Monday, August 15, 2011

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றிடவும் நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் மீண்டும் தனி வாக்காளர் தொகுதிகளை (இரட்டை வாக்குரிமை)அமைக்க கோரியும் சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் துணை அமைப்புகளான இசுலாமிய சனநாயகப் பேரவை, சமூக நல்லிணக்க பேரவை சார்பாக வரும் டிசம்பர் 11 -ல் சென்னையில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற உள்ளது. இதை விளக்கி “மாபெரும் கருத்தரங்கம்” சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஜுலை 30- ல் நடைபெற்றது. 
 இமாம் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, முஸ்லிம் லீக்கை சேர்ந்த எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி, SDPI ன் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
         இதில் சிந்தனையாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment