Wednesday, August 31, 2011

தூக்குதண்டனையை எதிர்க்கும் தமிழர்கள்! ஆதரிக்கும் ஆரியர்கள்!

தூக்கிலிட ஆதரவு: 1 . முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இவர்களை தூக்கில் போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.

செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்குமேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது. மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்’’ அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


தூக்கிலிட ஆதரவு: 2 . இந்து முன்னணி தலைவர் பயங்கரவாதி ராமகோபாலன் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்படியானால்தான் எதிர் காலத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை யாரும் செய்ய பயப்படுவார்கள்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்: தமிழகம் முழுவதும் இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் இந்த சூழலில், இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மட்டும் அதை பகிரங்காமாக ஆதரித்து கருத்து சொல்லி வருகிறார்கள். தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க கோரி இளம் பெண் ஒருவர் தீக்குளித்து இறந்து போனார் என்பது இதில் வருத்தத்தோடு கவனிக்கப்பட வேண்டியது. இப்படி தமிழகமே இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் போது கைபர்போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய வந்தேறி கூட்டத்தை சேர்ந்த ராமகோபால ஐயரும், சுப்பிரமணிய சுவாமி ஐயரும் இவர்களை தூக்கில் போடவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.

அறிஞ்சர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் இவர்கள் ஆட்சிகாலத்தில் தூக்குதண்டனை வழங்கப்பட்ட கைதிகளை அதில் இருந்து விடுவித் துள்ளனர். இப்படி ஒருசிறப்பான முன்னுதாரணம் இருந்தும் தமிழக முதல்வர் ஆரிய வழிவந்த பார்ப்பன ஜெயலலித்தா தனக்கு அதிகாரம் இல்லை என்று சட்டசபையில் பேசி இருக்கிறார். தமிழர்களே ஒன்றுபடுங்கள்! மத மாச்சாரியங்களை கடந்து தமிழர்கள் என்ற முறையில் ஒன்றுபட்டு இந்த அநீதியை எதிர்ப்போம். இவர்களை விடுவிக்க இளம் பெண் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளார் அவரது கனவை தமிழர்கள் நினைவாக்க பாடுபடவேண்டும்.
நட்புடன் - மலர்விழி.

Monday, August 29, 2011

கிரீன் டீ புற்று நோய்க்கு அருமருந்து!

கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது. அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். "சா' என்ற சொல்லிலிருந்தே சாயா.

பச்சைத்தேயிலை சாயாவுக்குத் தொடக்கம் சீனாவாக இருந்தாலும், அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற நிலைக்குக் கொண்டுபோய்விட்டது.  இதன் வரிசையில் மலை மாவட்டமான நீலகிரியில் பிரதானத் தொழிலான தேயிலைத் தொழிலில் முதலிடத்தில் இருப்பது பசுந்தேயிலை. அதேபோல, தேயிலை வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது பச்சைத்தேயிலை.

பசுந்தேயிலை என்பது தேயிலைத்தூள் உற்பத்திக்காக தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கப்படும் கொழுந்து. இதைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி தேயிலைத்தூளாகத் தயாரிக்கப்படும். ஆனால், பச்சைத் தேயிலை என்பது தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கும் கொழுந்தை அப்படியே உலர வைத்து பின்னர் பயன்படுத்துவது.  பச்சைத்தேயிலை அதிக அளவில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பயன் என்ன தெரியுமா?

புற்று நோய்க்கு அருமருந்து. கலிபோர்னியாவிலுள்ள ஜான் வெயின்ஸ் புற்றுநோய் மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சரவணன் மேற்கொண்ட கிரீன் டீ குறித்த ஒரு ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. ""கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி எனப்படும் (Epi Gallo Catechin Gallate) பொருள் மிகச்சிறந்த மருத்துவ நிவாரணி என்பதால் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு பிரதானமானது.

மார்பகப் புற்று நோய்க்கும் , கல்லீரல் புற்றுநோய்க்கும் மிகச்சிறந்த மருந்து பொருளாகவும் கிரீன் டீ பயன்படுகிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதே இதன் முக்கிய வேலை.  இந்தப் பச்சைத் தேயிலையை சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் உலகளவில் மற்ற நாட்டினரைவிட புற்றுநோய்க்கு ஆளாவது சீனாவிலும் ஜப்பானிலும் மிகவும் குறைவு. 

சீன போர்ப்படை வீரர்கள் யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிரீன் டீயைப் பருகிவிட்டுத்தான் போர்க்களத்திற்கே செல்வார்களாம். அந்த அளவிற்கு இது வலிமை மிக்க பொருளாகவும் கருதப்பட்டு வந்தது. கிரீன் டீ பருகுவதால் தோல் விரைவில் சுருக்கமடையாது என்பதோடு , இளமையுடனும், வனப்புடனும் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமென்பதே சீனர்களின் வாதம். அத்துடன் கிரீன் டீயில் இயற்கையாகவே புளோரைடு எனப்படும் பொருள் அமைந்துள்ளது.

பற்பசைகளில் புளோரைடுக்காக கூடுதல் விலையைக் கொடுத்து வாங்கும் நிலையில் இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் இது பற்களுக்கும் பாதுகாப்பானதாகும். உடலில் உணவுப்பொருள் ஜீரணத்திற்கு முக்கியமானதான கிரீன் டீயில் உள்ள டாக்சிஜன்ட் தன்மை, குடலிலுள்ள சிறு துகள்களைக்கூட அகற்றும் வல்லமை கொண்டதாகும்'' என்கிறார் சரவணன். சீனாவிலிருந்து சென்ற புத்தமதத் துறவிகளால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை பின்னர் இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று பயிரிடப்பட்டது.

அங்கு பகல் உணவின்போது பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குடிக்கும் டீயை ஹை டீ எனவும், மற்ற நேரங்களில் களைப்பிற்காகவும், புத்துணர்வுக்காகவும் குடிக்கும் டீயை லோ டீ எனவும் அழைக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 1610ம் ஆண்டுகளில் தேநீர் என்பது பணக்காரர்களின் பானமாகவே கருதப்பட்டது. அப்போது 1 பவுண்டு தேயிலை 100 டாலருக்கு விற்கப்பட்டதாக வரலாறே உள்ளது.

