Friday, August 5, 2011

"19" கூட்டத்தினருக்கு மீண்டும் சவுக்கடி

அஹ்லே குர்ஆன் என்றும் சரணடைந்தோர் என்றும் தங்களை அழைத்துக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் கடும் குழப்பத்தை விளைவித்துக்கொண்டிருக்கின்றனர் ஒரு கூட்டம். குர்-ஆன் 19 எண்ணை கொண்டு தான் அடங்கி இருக்கிறது என்று ஒரு அபத்தமான கணித கணக்கை ஏற்படுத்தி முஸ்லிம் சமூகத்தில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.


அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு வேதியல் ஆசிரியரான "ரஷாத் கலீஃபா" தன்னை ஒரு ரஸுலாக கூறிக்கொண்டு பலரையும் வழி கெடுத்தான். குர் ஆன் மட்டுமே போதும் ஹதீஸ்கள் தேவையில்லை என்றும் அவை அனைத்தும் கற்பனை என்றும் கூறி முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தினான்.


இவனை பின்பற்றி பலரும் தங்களது தூய மார்க்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ரமழான் மாதத்தில் மற்றவர்களைப் போல் இவர்களும் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் தங்களது கொள்கையை ஸஹர் நேரத்தில் பரப்பினார்கள். நம் சமூக மக்களுக்கு இதனை தெரிவித்து ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதிற்கினங்க இன்று முதல் அவர்களது நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!


ஒட்டு மொத்த சமூகமும் ஒன்றினைந்து செயல்பட்டதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழி சும்மாவா சொல்லியுள்ளார்கள்?


ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment