ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் சித்திபேட் என்கின்ற ஊரில் சில கயவர்களால் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலை கண்டிக்கும் விதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் இளைஞர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்துள்ளனர். இது தொடர்பாக உடனே நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில அரசை வலியுறுத்துகிறது.
கடந்த சனிக்கிழமை 8ஆம் தேதி அன்று துர்கா சிலை வழிபடுதலின் போது சில வகுப்புவாத சக்திகளால் திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் காலையில் அந்த பகுதி முஸ்லிம்கள் தெருவோரங்களில் குர்ஆனி பக்கங்கள் கிழிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். முந்தைய இரவில் நடந்த பண்டிகையின் போதுதான் சில கயவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொண்ட முஸ்லிம்கள், நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில பொதுச்செயலாளர் டி.எஸ். ஹபீபுல்லாஹ் அவர்கள் கூறும்போது சில முஸ்லிம் இளைஞர்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்று சொல்லி கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குர்ஆன் அவமதிக்கப்பட்டதையும் அதே சமயம் நீதிக்காக போராடிய மக்களை தடியடி நடத்தி கலைத்ததையும் வன்மையாக கண்டிக்கிறது என பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஹபீபுல்லாஹ் தெரிவித்தார். நீதி, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்ற மாநிலத்தில் பேணப்படுவதற்கு முதலைமைச்சர் கிரண் குமார் ரெட்டி தவறிவிட்டார். இதே போன்ற செயல்கள் அடோனியிலும் நடைபெற்றதன் மூலம் தெளிவாகிறது.
அத்வானியின் நடத்த இருக்கின்ற ரதயாத்திரையை முன்னிட்டு வகுப்புவாத சக்திகள் பதற்றத்தை ஏற்படுத்தவே இவ்வாறு செய்துள்ளனர். அத்வானியின் ரதயாத்திரை அக்டோபர் 19ம் தேதி அன்று இந்தப்பகுதியில் வர இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாநில அரசு உடனே தலையிட்டு உடனே நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது." இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment