Saturday, December 31, 2011

7 இந்திய மாநிலங்களில் விவசாயத் திட்டத்தை துவக்குகிறது இஸ்ரேல்

விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதற்கும் மத்தியக்கிழக்கில் பயங்கரவாத நாடாக திகழும் இஸ்ரேல் இந்தியாவில் கால்பதிக்கிறது. ஏழு மாநிலங்களில்
2012-ஏப்ரல் மாதம் விவசாய திட்டத்தை துவக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
 
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மஹராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தில் இத்திட்டத்தின் தலைவர் யஹேல் விலன் அறிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம் விவசாயப்பொருட்களின் விளைச்சலை அதிகரிக்கவும் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுப்பதும் ஆகும் என யஹேல் தெரிவித்துள்ளார். 

இத்திட்டத்தின் கீழ் 30க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள்(project) உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த யஹேல், ஏற்கனவே குஜராத், ஹரியானா மாநிலங்களில் ஒரு சில செயல்திட்டங்களில் இஸ்ரேல் ஒத்துழைக்கிறது என கூறினார்.

சுய தொழில் செய்வதற்கு உதவி வரும் ரிஹாப் இந்தியா

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் இரண்டு வருடங்களுக்கு முன்பாக புதுடெல்லியில் ஏழை எளிய மக்கள் சுயதொழில் செய்வதற்கான உதவிகளை செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தது.


ரிஹாப் இந்தியாவின் தலைவர் இ.அபூபக்கர் சைக்கிள் ரிக்ஸா வழங்குகிறார். உடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் ஆகியோர்.



அதன் அடிப்படையில் வட்டிக்கு கடன் பெற்று சைக்கிள் ரிக்ஸா வாங்கி அதன் மூலம் வட்டியை மட்டுமே அடைத்துக்கொண்டு வட இந்தியாவில் எண்ணற்ற முஸ்லிம்கள் தங்களது வாழ்நாளை கழித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும் வட்டியில்லாமல் அவர்களுக்கு சைக்கிள் ரிக்ஸாக்களை வழங்கி அதன் மூலம் ஓரளவிற்கு மாத வருமானம் ஈட்டுவதற்குண்டான் வழிவகை செய்தது ரிஹாப் இந்தியா.

ரிஹாப் இந்தியா மூலம் வட்டியில்லாமல் சைக்கிள் ரிக்ஸாக்களை பெற்ற 99% அதன் மூலம் சம்பாதித்து சைக்கிள் ரிக்ஸாவிற்குண்டான பணத்தை திருப்பி கட்டியுள்ளனர். திரும்பப் பெற்ற பணத்தின் மூலம் இதே முறையில் மற்றவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஸா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவில் வட்டியில்லா கடன் உதவி செய்வதற்கும் ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் 51 நபர்களுக்கு சைக்கிள் ரிக்ஸா வழங்கும் நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியாவின் தலைவர் இ.அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொள்ள இருகிறார்கள்.

ரிஹாப் இந்தியா பற்றி:

கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் எந்த ஒரு இலாபத்தையும் எதிர்பார்க்காமல் முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே துவங்கப்பட்டது. தற்போது ரிஹாப்  இந்தியா டெல்லி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மட்டுமே சேவைகளை செய்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கும் பணியை ரிஹாப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதில் இந்த ஆண்டு துவக்கத்தில் இறைவனின் மிகக்கிருபையால் முதல் காரியமாக 49 வீடுகளை கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைந்துள்ளனர். முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே இவ்வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 1000 வீடுகளை கட்டுவதற்கு ரிஹாப் இந்தியா தீர்மானித்துள்ளது.

ரிஹாப் இந்தியா தொடங்கப்பட்டு சிறிது காலத்திலேயே மேற்கு வங்காளத்தில் குடிநீர் வசதி செய்வதற்கான ஏற்பாட்டை செய்தது சிறப்பம்சமாகும். இந்த ஏற்பாட்டின் மூலம் தற்போது மேற்கு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று வரை பயன் அடைந்து வருகின்றனர்.