Thursday, August 25, 2011

பாபர் மசூதி இடிப்பில் கரசேவர்களுக்கு ஹவால பணம்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கரசேவகர்களை அழைத்து வந்தது யார்? மசூதியை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர்.

சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 15-ந் தேதி இந்த விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ள சி.பி.ஐ, விரைவில் பாபர் மசூதி இடிப்பு பின்னணியில் உள்ள சில தகவல்களை வெளியிடும் என்று தெரிகிறது.
குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. எந்த நாட்டில் இருந்து யார் மூலம் அந்த ஹவாலா பணம் வந்தது? மசூதியை இடித்த கரசேவகர்களுக்கு அந்த பணம் எப்படி பட்டுவாடா செய்யப்பட்டது? என்பன போன்ற தகவல்களை சி.பி.ஐ. கசியவிடும் என்று தெரிகிறது.  
சி.பி.ஐ. தன் முதல் தகவல் அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங், உள்பட 48 பேர் பெயரை குறிப்பிட்டுள்ளது. லிபரன் கமிஷன் 68 பேரின் பெயர்களை கூறியுள்ளது. அவர்களை பற்றி மீண்டும் சி.பி.ஐ. தகவல்களை திரட்டுவதாக தெரிகிறது.

Monday, August 22, 2011

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?

 
வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் - இது தத்துவம். என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?

1876 பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பஞ்சம்...
சுரண்டி பை நிரப்பிய வெள்ளையனுக்கு கொடுக்க மனமில்லை. 1.03 கோடி இந்தியர்கள் பட்டினி மரணம்..
பஞ்சநிவாரண பலனாகக் கிடைத்தது பக்கிங்ஹாம் கால்வாய் !! எந்த ஆங்கில சிப்பாயும் இந்தியப்பெண்களை வன்புணர்வு செய்யவில்லை..

1947 ல் சுதந்திரம் கிடைத்தது..
பிரதமர் கொடியேற்றினார்..
1966 சுதந்திர இந்தியாவில் பீகார்பஞ்சம்
1968 கூலிகேட்டால் சொர்க்கம்கிடைக்கும் ,
கீழ்வெண்மணியில் 44 உழைப்பாளிகளுக்கு சொர்க்கபதவி..
மறந்துட்டோம்..

1997 ல் சுதந்திர பொன்விழா
பிரதமர் கொடியேற்றினார்,
மிட்டாய் தின்றோம் கைத்தட்டினோம்
இருநாட்டு அரசியல்சகுனிகளின் சூழ்ச்சியில் கார்கில்யுத்தம்
செத்தவன் சகோதரன்...தெரியாமல் கொண்டாடினோம் வெற்றியை..
மார்தட்டி சென்ற இளைஞன் சவப்பெட்டியில் திரும்பினான்..
அதிலும் ஊழல் செய்தார்...மறந்து...? மன்னித்துவிட்டோம்..

தொடர்ந்த பொன்விழா ஆண்டுசிறப்பாய்..
கூலிகேட்டவர்க்கு சொர்க்கம் கொடுக்கும் கொள்கைப்படி 1999 தாமிரபரணி சம்பவம் அட...மறந்தே போனோம்..!! 2000 மில்லேனியம் 21 ம் நூற்றாண்டு..குஜராத்தை கொளுத்தி கொண்டாடினார் அரசியல் சதுருக்கு அண்ணன் தம்பி பலி..அக்கா தங்கை சூறையாடல் மறந்துட்டோம்...ஆமா மறந்துட்டோம்..

தோணியில இந்தியா கொடிகட்டி கடல்ல இரங்கற நம்ம தமிழ் மீனவங்களை கொத்துக்கொத்தாக் கொன்னுப் போடுவான் தமிழனைக் கொன்னழிக்கிற சிங்கள இராணுவத்துக்கு நம்மஊருல விருந்தும்பயிற்சியும்.. சுதந்திர இந்தியன் மறந்துடுவான்... மறந்துட்டீங்கல்ல.. அதேதான் மறந்துடுங்க..

பீரங்கி , புண்ணாக்கு ,பொறம்போக்கு, அட திட்டலப்பா ..
ஏற்றுதி..  இறக்குமதி, சவப்பெட்டி, ரயில் பெட்டி, ஓட்டுப் பெட்டி, ஸ்பெக்ட்ரம்,  சுதந்திர இந்தியா சாதனை படைத்த ஊழல்கள்!! மறந்துட்டோம்ல...ஆமாமா மறந்துட்டோம்..!!

2011 ஆகஸ்ட் 15 , பிரதமர் கொடியேற்றினார்
மிட்டாய் தின்றோம்...கைத்தட்டினோம்
2020 ல் ஆப்ரிக்காவை எட்டிப்பிடிப்போம் பட்டினிச்சாவில்..!!
உலகின் வீடில்லாதோர் பட்டியலில் ஆறாமிடம் நமக்குத்தான் !!
பெண்கள் வசிக்க ஆபத்தானநாடுகள் பட்டியல்ல மூன்றாமிடம் நமக்கேதான் !! மறந்துடுவோம்..........?
ரௌத்திரம் பழகு
யாழினி

Friday, August 19, 2011

தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து சென்னையில் ஆர்பாட்டம்

இந்தியாவின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூரிந்திடவும் போராடிபெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாடங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.

ஆனால் இவ்வருடம் தமிழகத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்து நீதிமன்றத்தை அனுக வாய்ப்பு தராமல் அனுமதி மறுத்துள்ளது காவல்துறை மற்றும் தமிழ அரசு. இந்த உரிமை மீறலையும் சிறுபான்மை விரோத போக்கையும் கண்டிக்கும் வகையில் 17.08.2011 (புதன்கிழமை) மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மு.முஹம்மது இஸ்மாயில் (மாநில துணைத்தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்) கூறும்போது சுதந்திர தினத்தன்று நாடே கோலாகலத்தில் இருக்கும் போது அந்த சுதந்திர தினத்தை கொண்டாடக்கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது மாபெரும் அநீதியாகும் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது "200 ஆண்டுகள் ஆடாக வாழ்வதை விட 2 நாட்கள் புலியாக வாழ்வதே மேல்" என்று முழங்கிய திப்பு சுல்தானின் வாரிசுகள் நாங்கள், சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை அதை எவர் பறித்தாலும் அனுமதிக்கமாட்டோம் என்பதை நாங்கள் பதிவு செய்ய விரும்புகின்றோம் என்று கூறினார்.


இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு சமுதாய தலைவர்களும், பொதுமக்களும், பெண்களும் பெருந்திறலாக கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

தமிழகம் முழுவது நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்

முஸ்லிம் சிறுபான்மை மக்களின் சுதந்திர தின கொண்டாடத்தை தடை செய்த தமிழ அரசு மற்றும் காவல்துறைய கண்டித்து மாநிலம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 
கோவை
 பழனி
 
தஞ்சை
திருச்சி

மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை: ஆகஸ்ட் 16ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை அவமதித்து, சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

 
சுதந்திர தின அணிவகுப்பு கொண்டாட்டங்கள் நடக்க வேண்டிய மேலப்பாளையத்தில் கடந்த செவ்வாய்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவிம், நேஷன் விமன்ஸ் ப்ரண்டின் மாநில துணைத்தலைவரி பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினார். ஆண்கள் பெண்கள் என திரளான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்தின் இந்த அராஜக போக்கினை கண்டித்து கண்டன குரல் எழுப்பினர்.

Monday, August 15, 2011

பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை: இந்திய தேசத்தின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மண்ணடியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைமையகத்தில் வைத்து தேசியக்கொடி ஏற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 65வது சுதந்திர தினக்கொண்டாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஒவ்வொரு மாவட்டம் சார்பாக அந்தந்த அலுவலகங்களில் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மண்ணடியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டச் செயலாளர் சகோதரர் முஹம்மது ஷாஹித் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.


தனது உரையில் இந்திய சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் செய்த தியாக வரலாற்றை எடுத்துக்கூறியும், தற்போது ஆதிக்கவர்க்கங்களால் அந்த உண்மை வரலாறு மறைக்கப்பட்டு வருவதையும் தெளிவாக எடுதுக்கூறினார் இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றிடவும் நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் மீண்டும் தனி வாக்காளர் தொகுதிகளை (இரட்டை வாக்குரிமை)அமைக்க கோரியும் சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் துணை அமைப்புகளான இசுலாமிய சனநாயகப் பேரவை, சமூக நல்லிணக்க பேரவை சார்பாக வரும் டிசம்பர் 11 -ல் சென்னையில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற உள்ளது. இதை விளக்கி “மாபெரும் கருத்தரங்கம்” சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஜுலை 30- ல் நடைபெற்றது. 
 இமாம் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, முஸ்லிம் லீக்கை சேர்ந்த எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி, SDPI ன் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
         இதில் சிந்தனையாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

"அராக்ஷன்" திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும்

ஹிந்தி நடிகர் அமிதாப் தயாரித்து நடித்துள்ள‌ அராக்ஷன் திரைப்படத்தில் அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ள தலித்கள் அனைத்து  துறைகளிலும் முன்னேறும் வகையில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.

இதன் காரணத்தால் உத்திரபிரதேசம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப்பின்பற்றி சமூக போராட்டத்தின் பிறப்பிடமான தமிழகத்தில் இத்திரைப்படத்திற்குத் தடை விதிக்குமாறு தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ யின் தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். 

மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்

ஈமானின் ஃபர்லுகளில் ஒன்று மறுமை நாளை நம்புவது. இன்று நாம் வாழ்கின்ற உலகம் ஓரு சோதனைக் கூடம், இது நிரந்தரம் அல்ல. இந்த உலகம் ஓரு நாள் அழிக்கப்படும். பின் மறுமை நாள் என்று ஒன்று உண்டு. அதில் நாம் இந்த உலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றார் போல் இறைவன் தீர்ப்பு வழங்குவான். நன்மை தட்டு கனத்தவர்களுக்கு சுவர்க்கமும், தீமைத்தட்டு கனத்தவர்களுக்கு நரகமும் வல்ல இறைவனால் சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறுமை நாளின் வாழ்க்கையே நிரந்தரமானது. சுவர்க்க வாதிகளும், நரக வாதிகளும் அதில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டால்தான் நாம் ஈமானில் பரிபூரணப்பட்டவர்கள் ஆவோம். இன்று மக்களிடத்தில் நன்மையை ஏவினாலோ அல்லது தீயசெயல் ஒன்றை தவிர்க்கச் செய்தாலோ எளிதாக அவர்கள் நாவிலிருந்து உதிக்கும் சொல்.. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் பாய்! என்பது தான். மறுமை நாள் வருவதற்கு இன்னும் பல 100 ஆண்டுகள் மீதமிருக்கிறதா? அல்லது 100 ஆண்டுகள் வாழ உத்திரவாதம் ஏதும் பெற்றிருக்கின்றோமா?


அல்லாஹ் தனது திருமறையில் மறுமையின் காரியம் இமை மூடித் திறக்கும் நேரத்திற்குள் அல்லது அதைவிட சமீபமாகவே தவிர இல்லை. நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையோன். (அல்குர்ஆன் - 16:77)



மேலும் மறுமை நாளின் நெருக்கத்தைப் பற்றி மாநபி (ஸல்) அவர்கள் கூறும் போது,

 
நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம் என்று தனது சுட்டு விரலையும, நடு விரலையும் இணைத்துக் காட்டி கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

நன்மையைப் புறக்கணித்து தீயச் செயலில் ஆர்வங்காட்டிக் கொண்டிருக்கும் தோழர்களே! மறுமை நாள் வெகு தொலைவில் இல்லை! 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெகு நெருக்கத்தில் உள்ளதென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நாமோ 1400 ஆண்டுகளையும் கடந்து வந்து விட்டோம். நாம் நன்மையை செய்ய முனையும் போது அல்லது தீமையைத் தடுக்க முனையும் போது ஷைத்தானின் உந்துதலில் நம் உள்ளம் நமக்குச் சொல்லும் போலியான ஆறுதல் வார்த்தை என்னவெனில், நமக்கு இன்னும் வாழ்நாள் மீதம் இருக்கிறது எல்லாத் தீமைகளும் செய்து முடித்துவிட்டு கடைசியில் ஒட்டு மொத்த தவ்பா செய்து கொள்வோம்... என்பதுதான். இந்த கணமே மறுமை சம்பவித்து விட்டாலோ! அல்லது மரணம் நம்மைத் தழுவிக் கொண்டாலோ! நம் நிலை என்ன?


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும் பொழுது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் முன்னுமே இறை நம்பிக்கை கொண்டிராத அல்லது நல்லமல்களை முற்படுத்திக் கொள்ளாத எந்த ஓர் மனிதனின் நம்பிக்கையும் பலனளிக்காது. (ஆதாரம் : புகாரி)

அதாவது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சலில் காலம் தாழ்த்தி மறுமை சம்பவிக்கும் போது ஈமான் கொள்பவரின் நம்பிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் கால அவகாசம் நமக்கு கிடைக்காது. மறுமை சம்பவத்தின் ஆரம்பம் முதல் சூர்(எக்காளம்) ஊதப்படுவது தான். உடனே மனிதனை மரணம் தழுவிக் கொள்ளும்.


அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்..

மேலும் சூர் ஊதப்படும், பின்னர் பூமியில் மற்றும் வானத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூர்ச்சையாகி வீழ்ந்து விடுவார்கள். அல்லாஹ் நாடியவரைத் தவிர. இரண்டாம் சூர் ஊதப்பட்டதும் பார்ப்பவர்களாக எழுந்திருப்பார்கள். (அல்குர்ஆன் : 39:68)

சூர் ஊதப்பட்ட பின் சற்றேனும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது. அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துவிடும். அன்று மனிதனின் நிலை மிகக் கடுமையானதாக இருக்கும்.


மறுமை திடீரென்று சம்பவித்து விடும். அதன் விரைவைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பேர் (விற்பனைக்காக) துணியை விரித்து இருப்பார்கள். அவர்கள் துணியை விற்பனை செய்திருக்கவும் மாட்டார்கள் சுருட்டியிருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும் ஓர் மனிதன் தனது மடி கனத்த ஒட்டகத்தி(ல் பால் கரந்து அப்போதுதா)ன் வீடு திரும்பியிருப்பார். அதை பருகியிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். உங்களில் ஒருவர் உணவை தனது வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதைப் புசித்திருக்க மாட்டார், அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

மறுமை என்றவுடன் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம், ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் பின் வரிசையாக சுவர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ சேர்த்துவிடுவான் என்று. உலகத்தின் நிகழ்வுகளைப் போல தான் இருக்கும் என்றும் எண்ணுகிறோம். அவ்வாறல்ல
அல்லாஹ் தனது திருமறையில்...


மனிதர்களே உங்களுடைய இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மிக்க மகத்தானதாகும். அதனை நீங்கள் காணும் அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை மறந்துவிடுவார்கள். கர்ப்பம் சுமக்கும் ஒவ்வொரு தாயும் தனது சுமையை இறக்கிவிடுவார்கள். மேலும் மதி மயக்கம் கொண்டவர்களாக மனிதர்களைக் காண்பீர்கள். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியவர்களும் அல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (அல்-குர்ஆன் : 22:1-2)


ஆகவே, மறுமை நாளின் அதிர்ச்சியும் கடுமையும் நம் கற்பனைக்கு எட்டாதது. எந்த அளவுக்கென்றால் திக்பிரமை பிடித்து மதி மயங்கியவர்களாக இருப்பர். இன்று நாம் பார்க்கிறோம் நமது உடன் பிறந்தவர்கள், தாய், தந்தை பாசத்திற்குறிய பச்சிளம் குழந்தைகள் நம்மை விட்டு மரணிக்கின்ற பொழுது துக்கம் தாங்கவில்லை. அழக் கூட முடியாமல் மனம் இறுகி செயல்பாடுகள் ஸ்தம்பித்து, நினைவுகள் உறைந்து பார்த்த வண்ணமே இருக்கின்றோமே! இந்த நிலையைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். இதைவிட மறுமையின் நிலை பல ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும்.

சூரியன் நெருங்கிவிடும். அதன் வெப்பமும், மறுமை நாள் நிகழ்வுகளின் பயமும் மனிதனை பீதியடையச் செய்யும். தீமைகளுக்கேற்றவாறு அதன் கடுமை இருக்கும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (அவர்கள் தலைக்கருகில் சூரியன் நெருங்கி வருவதினால்) வியர்வை ஊற்றெடுக்கும். அவர்களின் வியர்வை தரையிலும் 70 முழம் வரை சென்று பின் உயர்ந்து அவர்கள் வாயை அடைந்து இறுதியாக அவர்கள் காதுகளையும் அடையும்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி)
அல்லாஹ்வின் வேதத்தில் (மறுமை பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது. அது நெருங்கிவிட்டால், நிராகரிப்போரின் கண்கள் திறந்தவாறே இருக்கும். (அப்போதவர்கள்) எங்களுக்கு நேர்ந்த கேடே! திட்டமாக நாங்கள் இதைப் பற்றி மறந்தவர்களாகவே இருந்துவிட்டோம். அதுமட்டுமில்லாது நாங்கள் அநியாயக்காரர்களாகவும் இருந்துவிட்டோம். (எனக் கூறுவர்)
எனவே மறுமை நாளை நம்பாது நிராகரித்துவிட்டவர்களின் நிலை, கண்கள் விழித்தவாறே தாங்கள் செய்த துர்ச்செயலை எண்ணி நொந்து கொண்டவர்களாக பிரம்மை பிடித்தவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் யாவரும் நரக நெருப்பின் விறகுகளே ஆவர்.
(அல்குர்ஆன் : 21: 97,98)


மறுமையை நம்பி இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களின் நிலை சந்தோஷகரமானது.


அல்லாஹ் தன் திருமறையில்... நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடத்திலிருந்து நன்மைகள் முந்தி விட்டதோ அவர்கள் நரகத்தை விட்டு தூரமாக்கப்பட்டவர்கள். அன்றியும் அவர்களின் மனம், தாம் விரும்பியவற்றில் நிரந்தரமாக இருக்கும். (மறுமை நாளில்) மாபெரும் திடுக்கம் அவர்களை கவலைக்கு உள்ளாக்காது. மேலும் மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்த அந்த நாள் இதுதான் (என்று கூறுவர்)
(அல்குர்ஆன் : 21: 101-103)


எனவே மறுமை நாள் நல்லோர்க்கு மிகச் சந்தோஷமான நாளாகும். அவர்கள் இம்மையில் தன் இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவன் மறுமையில் சித்தப்படுத்தி வைத்துள்ள நிரந்தர சுவர்க்கத்தை அடைவதற்கு பேராவல் கொண்டதன் காரணமாக வல்ல இறைவன் அவர்களை சுவர்க்கத்தில் புகச் செய்து அதில் நிரந்தரமாக தங்கச் செய்து விடுவான். அதே நேரம், மறுமையை நம்பாத உலகமே நமக்கு நிரந்தரம், அல்லது பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று போலிச் சமாதானம் கூறியவர்களும், உலகத்தில் சொற்ப இலாபத்திற்காக பணம், காசு, பெண் மோகம் என்று இம்மையை நேசித்து மறுமையில் வல்ல இறைவன் நமக்குத் தரக்கூடிய சுவர்க்கத்தை நிராகரித்து, செய்த தவறுகளுக்கு மறுமையில் நாம் வல்ல இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்படுவோம். 

நிச்சயமாக நாம் செய்த இந்த தீயச் செயலுக்கு பகரமாக மறுமையின் நரக நெருப்புக்கு விறகுகளாவோம் எனும் அச்சமின்றி அதை நிராகரித்தவர்களுக்கு வல்ல இறைவன் மறுமை நாளை கஷ்டமானதாகவும், கடுமையானதாகவும் ஆக்கி அவர்களை நரகத்தில் நிரந்தரமாக தங்கச் செய்துவிடுவான்.


ஆகவே, உலக வாழ்க்கை சொற்பமானதே! அதே நேரம் மறுமை வாழ்க்கை நிரந்தரமானது என்பதை உணர்ந்து, மறுமை நாள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்துவிடும். மரணம் நம் அருகாமையியே இருக்கிறது. மேலும் மறுமையின் நிகழ்வுகள், அதன் வேகம், வீரியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நல்ல அமல்கள் செய்வதிலும், தீமைகளை தாமதிக்காது விட்டுவிடுவதிலும் செய்த தீமைகளை விட்டுவிட்டு உடன் தௌபாச் செய்து இனி இப்பாவத்தை செய்யமாட்டேன், எனச் சபதம் ஏற்போம். இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Thursday, August 11, 2011

சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் புகார் மனு

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் முஸ்லிம்களை இழிவுபடுத்தியும் கட்டுரை எழுதிய சுப்பிரமணிய சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (08.08.2011) பிற்பகல் தமிழக காவல் துறை தலைமை இயக்குனரிடம் (டி.ஜி.பி) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் எம்.முஹம்மது ஷேக் அன்ஸாரி அவர்கள்  புகார் அளித்துள்ளார்கள். அதன் பிறகு அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

"கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி டி.என்.ஏ பத்திரிக்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை துடைத்தெறிவது எப்படி? ஒரு பகுப்பாய்வு" என்ற தலைப்பில் முஸ்லிம்களை இழிவுபடுத்தியும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கட்டுரை எழுதியுள்ளார். அதன் ஒரு சில பகுதிகளை நான் இங்கே கோடிட்டு காட்டுகின்றேன்.

"எந்த ஒரு முஸ்லிம் அவரது மரபு வழி இந்து மதம் என ஒப்புக்கொள்கிறாரோ அப்பொழுது தான் அவரை நாம் அகண்ட இந்து சமூகத்தின் அதாவது ஹிந்துஸ்தானின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள முடியும். ஹிந்துஸ்தான் என்ற பாரதம் இந்துக்களுக்கு சொந்தமானது மற்றும் யாருடைய மூதாதையர்கள் ஹிந்துக்கள் என்று பெருமையுடன் கூறுவார்களோஅவர்களுடையது; யார் இதனை ஏற்க மறுக்கிறார்களோ அல்லது வெளி நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறி பதிவு செய்து கொண்டதன் மூலம் இந்திய குடி மக்களாக ஆனார்களோ, அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க முடியும், ஆனால் அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது (அதாவது. அவர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட மக்கள் பிரதி நிதிகளாக ஆக முடியாது)

ஒரு சிறிய தீவிரவாத தாக்குதல் நடை பெற்றாலும் தேசம் உடனடியாக பெருமளவில் பழிக்கு பழி வாங்க வேண்டும். எடுத்துக்காட்டாக அயோத்தியாவில் உள்ள கோவில் தாக்கப்பட்ட போதும் நாம் அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டி பதிலடி கொடுத்திருக்க வேண்டும்.

காசி விஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள பள்ளி வாசலை அகற்ற வேண்டும்; மேலும் அதைப்போல மற்ற கோவில் அருகில் உள்ள 300 பள்ளி வாசல்களையும் அகற்ற வேண்டும்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; சம்ஸ்கிருதத்தை பாடமாக்க வேண்டும்; வந்தே மாதரம்  பாடுவதை கட்டாயமாக்கவேண்டும்; இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்; அதில் இந்து அல்லாதவர்கலை தங்களுடைய மூதாதையர்கள் இந்துக்கள் என பெருமையுடன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்கள் ஓட்டுப்போட முடியும். இந்தியாவை ஹிந்துஸ்தான் என்ற இந்து நாடாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.உலகில் இந்தியாவிற்கு என்று ஒரு பெருமை உண்டு. பல்வேறு மத, இன, கலாச்சார மொழிகள் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டக்கூடிய அனைவருக்கும் சம உரிமை வழங்க்கக்கூடிய பெரிய மதச் சார்பற்ற ஜனநாயக நாடு என்பதுதான் அது.

ஆனால இவை அனைத்திற்கும் வேட்டு வைக்கக்கூடிய விதமாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இரு சமூகங்களுக்கிடையே வெற்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும், இந்திய தேசத்தில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் மேற்படி கட்டுரையை எழுதியதன் வாயிலாக சுப்பிரமணிய சுவாமி வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆகவே இப்படிப்பட்ட கட்டுரையை எழுதியதன் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 பிரிவு 13(1)(அ) மற்றும் (ஆ), இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 124(அ), 153(அ), 295(அ) மற்றும் 505 ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்தவராகிறார். ஆகவே சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாநில செயலாளர் அன்ஸாரி அவர்கள் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுஃப் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் ஷாஹித் ஆகியோர் உடனிருந்தனர்.

Monday, August 8, 2011

புனித ரமலான்! வாழ்த்தும் யாழினி!

சிந்திக்கவும் இனைய தளத்தின் ஆசிரியர் திரு யாழினி அவர்கள் கூறிய புனித ரமலான் வாழ்த்து செய்தி 

புனித ரமலான் நோன்பினைத் தொடங்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

'ஈதுல்பித்ர்' என்பது பொதுவாக நோன்புப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது.

இது ஏன் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது...?  முழு உலக முஸ்லிம்களும் ஒருமாத காலம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து கொண்டாடும் பெருநாள் இது எனக் கூறப்படுகிறது.


ரமலான் நோன்பு என்பது தன் உடல் வருத்தி ஏழை எளியவரை நினைக்க வைப்பது ஆண்டாள் திருப்பாவையில் ”மையிட்டெழுதோம், மலரிட்டு யாம் முடியோம், செய்யாதன செய்யோம்,  தீக்குறளை சென்றோதோம்” என்று சொன்னது போல் மனிதனை புனிதனாக்க, புற அழகை ஓரந்தள்ளி, அக அழகை அதிகரிக்க செய்ய கடைபிடிக்கும் நோன்பு என்பது புரிய வந்தது நான் வளைகுடா நாட்டில் வசிக்க தொடங்கிய பின்னரே.


மனித வாழ்க்கையில் அகம், புறம் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடுத்ததால் உண்ணாமல் விலகி இருக்கின்றார்களே இப்பயிற்சி பெற்றவர்கள்? அப்படிப்பட்டவர்கள், ""பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' என இறைவன் தடுத்திருக்கையில் அதைச் செய்வார்களா...?


நோன்பு நோற்றவன் மனைவியுடன் சேரக்கூடாது என இறைவன் தடுத்திருக்கிறான். தன் மனைவியையே இறைவன் தடுத்ததால் அப்படித் தொடாமல் பயிற்சி பெற்றவன், ""விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' என இறைவன் தடுத்திருக்கும் நிலையில் அதன் பக்கம் நெருங்குவானா? அப்படி நெருங்க கூடாது என்பதையே இந்த நோன்பின் மூலம் அவர்கள் பெறவேண்டிய படிப்பினை.


நோன்பிருப்போர் செய்ய வேண்டியதைப் பின்வரும் நபிமொழிகள் கூறுகின்றன : ""யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' மேற்கண்ட பொன்மொழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும், தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி பெறுகிறார்.


ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறு, ஆறரை மணிவரை கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல், இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாட்டை நினைவில் நிறுத்திக்கொண்டு பார்த்தால், சுற்றிலும் உணவு புழங்குகையில் இந்த நோன்பை கடைபிடிப்பது அவர்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பது புரியும்.


இஸ்லாமியர்கள் இந்த சிரமங்களுடனே கூட தங்கள் மதக்கோட்பாட்டை கடைபிடிப்பது அவர்களது மன உறுதியையும்,  படைத்த கடவுள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் காட்டுகிறது. அவர்கள் மேல் மரியாதையை கூட்டுகிறது.


ஈதலின் அவசியத்தை உணர்ந்து தன் வருவாயின் சிறு பங்கை வறியோர்க்களிக்க ஈகையை புனிதக் கடமையாய் வலியுறுத்தும் நன்னெறியை அனைவரும் கைக்கொள்வோம். இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை நோன்பு மேற்கொண்டு வரவேற்கும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் .


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். குறள் 229
பொருள், பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
நட்புடன்...யாழினி...

Sunday, August 7, 2011

சுதந்திர தின அணிவகுப்பு : உற்சாகத்தில் மேலப்பாளையம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த மூன்று வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. இந்த வருடம் சுதந்திர தின அணிவகுப்பை மேலப்பாளையத்தில் வைத்து நடத்துவதாக அறிவித்துள்ளது.  

இதனை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A .ஹைதர் அலி அவர்கள் நமது நிருபர்களிடம் கூறியதாவது " சுதந்திரம் என்பது நமது உரிமை அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். நாம் இப்பொழுது 65 -வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம். கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3- ஆண்டுகளாக சுதந்திரதின அணிவகுப்பை நடத்தி வருகிறது. இவ்வருடமும் ஆகஸ்டு 15 ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த தீர்மானித்துள்ளோம்.
 
சுதந்திரப் போரில் ஆணிவராய் இருந்தவர்களையும், போராட்டக் களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூறவேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். உடல் வலிகளையும், உயிர் அற்பணிப்புகளையும், பொருட்படுத்தாது போராடிப் பெற்ற சதந்திரத்தை ஆகஸ்ட் 15 -ல் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் தேச வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட உள்ளத்துடனும் கொண்டாட வேண்டும்.
இவற்றை வெளிப்படுத்திடும் விதத்தில் தான் சுதந்திர முழக்கமிட்டு, வீர நடைபோட்டு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் சீருடை அணிந்து சதந்திர தின அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது. இந்திய வளங்கள் நவீனப் பெயர்களில் அந்நியர்களுக்கு தாரை வார்க்கப்படுவதும், தேச குடிமக்கள் வேலையின்றி அடிமை குடிமக்களாக மாற்றப்படும் அவல நிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஊழலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளும், கடுமையான தண்டனைகளும் அமலாக்கப்பட வேண்டும்.



