.
இந்நிலையில்
நிதின் கட்கரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுளை விசாரிக்கும் பொறுப்பை
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான
குருமூர்த்தியிடம் ஒப்படைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி
விவகாரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். எப்படி தலையிட முடியும்? அதுவும் கட்சியின்
அகில இந்திய தலைவர் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் இவர்கள் கைகளுக்கு
எப்படி போனது?
இதில்
இருந்து ஒன்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது பாரதிய ஜனதா கட்சி,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடியே! இதை வெளிப்படியாக காட்டி
கொள்ளாத பாரதிய ஜனதா, முஸ்லிம் லீக் போல் நாங்களும் ஒரு கட்சி என்று சொல்லி
இந்து மக்களின் ஓட்டை நயவஞ்சகமாக பெற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. பாரதிய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ்.
இயக்கமும் வேறல்ல! இவைகள் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!.
No comments:
Post a Comment