Thursday, December 15, 2011

தமிழர்களின் எழுச்சியும்! ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்!

1) சென்னையில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு விரைந்து நடவடிககை எடுக்க வேண்டும்.  

பசு வதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து  மாநில பொதுச் செயலாளர் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமையில் இந்து மகாசபாகாரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விமர்சனம்: 1 
அட பாவிகளா! மொத்த தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும், அறிஞர் பெருமக்களும், எதிர்க்கும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை இந்த காவி கயவர்கள் திறக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 

கூடங்குளம் அணுமின்நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஆறுமுகநேரி தாரங்கதாரா கெமிக்கல்ஸ், இப்படி மனிதனை கொல்லும் நச்சு தொழில்சாலைகளில் இருந்து மனிதனை  பாதுகாக்க மனித வதை தடுப்பு சட்டம் கொண்டு வருமாறு கேட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது.

அதை விட்டு விட்டு மனசாட்சி இல்லாத ஹிந்துத்துவா மிருகங்கள் (மிருகவதை)  பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாட்டிறைச்சி ஏழை, எளிய மக்களின் உணவு. பெரும்பான்மையான மக்கள்  உணவாக சாப்பிடும்  பொருளை கடவுளாக ஆக்கி வைத்தால் என்ன செய்ய முடியும்.  உலகம் முழுவதும் இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளை எப்படி தடுத்து நிறுத்த போகிறார் திருவாளர் ஸ்ரீ. 
2) இந்து முன்னணி மண் சட்டி ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம்: நெல்லை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக ஹெல்மெட் அணியாத நூற்றுக் கணகானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இதில் போலீசார் ஒருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய. சில இடங்களில் கண்டும் காணாமலும் நடந்து கொண்டனர். 
 

இதனால் அதிருப்தியான நகர இந்து முன்னணியினர் பாரபட்சமில்லாமல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். விதிவிலக்கு என்றால் அதனை அனைத்து தரப்பினருக்கும் தரப்படவேண்டும் என வலியுறுத்தி மாவட்டத் தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஹெல்மெட்டிற்கு பதிலாக மண் சட்டியை கவிழத்திக் கொண்டு பைக்கில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விமர்சனம்: 2
 
அட நம்ம இந்து முன்னணி கோட்டான்கள்! போலீஸ் ஒருசார்பா நடந்ததால் சீறி சினம் கொண்டு எழுந்துவிட்டார்கள்! இராமநாத புரத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேர்வரை செத்தார்களே எங்கே போனீர்கள் ஓ! அவர்கள் தலித் மக்களாச்சே! திருக்கோவிலூர் போலீஸ் பொறுக்கிகள் ஐந்து பெண்களை  காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று  பாலியல் வன்புணர்வு செய்தார்களே அப்போது ஏன் கொதித்து எழவில்லை ஓ! அவர்கள் பழங்குடி மக்களாச்சே!  

முல்லை பெரியார் (இன்று இருபதாயிரம் தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார்கள்) தமிழக மீனவர் பிரச்சனை என்று தமிழர்கள் சினம் கொண்டு ஆர்ப்பரிக்கும் இந்த வேளையில் இந்த கோமாளிகள் ஒரு சப்பை மேட்டருக்கு மண் சட்டியியை தலையில் அணிந்து ஆர்ப்பாட்டம்!  செய்து நாங்கள் தமிழர்கள் இல்லை என்பதை நிருபித்துள்ளனர்.

தமிழர்கள் நடத்தும் போராட்டம் மனிதர்களுக்காக வேண்டி! ஹிந்துமகாசபா நடத்தும் போராட்டம் மிருகங்களுக்காக (பசு)! வேண்டி. தமிழ் இயக்கங்களுக்கு தலைவர்கள் தமிழர்கள்! ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு தலைவர்கள் பிராமணர்கள்! ஹிந்து முன்னணிக்கு ராமகோபால ஐயர்!, ஹிந்தும்கா சபாவுக்கு ஒரு ஸ்ரீ, பாரதிய ஜனதாவுக்கு ஒரு அத்வானி வாஜிபேயி, இதில் ஒரு தலித், ஒரு தமிழன் தலைவராக வரமுடியாது. இதை தமிழர்கள் புரிந்தால் சரி!

No comments:

Post a Comment