சென்னை: பூரண மது விலக்கை அமுல் படுத்த
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப்
இந்தியா (SDPI) கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பல்வேறு நகரங்களில் சாலை மறியலில் ஈடுப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பூரண மது விலக்கு கொண்டு வர
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப்
போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திருச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட
SDPIயைச் சேர்ந்த 200 பேர் கைதாகியுள்ளனர். மதுரையிலும்,
மேட்டுப்பாளையத்திலும் போராட்டத்தில் ஈடுப்பட 400 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகமும், பழனியில்
தாலுகா அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது.
அதே போல் கோவை மாவட்ட SDPI கட்சி
சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன் கிழமை காலை 11.00
மணிக்கு முற்றுகைப் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.
முஸ்தஃபா தலைமை வகித்தார். SDPI மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக்
கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பெண்கள், குழந்தைகள், கட்சியின் மாவட்ட
நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட திரளான பொதுமக்கள் இந்த
முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சுமார் 500 பேரை காவல்துறை கைது
செய்தது.
No comments:
Post a Comment