Friday, August 19, 2011

மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை: ஆகஸ்ட் 16ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை அவமதித்து, சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

 
சுதந்திர தின அணிவகுப்பு கொண்டாட்டங்கள் நடக்க வேண்டிய மேலப்பாளையத்தில் கடந்த செவ்வாய்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவிம், நேஷன் விமன்ஸ் ப்ரண்டின் மாநில துணைத்தலைவரி பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினார். ஆண்கள் பெண்கள் என திரளான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்தின் இந்த அராஜக போக்கினை கண்டித்து கண்டன குரல் எழுப்பினர்.

No comments:

Post a Comment