மேற்குவங்காளம் முர்ஷிதாபாத்தில் உள்ள பெராம்பூர் நகரில் வருகின்ற ஜனவரி 1, 2012 அன்று சைக்கிள் ரிக்ஸா மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. அதே போன்று அன்றைய தினமே முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி என்னும் இடத்தில் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 ஊற்று கிணறுகள் தோண்டப்பட்டு நீரை இரைச்சுவதற்கான உரிய  சாதனங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  சாகர்திகி பகுதி மக்கள் குடிநீரை எடுப்பதற்காக பல கி.மீ நடக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. மேலும் அதே தினத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும், மருத்துவ உதவி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



குழந்தைகளின் படிப்பிற்காக தாரளமாக உதவி செய்யுங்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. "ஸ்கூல் சலோ"  (பள்ளி செல்வோம்!) என்ற கோஷத்தோடு ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் கல்வியை தொடர முடியாத பிள்ளைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்!

20 டிசம்பர் 2011 முதல் 10 ஜனவரி 2012 முதல் நடக்கும் இப்பிரச்சாரத்தில் பல்வேறு விதமான பணிகளை செய்வதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள்:
1.) 6 முதல் 14 வயது வரை இருக்கக்கூடிய குழந்தைகளில் 4.2 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை.
2.) 2 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளியாக இருக்கின்றனர்.
3.)இந்தியாவில் 16% கிராமங்களில் அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கக்கூடிய பள்ளிகூடங்களே இல்லை.

எத்தனையோ குழந்தைகள் வெறும் 2 வேலை உணவிற்காக மட்டுமே கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.



மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் நிலை:
1.) இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள் கொண்ட மாநிலமாக மேற்குவங்காள் திகழ்கிறது. 25.2% முஸ்லிம்கள் இங்கே வாழ்கின்றனர்.

2.) முஸ்லிம்கள் அதிகம் வாழும் 10 மாவட்டங்களில் 5 மாவட்டங்கள் மேற்கு வங்காளத்தில் தான் இருக்கின்றன.

3.) 2001 ஆம் வருடம் சர்சார் கமிட்டி கொடுத்த அறிக்கையின் படி மேற்குவங்காள முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை விட பின் தங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

4.) 6 நூற்றாண்டுகளாக நவாப் பரம்பரையைச் சேர்ந்தவர்கல் மேற்கு வங்காளத்தில் வசித்திருக்கின்றனர்.


பிற மக்களை காட்டிலும் மேற்கு வங்காள முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.


மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் வாழும் பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை கல்வியை பெறுவதற்குகூட வழி இல்லாத நிலை.


நாம் அனைவரும் ஒன்றினைந்து அவர்களுடைய இந்த அவல நிலையை போக்குவதற்கு நம்மாலான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமல்லவா?

நாம் உடனே துரிதமாக செயல்பட்டு முதலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டும்.


அவர்களது முகங்களில் பிரகாசத்தை ஏற்படுத்த வேண்டும்.


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தாராளமாக உதவி செய்யுங்கள்!

மேற்கு வங்காளத்தில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில்தான் பள்ளிகளில் குழந்தைகளை சேர்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. பெற்றோர்களின் கல்வி அறிவு இல்லாததாலும், வறுமையினாலும் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. 6 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாயம் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் மேற்கு வங்காள பாப்புலர் ஃப்ரண்ட் "ஸ்கூல் சலோ" என்ற தலைப்பில் மூன்று வார பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சாரத்தில் சிறப்பு அம்சமாக:

வீடுதோரும் சென்று கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கல்வி அறிவு பெறாத குழந்தைகளின் கணக்கெடுப்பு, பள்ளிப்படிப்பை இடையில் கைவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புதல், விழிப்புணர்வு பேரணிகள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள், போன்றவை நடைபெற்று வருகிறது.


பள்ளி படிப்பிற்கு தேவையான பொருட்களை 10,000 குழந்தைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்க இருக்கிறது. ஜனவரி 1, 2012 அன்று நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான கலந்து கொள்ள இருக்கிறார்.

