புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த
இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள
குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்தது குர்பானி இறைச்சி. தேச முழுவதும்
ஈதுல் அழ்ஹா என்று அழைக்கப்படும் தியாகத்திருநாளில் குர்பானி
கொடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இறைச்சிகள் அடங்கிய பொட்டலங்களை ரிஹாப்
இந்தியா பவுண்டேசன் விநியோகித்தது.
அஸ்ஸாம் அகதிகள் முகாமில்
தங்கவைக்கப்பட்டிருப்போர் உள்பட மேற்கு வங்காளம், ராஜஸ்தான்,
உத்தரபிரதேசம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 25 ஆயிரம்
குடும்பத்தினருக்கும் தியாகப்பெருநாளில் அறுக்கப்பட்ட குர்பானி இறைச்சிப்
பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக ரிஹாப் பவுண்டேசனின் பொதுச் செயலாளர்
ஒ.எம்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக 2-வது வருடமாக ரிஹாப் ,
தியாகப்பெருநாளில் அறுக்கப்படும் குர்பானி இறைச்சியை விநியோகித்துள்ளது.
இத்திட்டத்திற்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் பொட்டலங்களை உரிய நேரத்தில்
விநியோகித்த தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு ரிஹாப் இந்தியா பவுண்டேசன்
தலைவர் இ.அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment