Thursday, October 13, 2011

இந்தியாவை ஆள்வது ஹிந்துத்துவாவா? ஜனநாயகமா?

மூத்த வழக்கறிஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் உள்ள அவரது அறையில் வைத்து 3  ஹிந்துத்துவா தீவிரவாதிகளால்  தாக்கப்பட்டார்.

ஸ்ரீராம் சேனா  என்ற ஹிந்துத்துவா  பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளால்  இன்று அவர்   கடுமையாகத் தாக்கப்பட்டார்.  பிரசாந்த் பூஷன் மீதான தாக்குதலுக்கு காந்தியவாதி அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சிந்திக்கவும்:  ஸ்ரீராம் சேனா இயக்கம் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைவர் 47 வயதான முத்தாலிக். இவர்  கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தார். தனது 13 வது வயதில்  ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.


2004ம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.  2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டு வெளியேறினார். பின்னர் கர்நாடக மாநில ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான சிவசேனாவின்  தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.  பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் பள்ளிவாசலில் பன்றி இறைச்சியை வீசி அதன் மூலம் கலவரத்தை உருவாக்கியதில் இவருடைய அமைப்பும் ஒன்று.


இந்நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா. இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டினார்.


இவரது ஹிந்துத்துவா சதி திட்டங்களை தெஹல்கா பத்திரிக்கையும்,  ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தின.  பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தாலிக்கும் அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியது. இவரது ஸ்ரீராம் சேனா அமைப்புதான் காதலர் தினத்தில் காதலர்களை துரத்தி பிடித்து வன்முறை செய்தது.


இத்தனை கோரதாண்டவங்களை ஆடிய ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இன்று மூத்த வழக்கறிஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷனை கடுமையாக தாக்கியது. ஹிந்துத்துவா வெறியர்கள் நடத்திய கோரதாண்டவத்தை பார்பன பத்திரிக்கைகள் மூடி மறைகின்றன. ஹிந்துத்துவா இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் தீய சக்தி என்பதை மக்கள் உணரவேண்டும் . இந்தியாவை சுடுகாடாக்க ஹிந்துத்துவா உதவுமே தவிர இவர்களால் இந்தியாவுக்கு எந்த நன்மையையும் இல்லை என்பதை மக்கள் புரிந்து விழிப்படைய வேண்டும்.

No comments:

Post a Comment