ஒரு குழந்தைக்கு பள்ளிக்கு தேவையான  பொருட்களை வழங்குவதற்கு சரியாக ரூபாய் 300/- தேவைபடுகிறது. நீங்களும் தாராளமாக தங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவிகளை தரவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பொருளாதார விருப்பமுள்ளவர்கள் கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு உங்களுடைய தொகையை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

பெயர்: முஹிப்புல் ஷேக்
வங்கி கணக்கு எண்: 31899955934
வங்கி பெயர்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பிராஞ்: டால்டான்பூர், IFSC CODE: SBIN 008737




நமது நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

"கல்வியை கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை"

"உங்களில் மிகச்சிறந்தவர், பிறருக்கு உதவக்கூடியவரே!"

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கு நற்கூலிகளை வழங்கிடுவானாக! மேலும் நம் சமூகத்தை வலிமைமிக்க சமூகமாக மாற்றி பிறருக்கு உதவக்கூடிய சமூகமாக மாற்றுவானாக! ஆமீன்!

குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!

மணல் தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் பயன்கள்:  

1) தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.

2) சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும்.

3) மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.


4) உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.

5) நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம்.


6) கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது.

7) இக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.


8) மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

9) இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் பெரிதும் உதவுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது.

நரகில் விடுதலை கிடைக்கும் நாள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
 
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை.(இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?  (அல்குர்ஆன் 3 : 185)
 
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது அவனுடைய மிககப்பெரிய கருணையாகும்.சிறப்புக்குரிய
அந்தநாட்களாவன:-
 
1. ரமளான் மாதம்,
2. ரமளானின் கடைசிப் பத்து நாட்கள்.
3. ரமளானின் லைலத்துல் கத்ரு இரவு.
4. ஜும்ஆவுடைய நாள்.
5. ஜும்ஆவுடைய நாளில் இமாம் மிம்பரில் ஏறியது முதல் இறங்குவதுவரை.
6. ஒவ்வொரு நாளும் பிந்திய இரவு.
7. அந்த வரிசையில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்!
இந்;நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன!
அல்லாஹ் கூறுகிறான்
 
வைகறைப் பொழுதின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (அல்பஜ்ர் 89:1-2)
 
1.துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு இறைவன் ஆணையிட்டுக் கூறுவதென்றால் நிச்சயமாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கவேண்டும்.இல்லை யெனில் அவ்வாறு ஆணையிட்டுக்கூறும் அவசியமில்லை.
 
2.அடியார்கள் தன்னை குறிப்பிட்ட நாட்களில் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறிய நாட்களும் இந்த துல்ஹஜ் பத்து நாட்களில் தான் வருகிறது.
 
இறைவன் திருமறையில் கூறுகிறான்:
 
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ
 
அவர்கள் தங்களுடைய (இம்மை,மறுமைப்) பேறுகளை பெறுவதற்காகவும்சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காகவும்,குறிப்பிட்டநாட்களில்அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும்,( ஹஜ்ஜுக்கு வருவார்கள்) 22:28.
 
இவ்வசனத்தில் ‘குறிப்பிட்ட நாட்கள்’ என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என்பது பெருமபாலான் அறிஞர்களின் கருத்தாகும். இப்னு உமர் (ரலி)இப்னு அப்பாஸ் (ரலிஆகியோரும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
 
3. துல்ஹஜ்ஜு பத்து நாட்களும்,உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையும் விடவும் சிறந்ததாஎன நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதையும் விடவும் இது சிறந்தது.ஆனால் ஒருவன் அவனுடைய பாதையில் தனது உயிர்,பொருள் போர் ஆகிவற்றால் போர் புரிந்து திரும்பி வராமல் ஷஹீதாகி மரணித்தவரைத் தவிர’ எனக்கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ,ஆதாரம்: புகாரி)
 
4. அரபா நாளும் அதில் உள்ளது. அரபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும், நரகவிடுதலையும் நிடைக்கும நாளாகும்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரபா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செயவதில்லை.அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து,இவர்கள் என்ன விரும்புகின்றனர்என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி), ஆதாரம்: முஸ்லிம்.)
 
துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புக்கும்,மாண்புக்கும் அரபாத் நாள் அந்நாளில் இருப்பது ஒன்றே போதுமானது.
 
5. துல்ஹஜ் பத்துநாட்களிலும் அமல் செய்வது ஏனைய நாட்களில் அமல் செய்வதைவிடவும் மேலானது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உலக நாட்களில் மிகவும் அமலகள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும.; இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை!எனவே இந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹுஎன்றும்,அல்லாஹு அக்பர் என்றும்,அல் ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்!
(அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூலகள் : முஸ்னத் அஹ்மத்,தப்ரானி.)
 
பத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :      துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்!
தொழுகைநோன்புதர்மம்ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிகக் கவனம் செலுத்துவது சிறப்பாகும் :-
 
நோன்பு
இந்நாட்களில் ஸுன்னத்தான நோன்புகளை நோற்கவேண்டும்., நோன்பும் நல்லமல்களில் உள்ளதாகும்.
 
தக்பீர் சொல்வது
இதற்கு மேலே சொன்ன நபி;மொழி ஆதாரமாய் உள்ளது. அதை அறிவித்த இப்னு உமர்(ரலி) அவர்கள் இந்நாட்களில் –தொழுகைக்குப் பின்பும் தக்பீர் அதிகம் சொல்பவர்களாய் இருந்துள்ளார்கள். வீதிகளிலும் கூடாரத்தில் வைத்தும் மக்களின் அவைகளிலும் அதிகம் தக்பீர் சொல்பவர்களாய் இருந்துள்ளனர்.
 
அரஃபா நாளின் நோன்பு
ஹாஜிகள் அல்லாதாருக்கு இந்நோன்பு ஸுன்னத்!; இந்த நோன்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:- இந்தநோன்பு சென்ற ஆண்டுக்கும் வரும் ஆண்டுக்கும்குற்றப் பரிகாரமாகஅமையும் என நான் எண்ணுகிறேன்,. ஆறிவிப்பவர்:அபூகதாதா அல் அனஸாரி(ரலி) ஆதாரம்: முஸ்லிம்,அபூதாவூதுநஸயீ)

அரஃபாவில் தங்கியுள்ள ஹாஜிகள் இந்நோன்பை நோற்க மாட்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்காமல் தான் அரஃபாவில் தங்கியிருந்தார்கள்!
 
இந்நாட்களை நாம் சிறப்பிப்போம்.
நன்மைகளைத் தேடிக்கொள்வதற்கான் இதுபோன்ற காலகட்டங்களில் பாவமீட்சி தேடி இறைவன்பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்! அது தூய்மையான பாவமீட்சியாகவும் வாய்மையான தாகவும் இருக்கவேண்டும்பாவங்ளை விட்டு விலகுவதுடன் இனி எப்போதும் அவற்றைச் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும்! நிச்சயமாக பாவங்கள்தாம் இறையருளைப் பெறவிடாமல் மனிதனைத் தடுத்து அவனை இறைவனை விட்டும் தூரமாக்கு கின்றன!
 
நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கிவழிபட்டு அவனது அன்பையும்அருளையும் பெறமுயல் வோமாக!

Friday, December 30, 2011

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும்நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும்நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).
2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"
எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).
 
ஆயத்துல் குர்ஸி:
"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255). 

 اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும்பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாதுஅவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும்பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன்மகத்துவமிக்கவன்.
3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:  

 أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'
அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லைஅவன் தனித்தவன்அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும்முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும்சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரிமுஸ்லிம்)
5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்அபூதாவூத்நஸாஈ).

6. 
ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரைசுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமாஉங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
8. கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்துபின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
10. நாவையும்மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும்தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
அவனிடமிருந்த வந்தோம் , அவனிடமே செல்வோம் .

Monday, December 26, 2011

காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது

இந்தியாவின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெரும்பாலான ஊனமுற்றோர்களை உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரிகர்கள், கடந்த மாதம் இறுதியில் தங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் காணாமல் போனதை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான வழக்கு அறிவிப்பை இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் ஜெத்தாவில் உள்ள ஹஜ் மற்றும் இந்திய தூதரகத்தின் தலைவர் பி.எஸ்.முபாரக் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில்; ‘மேற்கு வங்காளத்திற்கான கடைசி விமானம் டிசம்பர் 5-ஆம் தேதி அதன் தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்றது. ஆனால் காணமால் போன அனைவரும் முர்ஷிதாபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு சவூதி அரேபியாவை குறித்து ஒன்றும் அறியாதவர்கள். இவ்வருடம் இந்தியாவில் உள்ள 21 மையங்களில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் கோட்டாவிற்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றது, ஆனால் மேற்கு வங்காளத்தில் இருந்து மட்டும் கோட்டவிற்கு கீழே விண்ணப்பங்கள் இருந்ததால் அனைவரும் அனுமதி பெற்றுள்ளனர். எண்ணற்ற விண்ணப்பங்கள் உள்ள இடத்தில் அவர்கள் ஊனமுற்றோர்களா? என்று கண்டறிவது அத்தனை எளிதல்ல’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை பாரளுன்மன்றத்திற்கு கொண்டு வந்த கம்யயூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மொய்னுள் ஹசன் பொறுப்பற்று பாராமுகமாக செயல்படும் தேசிய மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்தியாவின் மத்திய ஹஜ் கமிட்டியை சேர்ந்த மூத்த தலைவர் ஷாகிர் ஹுசைன், இத்தனை எண்ணிக்கையை உடைய ஊனமுற்றோர்ளை பயணிக்க அனுமதி அளித்த மேற்கு வங்காளத்தின் மாநில ஹஜ் கமிட்டி மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இவர்களை பற்றிய வெளியான தகவலின் படி இவர்களில் பெரும்பாலானோர் ஊனமுற்றோர்கள் என்றும், அவர்கள் ஹஜ் விசாவில் பயணிக்க வைத்தது ஹஜ் செய்வதற்காக அல்ல, அவர்கள் ஊனத்தை பயன்படுத்தி பிச்சை எடுக்க வைக்கும் நோக்குடனே ஹஜ்ஜிற்கு அனுப்பட்டுள்ளதாகவும், இதனால் ஹஜ் செய்த முடிந்த பின் இவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டோ அல்லது தலைமறைவாகி இருக்கவோ அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

இது போன்ற தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கவே, ஹஜ் மற்றும் உம்ரா விசாவின் பேரில் நடத்தப்படும் சுரண்டலை தடுக்க கடந்த வருடம் சவூதி அமைச்சகம் அனைத்து ஹஜ் மற்றும் உம்ரா விசாவை வழங்கும் அலுவலகங்களுக்கு மிகவும் வயதான மற்றும் ஊனமுற்றோர்கள் புனித சடங்கை செய்ய திறனற்றவர்கள் என்ற அறிவிப்பை வழங்கி இருந்தது.

புனித யாத்திரிகையின் பேரில் ஊனமுற்றோர்களை வைத்து தொழில் செய்யும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளபட வேண்டும் என்று மத்திய ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாகி ஷாகிர் ஹுசைன் மற்றும் துணை தலைவர் ஹசன் அஹ்மத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எகிப்து:இரண்டாம் கட்ட தேர்தலிலும் வெற்றி இஃவானுக்கே!

கெய்ரோ:எகிப்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின் இரண்டாவது கட்டத்  தேர்தலில்  90 சதவீத வாக்குகளை பெற்று இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமான இஃவானுல் முஸ்லிமீன்- எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகிய  பிறகு தேர்தலில் போட்டியிட ஃப்ரீடம் அண்ட ஜஸ்டிஸ் கட்சியை உருவாக்கியது.  எகிப்தின் ஆட்சியை இஃவான்கள் கைப்பற்றுவார்கள் என அரசியல் நோக்கர்கள் கருதினர்.  கணிப்பு பொய்யாகவில்லை. எல்லா புகழும் படைத்த இறைவன் ஒருவனுக்கே.முதல் கட்ட தேர்தலில்  40 சதவீத வாக்குகளை பெற்ற ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி இரண்டாவது கட்ட தேர்தலில்  60 இடங்களில்  40-யும் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வ பத்திரிகையான அல் அஹ்ராம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு இஸ்லாமிய கட்சியான அந்நூர்  13 இடங்களை கைப்பற்றியுள்ளது.  இடதுசாரி மற்றும் வலசாரி கட்சிகளுக்கு மீதமுள்ள இடங்கள் கிடைத்துள்ளன.
கடந்த நவம்பர்18-ஆம் தேதி முதல் கட்ட தேர்தலிலும்,  டிசம்பர்  14,15 தேதிகளில் நடந்த இரண்டாவது கட்ட தேர்தலிலும் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ள ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.  

ஆனால்,  அடுத்த வருடம் ஜூன் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தல் முடியும் வரை அதிகாரத்தை ஒப்படைக்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய ராணுவ அரசு உள்ளது.  உடனடியாக ராணுவம் அதிகாரத்தை சிவில் அரசிடம் ஒப்படைக்கக்கோரி எகிப்தில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு  வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் உறவு:நான் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது – திக் விஜய்சிங்

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா  ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.
இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில்  செயல்படுகிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின்  செயலாளர் திக்விஜய்சிங் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டர் சமூக  இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் இணைந்து ஹஸாரே  பணியாற்றியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் 1983-ல்  ஆர்.எஸ்.எஸ். பணிகளில் நானாஜியின் செயலராக ஹஸாரே இருந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள ‘நய் துன்யா’ பத்திரிகையின் முகப்புப்  பக்கத்தைப் பாருங்கள்.
ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பு இல்லை என ஹஸாரே மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் கூறுவதை நம்புவதா, இல்லை  பத்திரிகையில் வெளியாகி உள்ள புகைப்படத்தை நம்புவதா? நான் ஏற்கெனவே  கூறியது சரிதான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லியில்  அதிக குளிர் என்பதால் உண்ணாவிரதம் இருக்க மும்பையை ஹஸாரே தேர்வு  செய்யவில்லை. அதிக நிதி திரட்டுவதற்காகத்தான் அவர் மும்பையைத் தேர்வு செய்துள்ளார் என்றும் திக்விஜய் தெரிவித்துள்ளார்.

Saturday, December 24, 2011

ஒ.பி.சி இடஒதுக்கீடு:அரசு தீர்மானம் குறித்து அரசியல் கட்சிகளிடையே முரண்பாடு

அரசு வேலை வாய்ப்புகளில் தற்போதைய 27 சதவீத ஒ.பி.சி(இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) ஒதுக்கீட்டில்4.5 சதவீதம் சிறுபான்மையின மக்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
 
பா.ஜ.கவும்,ராஷ்ட்ரீய ஜனதா தளமும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியும், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் அறிவித்துள்ள ஒ.பி.சி உள் ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவிக்கையில், ’இது வெறும் பெயரளவில் மட்டுமே ஆகும். இடஒதுக்கீட்டின் சதவீதத்தை உயர்த்த வேண்டும்’ என கூறியுள்ளன. அதேவேளையில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசு நடவடிக்கையை வரவேற்றுள்ளது. ’அமைச்சரவையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது’ என அக்கட்சி கருத்து கூறியுள்ளது.

பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான அனந்தகுமார் கூறுகையில், ’அரசு வேலைவாய்ப்பிலும், உயர் கல்வியிலும் இடஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு செய்வது தவறானது. கட்சி இதனை எதிர்க்கும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்கவேண்டும். அவர்கள் சக்திப்பட வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் நிலைப்பாடு’ என அவர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கூறுகையில், ’அரசின் தீர்மானம் ஏமாற்று மோசடி ஆகும். சிறுபான்மையினருக்கு குறைந்த 18 சதவீதம் இட ஒதுக்கீடாவது வழங்க வேண்டும். எனது பரிந்துரை அரசியல் ஆதாயத்திற்காக அல்ல’ என அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில்,லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார்.