Friday, August 19, 2011

தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து சென்னையில் ஆர்பாட்டம்

இந்தியாவின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூரிந்திடவும் போராடிபெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாடங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.

ஆனால் இவ்வருடம் தமிழகத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்து நீதிமன்றத்தை அனுக வாய்ப்பு தராமல் அனுமதி மறுத்துள்ளது காவல்துறை மற்றும் தமிழ அரசு. இந்த உரிமை மீறலையும் சிறுபான்மை விரோத போக்கையும் கண்டிக்கும் வகையில் 17.08.2011 (புதன்கிழமை) மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மு.முஹம்மது இஸ்மாயில் (மாநில துணைத்தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்) கூறும்போது சுதந்திர தினத்தன்று நாடே கோலாகலத்தில் இருக்கும் போது அந்த சுதந்திர தினத்தை கொண்டாடக்கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது மாபெரும் அநீதியாகும் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது "200 ஆண்டுகள் ஆடாக வாழ்வதை விட 2 நாட்கள் புலியாக வாழ்வதே மேல்" என்று முழங்கிய திப்பு சுல்தானின் வாரிசுகள் நாங்கள், சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை அதை எவர் பறித்தாலும் அனுமதிக்கமாட்டோம் என்பதை நாங்கள் பதிவு செய்ய விரும்புகின்றோம் என்று கூறினார்.


இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு சமுதாய தலைவர்களும், பொதுமக்களும், பெண்களும் பெருந்திறலாக கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

No comments:

Post a Comment