Wednesday, July 20, 2011

நெல்லை மண்டலம் சார்பில் சுதந்திர அணிவகுப்பு கலந்தாய்வு கூட்டம்

                    வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடைபெற இருக்கிறது.ஆகையால் நெல்லை மண்டலம்  சார்பில் சுதந்திர அணிவகுப்பு எவ்வாறு கொண்டாடுவது  சம்பந்தமாக என் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் மேலப்பாளையம் ராஜ் மகாலில் வைத்து நடைபெற்றது.

            இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட செயலாளர் ஹைதர் அலி முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன் தலைமை தாங்கினார் ,சிறப்பு விருந்தினாராக மாநில தலைவர் முஹம்மத் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு சுதந்திர அணிவகுப்பின் அவசியத்தை பற்றி தெளிவுரை ஆற்றினார்கள்

         மேலும் அவர் கூறுகையில் சுதந்திரம் பெற்று 63 ஆகியும் இன்று முஸ்லிம்களுடைய தியாகத்தை மக்கள் மறந்துவிட்டனர்.மேலும் முஸ்லிம் என்றாலே பிரிவினைவாதிகள்,தீவிரவாதிகள் என் பொய் பட்டம் சுமத்துகின்றனர் .ஆனால் உண்மையில் சுதந்திரதிற்கு அதிகம் போராடினது முஸ்லிம்கள்தான் அவர்களுடைய தியாகத்தை மக்கள் மறந்து விட்டனர் மேலும் இன்று நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் சுதந்திர போராளிகள் ஆகிவிட்டனர்.மேலும் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் அல்ல உண்மையான தியாகிகள் அவர்களுடைய் தியாகத்தை போற்றும் வகையில் வருட வருட சுதந்திர அணிவப்பு கொண்டடி வருகின்றோம்.


         அதன் ஒரு பகுதியாக இந்த வருடம் அணிவகுப்பு நெல்லையில் நடை பெற இருக்கிறது .இந்த அணிவகுப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்கிறோம் என்று தம் உரையில் கூறினார் .இறுதில் நெல்லை மாநகர தலைவர் மூஸல் காலிம் நன்றி உரை ஆற்றினார்

No comments:

Post a Comment