Monday, July 25, 2011

தாருல் உலூம் (தியோபந்த்) மதரஸாவின் பொறுப்பிலிருந்து குலாம் வஸ்தான்வி நீக்கம்!

                  தியோபந்த்: இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க, பிரபல இஸ்லாமிய மதரஸாவான "தாருல் உலூம்"மதரஸாவில் இதுவரை மூத்த ஆசிரியராகவும், அமீராகவும் செயல்பட்டு மெளலானா குலாம் வஸ்தான்வி அவர்கள் தான் வகித்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மதரஸாவின் உயர் மட்ட குழுவான "மஜ்லிலே சூரா" கடந்த ஞாயிற்றுகிழமை ஒன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. 
              குலாம் வஸ்தான்விக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 3 உறுப்பினர் கொண்ட குழு தங்களது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.இந்த செய்தி வெளியிடப்பட்டதும் உடனடியாக கடும் கோபத்துடன் வஸ்தான்வி மதரஸாவிலிருந்து வெளியேறியுள்ளார். மதரஸாவிலுள்ள் குறிப்பிட்ட சில நபர்களின் சதியின் காரணமாகவே தான் நீக்கப்பட்டதாகவும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை முழுவதுமாக சமர்பிக்கப்படவில்லை என்று வஸ்தான்வி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.  
               மதரஸாவில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய சில நபர்களை அடையாளப்படுத்த இந்த அறிக்கை தவறிவிட்டது என்றும் வஸ்தான்வி கூறியுள்ளார். நான் எனது பொறுப்பிலிருந்துதான் நீக்கப்பட்டுள்ளேன் எனினும் நான் அக்குழுவின் உறுப்பினராக உள்ளேன் என்று கூறினார்.

                         கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குஜராத் முதல் மந்திரியை வஸ்தான்வி அவர்கள் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தை நல்ல முன்னேற்றமான பாதையில் எடுத்துச்செல்வதாகவும் அவர் கூறி இருந்தார். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அப்போதே மதராஸாவின் உயர் மட்டக்குழு ஒன்று கூடி வஸ்தான்வி அவர்களை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தது. அப்போது வஸ்தான்வி அவர்கள் அக்குழுவின் உறுப்பினர்களிடம் தன்னை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டாம் என்றும் தானே விலகி விடுவதாகவும் கூறி இருந்தார். ஆனால் அவர் கூறியது போல் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்று கூறினார். இதனால் மீண்டும் அக்குழு ஒன்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இனி வரும் காலங்களில் மெளலானா அப்துல் காசிம் நோமனி, வஸ்தான்வி வகித்த  பொறுப்பிலிருந்து செயல்படுவார் என அக்குழு தீர்மானித்துள்ளது.
 
நன்றி : துறைமுகம் - பாபுலர் பிரண்ட்

No comments:

Post a Comment