Saturday, December 31, 2011

7 இந்திய மாநிலங்களில் விவசாயத் திட்டத்தை துவக்குகிறது இஸ்ரேல்

விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதற்கும் மத்தியக்கிழக்கில் பயங்கரவாத நாடாக திகழும் இஸ்ரேல் இந்தியாவில் கால்பதிக்கிறது. ஏழு மாநிலங்களில்
2012-ஏப்ரல் மாதம் விவசாய திட்டத்தை துவக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
 
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மஹராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தில் இத்திட்டத்தின் தலைவர் யஹேல் விலன் அறிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம் விவசாயப்பொருட்களின் விளைச்சலை அதிகரிக்கவும் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுப்பதும் ஆகும் என யஹேல் தெரிவித்துள்ளார். 

இத்திட்டத்தின் கீழ் 30க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள்(project) உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த யஹேல், ஏற்கனவே குஜராத், ஹரியானா மாநிலங்களில் ஒரு சில செயல்திட்டங்களில் இஸ்ரேல் ஒத்துழைக்கிறது என கூறினார்.

No comments:

Post a Comment