வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் - இது தத்துவம். என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?
1876 பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பஞ்சம்...
பஞ்சநிவாரண பலனாகக் கிடைத்தது பக்கிங்ஹாம் கால்வாய் !! எந்த ஆங்கில சிப்பாயும் இந்தியப்பெண்களை வன்புணர்வு செய்யவில்லை..
1947 ல் சுதந்திரம் கிடைத்தது..
பிரதமர் கொடியேற்றினார்.. 1966 சுதந்திர இந்தியாவில் பீகார்பஞ்சம்
1968 கூலிகேட்டால் சொர்க்கம்கிடைக்கும் ,
கீழ்வெண்மணியில் 44 உழைப்பாளிகளுக்கு சொர்க்கபதவி..
மறந்துட்டோம்..
1997 ல் சுதந்திர பொன்விழா
பிரதமர் கொடியேற்றினார், மிட்டாய் தின்றோம் கைத்தட்டினோம்
இருநாட்டு அரசியல்சகுனிகளின் சூழ்ச்சியில் கார்கில்யுத்தம்
செத்தவன் சகோதரன்...தெரியாமல் கொண்டாடினோம் வெற்றியை..
மார்தட்டி சென்ற இளைஞன் சவப்பெட்டியில் திரும்பினான்..
அதிலும் ஊழல் செய்தார்...மறந்து...? மன்னித்துவிட்டோம்..
தொடர்ந்த பொன்விழா ஆண்டுசிறப்பாய்..
கூலிகேட்டவர்க்கு சொர்க்கம் கொடுக்கும் கொள்கைப்படி 1999 தாமிரபரணி சம்பவம் அட...மறந்தே போனோம்..!! 2000 மில்லேனியம் 21 ம் நூற்றாண்டு..குஜராத்தை கொளுத்தி கொண்டாடினார் அரசியல் சதுருக்கு அண்ணன் தம்பி பலி..அக்கா தங்கை சூறையாடல் மறந்துட்டோம்...ஆமா மறந்துட்டோம்..
தோணியில இந்தியா கொடிகட்டி கடல்ல இரங்கற நம்ம தமிழ் மீனவங்களை கொத்துக்கொத்தாக் கொன்னுப் போடுவான் தமிழனைக் கொன்னழிக்கிற சிங்கள இராணுவத்துக்கு நம்மஊருல விருந்தும்பயிற்சியும்.. சுதந்திர இந்தியன் மறந்துடுவான்... மறந்துட்டீங்கல்ல.. அதேதான் மறந்துடுங்க..
பீரங்கி , புண்ணாக்கு ,பொறம்போக்கு, அட திட்டலப்பா ..
ஏற்றுதி.. இறக்குமதி, சவப்பெட்டி, ரயில் பெட்டி, ஓட்டுப் பெட்டி, ஸ்பெக்ட்ரம், சுதந்திர இந்தியா சாதனை படைத்த ஊழல்கள்!! மறந்துட்டோம்ல...ஆமாமா மறந்துட்டோம்..!!2011 ஆகஸ்ட் 15 , பிரதமர் கொடியேற்றினார்
மிட்டாய் தின்றோம்...கைத்தட்டினோம்
2020 ல் ஆப்ரிக்காவை எட்டிப்பிடிப்போம் பட்டினிச்சாவில்..!!
உலகின் வீடில்லாதோர் பட்டியலில் ஆறாமிடம் நமக்குத்தான் !!
பெண்கள் வசிக்க ஆபத்தானநாடுகள் பட்டியல்ல மூன்றாமிடம் நமக்கேதான் !! மறந்துடுவோம்..........?ரௌத்திரம் பழகு
யாழினி
No comments:
Post a Comment