தமிழகத்தில் செயல்படும் சில ஊடகங்கள் நானும் என்னுடைய சகாக்களும் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி சமீபத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளது. நானோ என்னுடைய சகாக்களோ யாரையும் ஏமாற்றவுமில்லை, பைத்துல்மாலுக்கு (பொதுச்சொத்து) எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தியதில்லை. இத்தகைய அவதூறான செய்திகள் என்னையும் என்னுடைய சகாக்களை மட்டுமல்லாது ஒட்டு மொத்த கட்சியின் தொண்டர்களையும் பெறும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. எனவே இதன் அடிப்படையில் இவ்வழக்கின் உண்மை நிலவரத்தை விளக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் வர்த்தக ரீதியாக சிறந்து விளங்க்கக்கூடிய கோவை மாநகரத்தில் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகப்பெரும் கலவரம் மூண்டது. இதில் 19ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 70 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் ஃபாசிஸ காவி வெறியர்களால் காவல்துறையினரின் துணையோடு சூறையாடப்பட்டது. அதுவரை தமிழகத்தில் அந்த அளவிற்கு ஒரு கலவரம் நடைபெற்றதில்லை என்று கூறலாம். அச்சமயத்தில் கலவரத்தால் வீட்டை இழந்த, குடும்பத்தை இழந்த மக்களுக்காக உதவ வேண்டும் என்ற அடிப்படையில் சென்னையைச்சேர்ந்த மூன்று செல்வந்தர்கள் முன்வந்தார்கள். நிஜார் அஹமது, ஜி.எம். ஷேக் மற்றும் நல்ல முஹம்மது கலஞ்சியம் ஆகிய மூவரும் சேர்ந்து கோவை முஸ்லிம்களின் நிவாரணத்திற்காக ஒரு டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்தனர். முழுக்க முழுக்க கலவரத்தால் பாதிக்கப்பட்ட கோவை மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த டிரஸ்ட் முறையாக பதிவு செய்யப்பட்டு வங்கி கணக்கும் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்வந்தர்களை சந்தித்து வசூல் செய்யப்பட்டது. அவ்வாறு வசூல் செய்யப்பட்ட பணத்தை முறையாக வங்கி கணக்கில் போடப்பட்டு முறையாக கணக்கு வழக்குகள் சரிபார்த்து வரப்பட்டது. அதே போன்று வெளி நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடமும் வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த டிரஸ்டிற்கு வேறு எந்த வெளிநாடு அரசாங்கத்திடமிருந்து பணம் வந்ததில்லை, அவ்வாறு வாங்கியதுமில்லை.
அப்போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பா.ஜ.க அரசின் பிரதமர் வாஜ்பேயி இந்த டிரஸ்டின் மீது இரண்டு வழக்குகளை தொடுத்திருந்தார். ஒன்று வருமான வரி வழக்கு மற்றொன்று சி.பி.சி.ஐ.டி தொடுத்த வழக்கு. இவ்விரு வழக்கிலும் வேண்டுமென்றே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக்கத்தின் (தமுமுக) தலைவராக இருந்த என்னையும் பொதுச்செயலாளராக இருந்த ஹைதர் அலியையும் மேற்கூறிய மூன்று நபர்களோடு சேர்த்தது. தமுமுகவிற்கும் கோவை மக்களுக்காக தொடங்கப்பட்ட டிரஸ்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1998 மற்றும் 1999 களில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஃபாசிஸ கட்சியான பா.ஜ.கவுடன் திராவிட கட்சியான தி.மு.க தமிழகத்தில் கூட்டணி வைத்தது. அப்போது திமுகவிற்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தை தமுமுக மேற்கொண்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அரசு எங்களை மட்டுமல்லாது எங்கள் இயக்கத்தில் சிலரையும் இந்த வழக்கில் சிக்கவைத்தது.
வருமாண வரித்துறையினர் கோவையில் தங்களது விசாரணையை மேற்கொண்டனர். யார் யாரெல்லாம் இந்த டிரஸ்டின் மூலம் நிவாரண உதவி பெற்றார்களோ அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக விசாரணை செய்யப்பட்டார்கள். நிவாரண உதவித்தொகை பெற்றவர்கள் உண்மையில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தானா? அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பண காசோலை முறையாக அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டதா? கோகுல கிருஷ்ணன் கமிஷனின் பரிந்துறைப்படி அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கு நிவாரண உதவி கிடைத்ததா? என்பது வரை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் வருமாணவரித்துறையினர் கொடுத்த அறிக்கை Tribunal Bench B Chennai I.T.A. No.4(Mds) /2003 படி நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்பட்டது என சான்றழித்தனர்.
சி.பி.ஐ அதிகாரிகள் எங்கள் ஐந்து பேர் மீதும் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கின் தீர்ப்பாக நானும் பொதுச்செயலாளர் ஹைதர் அலியும் கோவை கலவரத்தால பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக தொடங்கப்பட்ட டிர்ஸ்ட் இயங்குவதற்கு தமுமுக அலுவலகத்தில் வைத்து இயங்குவதற்கு அனுமதி கொடுத்தோம் என்றும் மற்ற மூன்று நபர்கள் மீதும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளிலிருந்து பண உதவி பெற்றதாக கடந்த செப்டம்பர் மாதம் 30, 2011 அன்று குற்றம் சுமத்தப்பட்டது. இருந்த போதிலும் செஷ்சன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதி அவர்கள் கடந்த செப்டம்பரில் கொடுத்த தீர்ப்பில் எங்களை பொதுமக்களை ஏமாற்றியவர்கள் என்றோ பொதுச்சொத்துக்கு பங்கம் விளைவித்தவர்கள் என்றோ கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இது முழுக்க முழுக்க அந்த டிரஸ்ட் கணக்கு வழக்கில் ஏற்பட்ட சிறு குளறுபடி தானே தவிற வேறில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டதும் அவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த டிரஸ்ட் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெறாததே இந்த பிரச்சனைக்கு காரணம். மற்றபடி பத்திரிக்கைகள் கூறுவது போன்ற எந்தவொறு தவறான செயலகளும் இதில் நடக்கவில்லை. செஷன்ஸ் நீதிமன்றத்தில் கண்டிப்பாக இந்த வழக்கில் வெற்றி பெறுவோம். இவ்வாறு தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நன்றி: டூசரிகில்ஸ்
தமிழில்: முத்து

No comments:
Post a Comment