Saturday, December 17, 2011

வெத்து வேட்டு விஜயகாந்து!

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து விஜயகாந்த் பேசியதாவது.

விஜயகாந்த் கேள்வி 1: தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் நமக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.  

ஆந்திராவில் பாலாறு பிச்சினை, கர்நாடகாவில் காவிரி பிரச்சினை, கேரளா மூலம் முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது. இவ்வாறு இருந்தால் தேசிய ஒருமைப்பாடு எவ்வாறு வரும் ?

பதில் : ஐயா!  விஜயகாந்த் அவர்களே! இப்பொழுதுதான்  இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு  என்பது இல்லை என்று தெரிந்ததாக்கும்.  விருதகிரி படத்தில் நீங்கள் ஸ்காட்லான்ட்  யார்ட் போலீஸ்கே பாடம் எடுத்து, பன்ச் டயலாக் பேசிய உங்களுக்கே இந்த நிலைமையா?

எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! எப்படி எல்லாம் வீர வசனம் பேசி தேசபக்தி, ஒருமைப்பாடு என்று கூக்குரல் இட்ட உங்களையே விரக்தி அடைய வைத்து விட்டார்களே. இப்பவாவது உங்கள் தேசபக்தி போதை  தெளிந்த தேசந்தோசம். உண்மையிலேயே தேசபக்தி போதை தெளிந்ததா அல்லது தமிழர்களின் வாக்குகளை பெற நாடகமா?

விஜயகாந்த் கேள்வி 2: மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறதா?

பதில் : என்னையா கேள்வி இது  சின்னபுள்ளதனமா இருக்கு.  வருடக்கணக்கில் தூங்கிகொண்டு இருந்தீங்களா? இவ்வளவு நாளா என்ன நடக்கிறது என்று தெரியாமல் புதுசா கேட்கிறீங்கள்.  

நல்லா இருக்கையா உங்கள் வேஷம். உங்கள் படத்தில் ரொம்பவும் புள்ளி விபரம் எல்லாம் சொல்லி மக்களை அசத்துவீன்களே! ஓ! அதுவெல்லாம் வெத்து  வேட்டுன்னு சொல்லுங்கள்!  

மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது பாமர மக்களுக்கும்
இப்பதான் உங்களுக்கு புரிந்ததாக்கும்... மக்கு மக்கு... உங்களையெல்லாம் கொண்டு போயி எதிர் கட்சி தலைவன் ஆக்கினாங்களே அந்த மக்களை சொல்லணும்.

விஜயகாந்த் கோரிக்கை 1: அணை பிரச்சினையில் தீர்வு காண நதிகளை இணைக்க வேண்டும். இதை மத்திய அரசே முன் வந்து செய்ய வேண்டும்.

பதில்: ஐயா! விஜயகாந்த் அவர்களே! நதிகளை இணைக்க முடியும் என்று நினைக்கும் உங்களின் அறியாமையை என்னவென்று சொல்ல. தமிழன் இளிச்சவாயன்! அதனால் தமிழர்களிடம்தான் மத்திய அரசின் ஏமாற்று
வேலையெல்லாம் பலிக்கும்.  

இந்தியாவில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி அதில் காவிரியை இணக்கப் போறோம் என்று சொல்லுங்கள் அப்போ தெரியும் உங்களுக்கு கர்நாடகாகாரன் யார்? என்று. தமிழகம் என்கிற ஒரு மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கவே இத்தனை கலாட்டா செய்யும் இவர்கள் தேசிய நதி நீர் திட்டத்திற்கு ஒத்து கொள்வார்களா? இது உங்களுக்கும் தெரியும் இருந்தாலும் மேக்கப் இல்லாமல் நடிக்கிறீங்கள்.

விஜயகாந்த் கோரிக்கை 2: தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

பதில்:  சும்மா அரசியல் காமடி பண்ணாதீங்கள் சார்! ஈழத்திலே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டு பதவி சுகம், ஆட்சி அதிகாரம்  என்று இருந்த அரசியல் பொறுக்கிகள் ஒரு தண்ணீர் பிரச்சனைக்கா கவா பதவியை துறப்பார்கள்!  உங்கள் பேச்சு வேடிக்கையும், விநோதமுமா இருக்கு. சும்மா இந்த பிலீம் காட்ற வேலையெல்லாம் வேண்டாம்.

தேவையில்லாத கேள்விகளையும், கோரிக்கைகளையும் வைத்து தமிழர்களின்  உண்மையான எழுச்சியை திசை திருப்ப வேண்டாம்.  தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழர்களிடம் ஏற்ப்பட்டுள்ள எழுச்சிக்கு வலு சேருங்கள். இதிலும் அரசியல் ஆதாயம் தேடாமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள். தமிழ் மக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தின் அவசியத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். தமிழர் எழுச்சி ஓங்கட்டும்! தனி தமிழ் நாடு என்ற முழக்கம் ஒலிக்கட்டும்.

No comments:

Post a Comment