அரசியலுக்காக தேசத்திற்க்குள்ளேயே குண்டு வெடிப்புகளையும் கலவரங்களையும் ஏற்ப்படுத்தி மாற்றானை குற்றம் சுமத்தி, தேசபக்தி வேடமிட்டு அரசியலில் பிழைப்பு நடத்திவரும் சங்கப்பரிவார பாசிஸ்டுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவு கூர்ந்திடவும், தியாகிகளை கெளரவித்திடமும், இதைக் கண்டு குடிமக்கள் மகிழ்ந்திடவும் போதிய உரிமைகள் வழங்கப்படவில்லை. சுதந்திரத்தின் நினைவலைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கொண்டடி மகிழ்ந்திடும் நிலையை ஏற்ப்படுத்திட மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்புரிந்து வரும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
மக்களின் மகிழ்ச்சிக்கு அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்குமென்றும் நம்புகிறோம். இவ்வருடத்தின் சுதந்திரதின அணிவகுப்பில் வீறு நடைபோட்டு, போர்பரணி எழுப்பி, வீர முரசு கொட்டி நீதியின் போராளிகளாக, சுதந்திரத்தின் பாதுகாவகர்களாக பாப்புலர் பிரான்ட்- ன் 1000 செயல் வீரர்கள் அணிவகுக்க உள்ளனர். சுதந்திர தினத்தை அணிவகுத்து கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
மேலப்பாளையத்தில் நடைபெறும் அணிவகுப்பு ஜின்னா திடலில் தொடங்கி பஜார் வழியாக சென்று ஹாமீம் புரம் 7வது தெருவில் முடியும் என அவர் தெருவித்துள்ளார். மேலப்பாளையத்தில் இதுவரை எந்த ஒரு அணிவகுப்பும் நடந்ததில்லை, தற்போது நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்பு மேலப்பாளையம் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Friday, August 5, 2011

சுப்புரமணிய சாமி என்கின்ற ஃபாஸிஸ்டு...

வேறு எந்த வார்த்தையாலும் சுப்ரமணியன் சுவாமியை வர்ணிக்க முடியவில்லை. கடந்த ஆகஸ்ட் 16 அன்று மும்பையிலிருந்து வெளி வரும் டிஎன்ஏ என்ற நாளிதழில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
 அந்தக் கட்டுரையில், இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற போக்கில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருக்கும் 370 என்ற சிறப்புப் பிரிவை நீக்க வேண்டும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் மசூதியை நீக்க வேண்டும், அது போல 300க்கும் அதிகமாக இந்தியாவில் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை நீக்க வேண்டும், இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுவதை தடை செய்ய வேண்டும், பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஒரு பகுதியை ஆக்ரமிக்க வேண்டும், இந்துக்கள் போர்க்குணத்தோடு மாற வேண்டும், இந்துக்கள் 83 சதவிகிதம் இருக்கும் இந்தியாவில் இந்துக்கள் ஆட்சி நடைபெற வேண்டும் என்று எழுதியிருந்தார். இது போன்ற கட்டுரையை சுப்ரமணிய சுவாமி எழுதுவதற்கான பின்புலம், மும்மையில் நடந்த குண்டு வெடிப்பு.
வெடிகுண்டு வைத்து, அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொலை செய்யும் பாதக செயலைச் செய்பவர்களை நாம் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், இதற்கெல்லாம் காரணம் இசுலாமியர்கள் தான் காரணம் என்று கூறுவது விஷமத்தனமானது.
இந்தியாவில் தீவிரவாதம் பரவ, அதன் வேரில் நீர் விட்டு, வளர்த்தது இந்திய ஆட்சியாளர்கள் தான். காஷ்மீரில், ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதா, பாக்கிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடாக இருப்பதா என்று முடிவெடுக்க, இந்தியா கொடுத்த வாக்குறுதியை அது இன்று வரை நிறைவேற்றவில்லை. 370வது அரசியல் சட்டப் பிரிவு என்பது, காஷ்மீர் மக்களுக்கு அன்றைய பாரதப் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி.
இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் மிகுந்ததற்கு முக்கிய காரணம், 1992ல் நடந்த பாப்ரி மசூதி இடிப்பு. 1991ம் ஆண்டு சோம்நாத்தில் தொடங்கிய அத்வானியின் ரதயாத்திரை இந்தியாவில் தீவிரவாதம் பரவுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இது போன்ற குண்டு வெடிப்புகளால், அப்பாவிகள் உயிரிழப்பதோடு, நின்று விடுவதில்லை. அதற்குப் பிறகு நடக்கும் காவல்துறையின் விசாரணைகளால், எண்ணற்ற முஸ்லீம் குடும்பங்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
ஒரு சிறந்த ஜனநாயக நாடாக, வளர்ந்த பக்குவப்பட்ட மக்களாக வளருவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால் சுப்ரமணியன் சுவாமி செய்யும் பிரச்சாரமானது, ஹிட்லரின் கோயபல்ஸ் செய்யும் பிரச்சாரத்திற்கு நிகரானது.
300க்கும் அதிகமான, கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற கருத்து, மதநல்லிணக்கம் என்ற இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அடி நாதத்திற்கே வெடி வைப்பதாகும்.
ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்குப் பிறகும், முஸ்லீம்கள் தான் காரணம் என்று இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதை, சுப்ரமணியன் சுவாமி போன்ற நபர்கள் செய்து வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் நல்லிணக்கத்தை வளர்க்க உதவாது. மாறாக, இரு பிரிவினருக்கிடையே வன்முறையைத் தூண்டுவதாக மட்டுமே அமையும். குண்டு வெடிப்பினால், சாதாரண மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை வன்முறையாக மாற்றுவதற்கு சுவாமி முயன்றிருக்கிறார்.
இசுலாமியத் தீவிரவாதத்தின் நோக்கம், இந்துக்களை கொல்வது என்று சுவாமி கூறுகிறார். ஆனால், நெருக்கடியான மார்க்கெட் போன்ற இடங்களில் வைக்கப் படும் குண்டு, இந்துக்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. இந்துக்களே இல்லாத, இந்தோனேசியா, நார்வே, அமேரிக்கா போன்ற இடங்களில் கூடத்தானே குண்டுகள் வெடிக்கின்றன ? தீவிரவாதத்துக்கு மதமோ நிறமோ கிடையாது.
சுப்ரமணியன் சுவாமியைப் போன்ற நபர்களே, தீவிரவாதத்துக்கு உரமாக இருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்களால், அமைதி குலைந்து, வன்முறை தாண்டவமாட வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப் படும் குண்டுகளை செய்யும் காரியங்களை, சுவாமி போன்றவர்கள் தங்கள் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் செய்கிறார்கள். இசுலாமியர்கள், இந்தியா இந்துக்களின் நாடு என்பதை ஒப்புக் கொண்டு வாழ வேண்டும் என்பது எத்தகைய விஷமத்தனமான பிரச்சாரம் ?
இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்களான அக்பர் மற்றும் ஷாஜஹானுக்கு மதநல்லிணக்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவே, 1947ல் இந்தியாவில் 75 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருந்தனர். 300 மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற சுவாமியின் கோரிக்கை, சாதாரண இசுலாமியர்களை தீவிரவாதிகளின் பக்கம் கொண்டு சேர்க்காதா ?
கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதைத் தானே சுவாமியின் கட்டுரை நிரூபிக்கிறது ? படித்த படிப்பு ஒரு மனிதனை பண்படுத்தாமல், மற்ற சமூகத்தின் மேல் விஷத்தை கக்குவதை சொல்லிக் கொடுத்தால், அதை விட கல்லாத பாமரன் எவ்வளவோ மேல் அல்லவா ?
இந்தியாவில் இசுலாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்து சாமியார்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வார் டாக்டர்.சுவாமி ?
கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதை கவனமாக பயன் படுத்த வேண்டும். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாம், எழுதி விடலாம் என்பதும், ஜனநாயத்திற்கு மிகுந்த ஆபத்தில் போய் முடியும்.
சுப்ரமணியன் சுவாமியும், அவரின் விஷம் கக்கும் கட்டுரையை வெளியிட்ட டிஎன்ஏ நாளேட்டின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹாவும், வன்மையான கண்டனத்திற்கு உரியவர்கள். சுவாமியின் கட்டுரையைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில, சிறுபான்மையினர் கமிஷன், டாக்டர்.சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
சுவாமி போன்ற நபர்களின் கோயபல்ஸ் வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்கள், வன்மையான கண்டனத்திற்கு உரியன

