Saturday, October 1, 2011

சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் நாளை முதல் துவங்குகிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் டெல்லியில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க விழாவை சமூக நீதிக்காக போராடிய  தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதன் தொடக்க பிரச்சாரம் ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் நாளை நடக்க இருக்கிறது.
 
ஐதரபாத் சார்மினார் அருகே உள்ள கில்வத் திடலில் வைத்து தொடக்க பிரச்சார நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதிக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரை நிகழ்த்தப்படும்.

ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் ஊடக தொடர்பாளர் அப்துல் லத்தீஃப் அவர்கள் கூறும் போது "மக்களுக்கு எதிராக, தேசத்திற்கு எதிராக‌ செயல்பட நினைக்கும் அனைத்து தீய சக்திகளுக்கு எதிராகவும், அதே சமயம் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வலிமைக்காக முன் நின்று போராடக்கூடிய ஒரு சமூக இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவாகும்".
 

எல்லா மக்களுக்கும் சம் நீதி கிடைக்கவேண்டுமானால் மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மாநாட்டிலும் சரி அதற்கு முன்பு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரத்திலும் சரி மக்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு கொடுக்கப்படும். "நீதியால் தேசத்தை புணரமைப்போம்" என்ற கோஷத்தின் அடிப்படையில்  சமூக நீதி மாநாடு நடைபெறும்" இவ்வாறு லத்தீஃப் கூறினார்.
ஆந்திர மாநிலத்தலைவர் ஆரிஃப் அஹமது அவர்கள் கூறும்போது தொடக்க பிரச்சார நிகழ்ச்சிக்கு பின்பு மாநில செயற்குழு கூட்டம் பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் எடுத்துசெல்லும் முகமாக பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரங்கள், சுவர் விளம்பரங்கள், தெருமுனைக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment