Friday, December 9, 2011

பாப்புலர் ஃப்ரண்டை "சிமி" இயக்கத்தோடு தொடர்பு படுத்த உளவுத்துறை முயற்ச்சி

இன்று இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, அரசியல்துறை, உளவுத்துறை என ஒரு துறையையும் விட்டுவைக்காமல் காவித்துறை புகுந்து இருப்பதை நம்மால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் தற்போதைய காலச்சூழ் நிலையில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை எப்படியாயினும் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இது போன்ற துறைகள் தீவிர முயற்ச்சி செய்து வருகின்றன.


பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் கண்ட உளவுத்துறையினருக்கு அவர்களுடைய தலைவர்களான காவித்துறையின் தூண்டுதலின் படி பாப்புலர் ஃப்ரண்டை எப்படியாயினும் தடை செய்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் துவேஷ எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் "ஊடகம்". ஒவ்வொரு முறையும் ஊடகம் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகளை வெளியிடும்போது, இதனை கண்டிக்கும் முகமாக அவர்களை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டால் "எங்களுக்கு இது பற்றி தெரியாது, உளவுத்துறையினர் தான் இந்த செய்தியை பிரசுரிக்க சொன்னார்கள்" என்று ஒற்றை வரியில் முடித்துவிடுவார்கள். இதுதான் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுடெல்லியில் மாபெரும் சமூக நீதி மாநாட்டை நடத்தியது. பல்லாயிரக்கணக்கான பங்கேற்ற இந்த நிகழ்ச்சி இந்திய முஸ்லிம்களின் வரலாற்று சுவடுகளில் அழிக்க முடியாத ஒரு நிகழ்வாய் அமைந்தது. மாநாட்டை நடத்தவிடாமல் சங்கப்பரிவார கூட்டங்கள் எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் இறைவன் அருளால் தோற்றுப்போய் பல்லாயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் புதுடெல்லியில் ஒன்று கூடினர். இதனால கலக்கமடைந்த சங்கப்பரிவாரங்கள் தங்களது அடிவருடிகளான உளவுத்துறையின் உதவியோடு பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

புதுடெல்லியில் ஐபிஎன் கஃபர் என்று சொல்லக்கூடிய நியுஸ் சேனல் ஒன்று உளவுத்துறை தெரிவித்ததாக பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு செய்தியை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஒளிபரப்பியது. இதில் தடை செய்யப்பட்ட இயக்காம "சிமி"யுடன் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது கஃபர் நியுஸ் சேனல்.

ஒளிபரப்பிய செய்தி வருமாறு:

தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் "சிமி" இயக்கத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று கூறிவருகின்றனர். உளவுத்துறை அதிகாரிகளால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது இந்த அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் தேசத்திற்கு விரோதமானது. சிறுபான்மை மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்காக போராடுகிறோம் என்ற போர்வையில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாட்டின்  உளவுத்துறையின் மூத்த அதிகாரிகளால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களது செயல்பாடுகள் நாட்டுக்கே மிகப்பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியது. இவர்கள் நடத்தும் கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் ஏன் பங்கெடுத்தார்? என்பது தான் புரியவில்லை.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் கூர்ந்த ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகளை பயன்படுத்துவது எப்படி? என்பதை கூட தெரிந்து வைத்திருக்கிறார்கள். இத்தகைய பயிற்ச்சிகள் கேரளாவில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பயிற்ச்சி பெற செல்கிறார்கள்.

மக்களிடம் இருந்து நன்மதிப்பை பெறுவதற்காக சில முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது பாப்புலர் ஃப்ரண்ட். வெளிநாடுகளிலிருந்து அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் மாவோயிஸ்டுகளுடனும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பு உண்டு.

பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் தென் இந்தியாவில் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் தனது அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றியுள்ளது. இதனால் புதுடெல்லி மாநகருக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அந்த தொலைக்காட்டியில் செய்தி வெளியாகியது. முலாயம் சிங் ஏன் இவர்களோடு சேர்ந்தார்? என்று தெரியவில்லை என்று வெளியிடும்போதே நமக்கு புரிகிறது சமூக நீதி மாநாடு இவர்களின் உறக்கத்தை கெடுத்துவிட்டது என்று. அல்ஹம்துலில்லாஹ்!

வாசர்கர்களே! இன்று இந்தியாவில் ஃபாசிஸம் எந்தளவிற்கு ஊடுறுவியுள்ளது என்பதை நன்கு உணர்ந்திருப்பீர்கள். இது போன்ற அவதூறு செய்திகளை பரப்புவதினால் பாப்புலர் ஃப்ரண்டை முடக்கிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். எத்துனை தடைகள் வந்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய லட்சிய பயணப் பாதையில் தொடந்து முன்னேறிச் சென்று கொண்டே இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
உங்களுடைய கண்டன குரல்களை பதிவு செய்யுங்கள்.

E mail   :  editor@ibnkhabar.com

SMS     :  51818. 

Address:  Global Broadcast News, Express Trade Tower,
                Plot No. 15-16, Sector-16A, Noida, Uttar Pradesh,
                India - 201301

Phone  : +91-120-4341818, 3987777

Fax    :   0120-4324106

No comments:

Post a Comment