"19" கூட்டத்தினருக்கு மீண்டும் சவுக்கடி

அஹ்லே குர்ஆன் என்றும் சரணடைந்தோர் என்றும் தங்களை அழைத்துக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் கடும் குழப்பத்தை விளைவித்துக்கொண்டிருக்கின்றனர் ஒரு கூட்டம். குர்-ஆன் 19 எண்ணை கொண்டு தான் அடங்கி இருக்கிறது என்று ஒரு அபத்தமான கணித கணக்கை ஏற்படுத்தி முஸ்லிம் சமூகத்தில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.


அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு வேதியல் ஆசிரியரான "ரஷாத் கலீஃபா" தன்னை ஒரு ரஸுலாக கூறிக்கொண்டு பலரையும் வழி கெடுத்தான். குர் ஆன் மட்டுமே போதும் ஹதீஸ்கள் தேவையில்லை என்றும் அவை அனைத்தும் கற்பனை என்றும் கூறி முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தினான்.


இவனை பின்பற்றி பலரும் தங்களது தூய மார்க்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ரமழான் மாதத்தில் மற்றவர்களைப் போல் இவர்களும் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் தங்களது கொள்கையை ஸஹர் நேரத்தில் பரப்பினார்கள். நம் சமூக மக்களுக்கு இதனை தெரிவித்து ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதிற்கினங்க இன்று முதல் அவர்களது நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!


ஒட்டு மொத்த சமூகமும் ஒன்றினைந்து செயல்பட்டதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழி சும்மாவா சொல்லியுள்ளார்கள்?


ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, August 2, 2011

திட்டுவிளையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பொது மருத்துவ முகாம்

கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்டின் குமரி மாவட்டம் சார்பாக திட்டுவிளையில் பொதுமக்களின் சேவைக்காக பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சகோதரர் ஜுல்ஃபி தலமையில் திட்டுவிளை சகோதரர்கள் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Monday, August 1, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் வருகிறது!

மும்பை: ""மத்திய அரசு கொண்டு வர உள்ள மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பயங்கரவாதி அசோக் சிங்கால் கூறியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, "மத வன்முறைகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்கும் வன்முறைகள் தடுப்புச் சட்ட வரைவு மசோதாவை' தயாரித்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டத்தை இயற்றி, சிறுபான்மையோரை திருப்திபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதன் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள். மத வன்முறை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் நிச்சயம்  இனக் கலவரங்கள் ஏற்படும் போது, இந்துக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை பாய்ச்சவே இந்த ஏற்பாடு.

இந்த சட்ட மசோதாவின் விளைவுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக, நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தேவைப்பட்டால், அரசியல் கட்சிகளின் ஆதரவும் கேட்கப்படும். புதிய சட்ட மசோதா குறித்து, விஸ்வ இந்து பரிஷத் சார்பில், நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். பார்லிமென்ட் கூட்டத் தொடரில், எம்.பி.,க்களை நேரில் சந்தித்து, மத வன்முறை தடுப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என, கேட்டுக் கொள்வோம்.

சிந்திக்கவும்:  இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களால் கலவரம் நடத்தி சிறுபான்மையினரை கொன்று குவிக்க முடியாமல் போகும். அப்படி மீறி கலவரங்கள் நடத்தினால் அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இதனால் தான் வலதுசாரி ஹிந்து தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ். , பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத், மற்றும் அதன் துணை அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் 1925 யில் தொடங்கப்பட்டது. இதன் துணை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து தீவிரவாத இயக்கங்களின் ஊற்று கண் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லலாம். இந்த இயக்கம் தொடங்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் நடத்திய இனக்கலவரங்கள் பல்லாயிரக்கணக்கில் அடங்கும். அதில் குறிப்பிட்டு சிலவற்றை சொல்லலாம்.

அவை,  பாகல் பூர், பீவாண்டி, குஜராத், மும்பை, நெல்லி, ஒரிசா, ரத யாத்திரை என்கிற ரத்த யாத்திரை இவைகளை கலவரங்கள் என்ற பெயரில் சேர்க்க முடியாது  இவை ஒரு இன அழிப்பு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதில் பல்லாயிரக்கணக்கில் சிறுபான்மை மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். இதை நிகழ்த்தியவர்கள் இதுவரை சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்படாததும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தண்டிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவரவே இந்த சட்டம் வருகிறது. அதனாலேயே இத்தனை ஆர்ப்பாட்டமும், எதிர்ப்பும்.

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.
புறம் என்றால் என்ன?
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான்புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.

இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.

மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.

நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18)

என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.

நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)