Saturday, December 3, 2011

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன் என்று அணைவரிடமும் மனைவியிண் தலையை காட்டியபடியே காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார் ராஜா. (செய்தி நக்கீரன் இணையத்தளம்).

சிந்திக்கவும்: இதுதான் இவர்களது பத்திரிக்கை தருமத்தின் இலட்சணம். பத்திரிக்கை துறை என்பது மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை, அரசு பயங்கரவாதங்களை, ஊழல்களை தாட்டி கேட்கவும், அதேநேரம் மக்களுக்கு பயன்படும் செய்திகளை சொல்வதுமாக இருக்க வேண்டும்.

நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றன
ர்.

தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பெரும் செய்தியாக்கி, அவன் மனைவியின் தலையை வெட்டி கொண்டு போவதை படமாக போட்டு அதற்க்கு ராயல்டி வேறு கேட்கிறார்கள் மானம் கெட்டவர்கள். இதில் வேறு நெற்றி கண் துறப்பினும் குற்றம் குற்றமே என்று ஏதே நக்கீரன் பரம்பரையில் வந்தவர்கள் போல் அடைமொழிவேறு.

வெட்டப்பட்ட மனைவியின் தலையை பலகோணங்களில் படம்பிடித்து அதன் நடுவே நக்கீரன் என்று எழுதி அதை பத்திரிக்கையில் போட்டு வியாபாரம் செய்யும் மனிதநேயம் கொன்ற பித்தர்கள்.
முன்பு  வீரப்பனை வைத்து கதை சொல்லியே காலம் ஓட்டினார்கள், இடையில் சீனாவில் நரமாமிசம் தின்றவர்கள் படத்தை இன்டெர் நெட்டில் இருந்து எடுத்து வைத்து கொண்டு அந்த படத்தின் நடுவில் நக்கீரன் என்று  எழுதி அதற்க்கு ராயல்டி  கேட்டவர்கள்தான் இவர்கள்.

அதுபோல் சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறை காட்சி விடியோகளை போட்டு அதற்க்கு பணம் கட்டினால் முளுவிடியோவும் காட்டுவோம் என்று சொல்லி விளம்பரபடுத்தி அதன்மூலம் பணம் சம்பாதித்தார்கள். தேர்தல் நேரம் வந்து விட்டால் இவர்கள் போடும் கூத்து இருக்கிறதே எழுதிக்கொண்டே போகலாம். இந்த எல்லா கீழ்த்தரமான வேலைகளை செய்து கொண்டு அதற்க்கு ஒருபடி மேலே போயி இந்த   தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா பேசி  மதகலவரங்களை உண்டாக்கி வருகின்றன.


இதன் இவர்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்.  மனைவி கெட்டு போனால் அவளை வெட்டி கொலை செய்யுங்கள் என்று சொல்லவருகிரார்களா, இல்லை பெண்களே!  ஜாக்கிரதையாக  இருங்கள்! என்று மிரட்டுகிறார்களா? ஏதோ ஒரு பெண் அப்படி செய்து விட்டால் என்பதற்காக அதை பெரிய செய்தியாக்கி பெண்களை அவமானப்படுத்தும் ஒரு வேலையை இந்த பத்திரிக்கைகள செய்திருக்கின்றன. பெண்களை கெடுத்து நாசமாக்கும் இந்த ஆண்வர்கத்தை வெட்டி கொல்ல வேண்டும் என்று பெண்கள் நினைத்தால் தினம் தினம் பல்லாயிரக்கணக்கில் ஆண்களை கொல்ல வேண்டி வருமே.

அதேபோல் தமிழ் சினிமாக்களும் பெண்களை இழிவு படுத்துவதில் முதன்மையாக திகழ்கிறது. சமீபத்தில் வெளிவந்த நானே சிவன் படம் தொடர் கொலைகளை பண்ணும் ஒரு சைகொவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  அதில் தன அம்மா கெட்டு போனால் அதனால் இதுபோல் உள்ள பெண்களை எல்லாம் தேடி திரிந்து கொலை செய்வானாம் கதாநாயகன்.பொது நலம் இல்லாத மனோ வியாதி பிடித்த சைகோ வெல்லாம் பத்திரிக்கை துறையிலும், சினி துறையிலும் வந்ததன் விளைவுதான் இவையெல்லாம்.  

ஒழுக்கம் என்பது ஆண், பெண் இருசாராருக்கும் பொதுவானது. ஏதோ ஆண் தவறு செய்தால் அவன் ஆண்பிள்ளை சகதியை கண்டால் மிதிப்பான் தண்ணியை கண்டால் கழுவுவான் என்று ஒரு பழமொழி வேறு சொல்லிக்கொண்டு பெருமையாக அதை செய்வது. பெண்கள் என்றதும் கற்ப்புக்கரசி! கண்ணகி! என்று ஒரு வரையறை, கணவனே கண்கண்ட தெய்வம்! இப்படி சொல்லி அவர்களை அடிமைபடுத்தி வைத்திருப்பதோடு அல்லாமல் இப்படி கண்டமாதிரி கற்பு விசயங்களை சொல்லி தூற்றுவது. பெண்களை தூற்றும் இவர்களுக்கெதிராக பெண்களே! ரவுத்திரம் பழகுங்கள். 
*மலர்விழி*

No comments:

Post a Comment