Friday, July 15, 2011

ஆந்திராவில் நான்கு சக்கர தள்ளு வண்டி வழங்கியது - பாப்புலர் ஃப்ரண்ட்

            பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு பணிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஏழை எளிய மக்களுக்கும், காய்கறி மற்றும் பழம் வியாபாரிகளுக்கும் நான்கு சக்கர தள்ளு வண்டியை இலவசமாக விநியோகம் செய்துள்ளது. சுய தொழில் தொடங்குவதற்கு உதவியாக இவ்வாறு விநியோகிக்கப்பட்டது. நெல்லூர், கர்னூல், யெமிஞ்சூர், அதோனி மற்றும் நன்டியால் போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டது.

             கடந்த மாதம் 27ம் தேதி அன்று கர்னூல் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நான்கு சக்கர தள்ளு வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திகழ்ச்சிக்கு ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது மற்றும் தேசிய செயலாளர் யாசிர் ஹஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                           யாசிர் ஹஸன் உரையாற்றும்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் இது போன்ற சமூக மேம்பாடுகளுக்கான பணிகளை தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளித்தார்.மாநிலத்தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது அவர்கள் கூறும்போது ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கவுன்சிலிற்கு இன்னும் எண்ணற்ற சமூக மேம்பாடு திட்டங்கள் இருக்கிறது என்றும், வரக்கூடிய காலங்களில் மருத்துவமனை வசதிகள் இல்லாத கிராமங்களில் சிறு மருத்துவமனை அமைப்பதும், மருத்துவ முகாம்கள் நடத்துவது, இரத்ததான சேவையை அதிகப்படுத்துவது, ஏழை மக்களுக்கு வட்டியில்லா சிறு கடன் உதவித்தொகை வழங்குவது போன்ற எண்ணற்ற திட்டங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேற்கூறிய சேவைகளை நிறைவேற்றுவதற்காக வரக்கூடிய ரமழான் மாதத்தில் அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் நன்கொடைகளை பெறுவதற்காக சமூகத்தின் செல்வந்தர்களை சந்திப்பார்கள் என்று கூறினார்.

நன்றி: popularfrontindia


No comments:

Post a Comment