நில ஆக்கிரமிப்பு புகாரில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் பாரதிய ஜனதா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜாமீன் மறுத்தது. இதையடுத்து எடியூரப்பாவை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது.
போலீசில் கைது செய்யப்படுவதை தவிர்க்க லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் எடியூரப்பா சரணடைந்தார். சரணடைந்த அவரை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட கைதி எண்: 10462.
சிந்திக்கவும்: கிழிந்தது லம்பாடி லுங்கி என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஹிந்துத்துவா சங்கபரிவாரின் அரசியல் முகமான பாரதிய ஜனதா ஊழலை ஒழிக்க போவதாக இந்தியா முழுவதும் தம்பட்டம் அடித்து இந்தியாவிலேயே தாங்கள்தான் கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொய்களை புனைந்து வந்தது. கார்க்கில் போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்த பெரிச்சாளிகள்தான் இவர்கள் என்பது நாடறிந்த உண்மையே. இருந்தாலும் இயல்பாக மக்களுக்கு இருக்கும் மறதியை நம்பியே இவர்கள் பிழைப்பு ஓடுகிறது.
இந்நிலையில் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய பத்திரிக்கைகளோ தங்கள் பணியை மறந்து அல்லது ஹிந்துத்துவா ஆதரவு கொண்டு செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன. பாச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடியான பாரதிய ஜனதா கட்சியின் ஊழல்களை திட்டமிட்டு மறைகின்றன. எடியூரப்பா பற்றி எழுதும் போது பாரதிய ஜனதாகட்சியின் முன்னாள் முதல்வர் என்று எழுதாமல் எடியூரப்பா என்று மட்டும் எழுதி, இவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல பதவிகள் வகித்தவர் என்ற செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன. இதுதான் பத்திரிகை தருமமோ.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்களும், கண்டதுக்கும் கவர்ஸ்டோரி போடும் பத்திரிக்கைகளும் ஹிந்துத்துவா சம்மந்தப்படும் செய்திகள் வரும் போது அதை பூசி மொழுகி மறைக்கப் பார்கின்றனர் அல்லது எங்கோ ஒரு ஓரத்தில் அடையாளம் தெரியாத சிலர், அல்லது நம்பப்படுகிறது என்று செய்தி போடுகின்றன. இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் என்ற உண்மை முதல், சிலநாட்களுக்கு முன் ஸ்ரீராம் சேனா நடத்திய வெறித்தாக்குதல் வரை இவைகளைப் பற்றி தலையங்கமாக, கவர்ஸ்டோரியாக செய்திகளை வெளியிட பெரும்பான்மை பத்திரிக்கைகளுக்கு ஏனோ மனம்வரவில்லை.
இதே நேரம் சிறுபான்மை சமூகத்தினர் பற்றி எழுதும்போது உண்மைக்கு மாறாக தங்கள் கற்பனை திறனை எல்லாம் ஒன்றுசேர்த்து தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அந்த மதத்தின் பெயரை கொண்டு கற்பனை குதிரைகளை பறக்க விடுகின்றன. இது என்ன நியாயம்! தவறு யார்? செய்தாலும் தவறுதான், பயங்கரவாததிற்கு மதமில்லை, என்பதை புரிந்து பத்திரிகை தர்மம் என்பது எல்லாவிதமான அதர்மங்களுக்கும் எதிரான போர் என்பதை சம்மந்தபட்டவர்கள் உணரவேண்டும். அதுபோல் தங்கள் சார்ந்து உள்ள மதத்தினர் செய்யும் தீவிரவாதம் குறித்து மவுனம் காப்பது ஒருவகையில் அந்த தீவிரவாததிற்கு துணைபோவதே ஆகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் நாடு நலம்பெறும். இல்லையேல் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இன்மை ஏற்ப்படும் போது விளைவுகள் விபரீதமாக போகும். சம்மந்தப்பட்டவர்கள் நடுநிலையோடு புரிந்தால் சரி.

No comments:
Post a Comment