காரைக்கால் நகராட்சியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் இணைந்து காரைக்கால் மாவட்டத்தில் பரவி வரும் கொசுக்களை ஒழிக்கும் முகமாக டிசம்பர் 21,22 ஆகிய இரு தினங்களில் காரைக்கால் மாவட்ட நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் பொது நலன் கருதி கொசு ஒழிப்பு பணியினை சிறப்பாக செய்தனர். இதன் துவக்கமாக நகராட்சி ஆணையர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காரைக்கால் மாவட்ட தலைவர் ஹஸன் குத்தூஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களும் நகராட்சி ஊழியர்களும் ஒன்று இணைந்து கொசு ஒழிப்பு பணியினை மிகச் சிறப்பான முறையில் செய்தனர். இது பொது மக்களிடையே ஆக்க பூர்வ வரவேற்பினை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment