Monday, December 12, 2011

யார்? யாரோடு?

இன்றைய பத்திரிகை செய்திகளை படித்ததில்  உறுத்தலான சில விடயங்களை குறித்து உங்களோடு ஒரு பகிர்வு.

செய்தி 1: கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய யாத்திரையை பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்டார்.

அத்வானிக்கு  பதில்:  ஐயா
! பயங்கரவாதி அத்வானி! நீங்கள் நடத்திய இரத்த யாத்திரையினால் ஓட்டப்பட்ட இரத்தங்கள் இன்னும் காயவில்லை எதை மறைக்க இப்படி ஒரு நாடகம். 

உங்கள் பாரதிய ஜனதா ஆட்சி செய்த கர்நாடகாவில் நடந்த ஊழல்கள் அளவுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்தில்லை மக்களின் மறதியை வைத்து வசதியாக மறைக்க பார்க்கிறீரா.

செய்தி 2 :
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சிக்கு பதில்: மதவாதம் பேசி தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கும் இரத்தவெறி பிடித்த ஹிந்த்துதுவா இயத்தை சார்ந்தவர்களே! உங்கள் கேரளா ஆர்.எஸ்.எஸ். இயக்கமும், பாரதிய ஜனதா இயக்கமும் உங்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தருமா? இல்லையே அவர்கள் எல்லாம் முல்லை பெரியாரை உடைக்க அல்லவா ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செய்தி 3: லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் ரஜினியின் முழு உருவ மெழுகு சிலை வைக்க வேண்டும் என்று ரசிகர்கள்  கோரிக்கை விடுத்து  உள்ளனர்.

ரஜினி ரசிகர்களின் கோரிக்கைக்கு பதில்: 12 கோடி மக்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் மக்களே உங்களுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையை உடைக்கவும் புதிய அணையை கட்டவும்  கேரள சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது .  

இது தெரியாமல் ரஜினிக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என்று கோரும் மானம் கெட்ட தமிழா! உன் கர்நாடகத்து ரஜினிகாந்த் காவிரி பிரச்சனையில் எப்படி அந்தர் பெல்டி அடித்தார் என்பது மறந்து விட்டதா?
 

செய்தி 4: ஐஸ்வர்யாராய்க்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. மேலும் குழந்தை பிறப்பு காரணமாக அவரது உடல் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க ஐஸ்வர்யா ராய் முயற்சி: உடலை அழகுப்படுத்த பயிற்சி.

பத்திரிக்கைகளுக்கு பதில்: அட மானம் கெட்ட  நாளிதழ்களே உங்களுக்கு பேச வேற செய்திகள் இல்லை. குஷ்புக்கு கோவில், ரஜினிக்கு மெழுகு பொம்மை,
ஐஸ்வர்யாராய் உடலை அழகு படுத்துகிறார், அட மானம் கெட்டவர்களே மக்கள் பிரச்சனைகளை எழுதுங்கள் அதைவிட்டு பத்திரிக்கையை நிறைக்க ஏன் இந்த அம்மண வேலை.

செய்தி 5 :
கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசும் போது கேரள மக்களின் உணர்வுகளை தமிழகம் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

கேரளா முதல்வருக்கு பதில்:
 கேரளா தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரை, நெய்யார் அணை, புத்மநாபபுரம் கோட்டையில் பெரும் பகுதி, அங்கே கட்டப்பட்டிருந்த பழம் பெரும் தமிழ் மன்னர் அரண்மனை . சேங்கோட்டைத் தாலுகாவில் பாதி, தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தமிழர்களால் கட்டப்பட்ட முல்லை-பெரியாறு அணை இவை அனைத்தும் தமிழர்களுடையது. இவற்றை நீங்கள் வஞ்சகமாக களவாடி கொண்டீர்கள் நாங்கள் மறக்கவில்லை வரலாற்றை. இவை அனைத்தையும் நீங்கள் சீக்கிரம் திருப்பி கொடுக்க வேண்டி வரும் என்பதை முதலில் நினைவில் நிறுத்துங்கள்.

செய்தி 6: இலங்கையிடம் பயிற்சிபெற இந்திய ராணுவத்துக்கு அழைப்பு. தில்லிக்கு வந்துள்ள இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய இந்திய ராணுவத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு பெற்று வருகிறார். 


அத்துடன் இந்தியாவின் முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார்.யுத்த தந்திரங்கள் தொடர்பாக இலங்கை ராணுவத்தினர் பெற்றுக் கொண்ட அனுபவங்களை இந்தியாவோடு பகிந்து கொள்ள விரும்புவதாக அவர் குறிபிட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா ராணுவத்திற்கு பதில்:
இலங்கை பயங்கரவாத ராணுவம் இந்திய பயங்கரவாத ராணுவத்திற்கு பயிற்சி கொடுகிறார்கலாம் வேடிக்கையான செய்தி. பயங்கரவாதம் செய்வதில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.  


இந்தியா ராணுவத்திற்கு பல முகங்கள் உண்டு. அமைதிப்படை என்கிற ஆக்கிரமிப்பு படை, சத்திஷ்கர் பழங்குடி மக்களை கொன்றுகுவிக்கும் பயங்கரவாத படை, காஷ்மீர் மக்களை கொல்லும்
நாசகார படை, தமிழக மீனவர்களை இலங்கை பயங்கரவாத படைக்கு காவு கொடுக்கும் சதிகார  படை, இப்படி பல நல்ல முகங்கள் உண்டு. இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து பயிற்சி எடுத்து உலகை அழிக்கவா! உலகம் தாங்காது!

பார்பனர்கள் ஹிந்துதுவாவோடு, தமிழகத்தை அண்டிப்பிழைக்கும் கர்நாடக நடிகர்கள் கர்நாடகாவோடு, நாயர்கடை, சினிமாத்துறை மலையாளிகள் எல்லாம் மலையாளிகளோடு,
இந்திய ஹிந்தி ராணுவம் இலங்கை ராணுவத்தோடு தமிழா நீ மட்டும் போலி தேசபக்தி பேசி ஹிந்திகாரனோடு உறவாடி தமிழர் குடி கெடுக்கிறாய், உன்தலையில் நீயே மண்ணை வாரி போடுகிறாய்  என்பதை புரிந்து கொள். விழித்துக்கொள்.
 

 தமிழா! உணர்வு கொள்! உறுதி பெறு! போலிகளை கண்டு ஏமாறாதே! உனக்கென்று ஒரு இலட்சியம் உண்டு. உனது இலட்சியத்தை உணர்ந்து அதில் பயணி.

No comments:

Post a Comment